கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ-வும், பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ``பிரதமர் மோடி பொறுப்பேற்றது முதல் மாற்றங்கள் செய்வதில் தீவிரம் காட்டுகிறார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தமிழ்நாடு அதிக பலனடைந்திருக்கிறது. இஸ்லாமியப் பெண்களுக்குத் திருமண உறவில் பாதுகாப்பு கிடைத்திருக்கிறது. பெண்கள் சொந்தமாக தொழில்புரிய மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
இளைஞர்களின் திறனை மேம்படுத்த தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அனைத்துத் துறைகளையும் ஊக்கப்படுத்துபவராக மோடி இருக்கிறார். தி.மு.க என்ன வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்ததோ, அதை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறது.

ஆளுங்கட்சி வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசு வாக்குறுதிகளைக் கொடுக்காமலேயே இரண்டு முறை பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்திருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கார்த்திக் கோபிநாத் போன்ற பா.ஜ.க ஆதரவாளர்களை மீண்டும் மீண்டும் கைதுசெய்வதன் வாயிலாக பா.ஜ.க-வின் வளர்ச்சிக்கு உதவி செய்கிறார்கள். சட்டத்துக்குட்பட்டு பொதுவெளியில் கருத்து சொல்பவர்களை, நள்ளிரவில் தீவிரவாதியைப்போல கைதுசெய்வது மாநிலத்தின் கருத்து சுதந்திரமா?
இதையெல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த மாதிரி முயற்சிகள் மூலம் பா.ஜ.க-வின் ஆதரவாளர்களை முடக்கிவிடலாம் என்று நினைத்தால், அந்தக் கனவு ஒருபோதும் பலிக்கப் போவதில்லை” என்றார்.