Published:Updated:

`மக்கள் ஆதரவு இல்லாததாலேயே தி.மு.கவின் இந்தி எதிர்ப்புப் போராட்டம் கைவிடப்பட்டது!' - வானதி சீனிவாசன்

`வேலூர் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி வெற்றியை நூலிழையில் தவறவிட்டது. ஆனால் வருகின்ற விக்ரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் விடமாட்டோம்' என்கிறார் வானதி சீனிவாசன்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி திருச்சி உறையூரில் நடந்த கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்துக்காக திருச்சி வந்திருந்தார்.

முன்னதாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன் கூறுகையில், ``நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மிகப்பெரிய பொருளாதார நடவடிக்கையாக கம்பெனிகளுக்கு கார்ப்பரேட் வரி குறைத்துள்ளார். இதனால், பல்வேறு நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி மதிப்பு கூட்டப்பட்ட வரிகுறைக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாகப் பங்குச்சந்தை உயர்ந்துள்ளது. இதன்மூலம் வேலைவாய்ப்பு பெருகும். சிறுகுறு தொழில்நிறுவனங்களின் பாதிப்பைச் சீர்செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

ஜாப் ஆர்டர்களுக்கான ஜி.எஸ்.டி.,வரியினை 5 சதவிகிதமாக குறைக்கவேண்டும் என்கிற கோரிக்கை மாநில அரசிடமும் விடுக்கப்பட்டு, தற்போது ஜிஎஸ்டி கூட்டத்தில் 12 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ஜாம் ஆர்டர் தொழில் புத்துயிர்பெற்றுள்ளது. இதேபோன்று வெட்கிரைண்டருக்கான ஜி.எஸ்.டி வரியும் 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளதால், தமிழகம் போன்ற தொழில் மாநிலங்களில் தொழில்களுக்கு ஆரோக்கியசூழல் ஏற்பட்டுள்ளது.

`2,56,414 வாக்காளர்கள்; 36 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை!' - நாங்குநேரி இடைத்தேர்தல் அப்டேட்

நடைபெற உள்ள இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி எந்தவித முடிவும் எடுக்கவில்லை. இதுகுறித்து விரைவில் முடிவெடுப்பார்கள். கட்சி நடைமுறைகள்படி தமிழக பா.ஜ.க தலைவர் விரைவில் அறிவிக்கப்படுவார். எந்த பிரபலங்களாக இருந்தாலும் எங்கள் கட்சிக்கு வாருங்கள் என்றுதான் அழைக்கிறோம்.

மத்திய அரசைக் காங்கிரஸ் கட்சியினர் விமர்சிக்கத் தகுதியற்றவர்கள், பொருளாதாரம் மிக மோசமானநிலைக்குப் போனதற்கும், விவசாயம், சிறுகுறு தொழில்கள் பாதிப்பு முழுக் காரணமே அவர்கள் எடுத்த கொள்கை முடிவே காரணம்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

எல்லா நாடுகளிலும் பொருளாதார நெருக்கடி இருந்துவருகிறது. பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களின் முயற்சியால் வெளிநாட்டில் பாதிப்பு இருந்தாலும், இந்தியா பாதிக்காதநிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சிறு குறு பெரு நிறுவனங்களின் வளர்ச்சியை முன்னிறுத்தியே செயல்படுகிறார். நேரடியாகத் துறை சார்ந்தவர்களை அழைத்துப் பேசிவருகிறார். நடைமுறை சிக்கலைப் புரிந்துகொண்டு மாநில அரசுக்காக மத்திய அரசு செயல்படுகிறது.

மக்கள் ஆதரவு இல்லை என்பதாலே தி.மு.க அறிவித்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளது
வானதி சீனிவாசன்

இந்தி படிப்பவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. பா.ஜ.க அரசும் அமைச்சர்களும் எந்த இடத்திலும் இந்தியைத் திணிக்கவில்லை. மும்மொழியில் இந்தி இருப்பதை அரசியலாக்க முயல்கின்றனர் ஒருசில அரசியல்கட்சிகள்.

தமிழகத்தில் பொதுமக்கள் ஆதரவு இல்லை என்பதாலே தி.மு.க அறிவித்த இந்தி எதிர்ப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. தி.மு.கவும், மற்ற அமைப்புகளும் மேற்கொள்ளும் இரட்டை நிலைப்பாட்டை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர். நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் குறித்து தவறு செய்தவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றவர்,

`275 வாக்குச்சாவடி மையங்கள்; தேர்தல் பணியில் 1,333 பேர்!' - பரபரக்கும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்

``வேலூர் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி வெற்றியை நூலிழையில் தவறவிட்டது. ஆனால் வருகின்ற நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் எங்கள் கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும்'' என்றார்.