Published:Updated:

`சிறுவாணித் தண்ணீரில் கைவைக்கும் கேரளா; உடனே அவர்களிடம் பேசுங்கள்!’ - முதல்வருக்கு வானதி கோரிக்கை

வானதி சீனிவாசன்

``சிறுவாணி அணை முழுவதும் நிரம்பியிருந்தால்தான் கோவை மக்களுக்கு சிக்கலின்றி குடிநீர் வழங்க முடியும்.” - வானதி சீனிவாசன்.

`சிறுவாணித் தண்ணீரில் கைவைக்கும் கேரளா; உடனே அவர்களிடம் பேசுங்கள்!’ - முதல்வருக்கு வானதி கோரிக்கை

``சிறுவாணி அணை முழுவதும் நிரம்பியிருந்தால்தான் கோவை மக்களுக்கு சிக்கலின்றி குடிநீர் வழங்க முடியும்.” - வானதி சீனிவாசன்.

Published:Updated:
வானதி சீனிவாசன்

கோவை மாநகராட்சி மக்களுக்கு முக்கியக் குடிநீர் ஆதாரமாக விளங்குவது சிறுவாணித் தண்ணீர்தான். தமிழ்நாடு – கேரளா ஒப்பந்தப்படி ஆண்டுக்கு 1.30 டி.எம்.சி தண்ணீர் சிறுவாணியிலிருந்து நமக்குக் கிடைக்க வேண்டும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக 0.48 முதல் 1.1 டி.எம்.சி தண்ணீரைத்தான் கேரளா கொடுக்கிறது.

சிறுவாணி
சிறுவாணி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேலும், சிறுவாணியின் முழுக் கொள்ளளவு 50 அடி. ஆனால், 45 அடிக்கு மேல் அணையின் உயரத்தை ஏற்றக் கூடாது என்று கேரள அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சமீபத்தில், தங்களது கட்டுப்பாட்டிலுள்ள 4-வது வால்வை கேரள அரசு சற்று மூடிவைத்துள்ளது. இதனால், கோவை மாநகருக்குக் வழக்கத்தைவிட மிகவும் குறைந்த அளவே தண்ணீர் கிடைக்கிறது. கோடைக்காலம் நெருங்கும் நிலையில், இதே நிலை நீடித்தால் தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

சிறுவாணி
சிறுவாணி

கோவைக்கு குடிநீர் விநியோகத்தை அதிகரிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள அரசுக்குக் கடிதம் எழுதி இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய கோவை தெற்குத் தொகுதி பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், ``சிறுவாணி அணை முழுவதும் நிரம்பியிருந்தால்தான் கோவை மக்களுக்கு சிக்கலின்றி குடிநீர் வழங்க முடியும். இப்போது இருக்கும் நீரின் அளவு மார்ச் மாதம் வரைகூடத் தாங்காது. கேரள அரசிடம் பேசி இந்தச் சிக்கலுக்குத் தமிழக அரசு தீர்வுகாண வேண்டும்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

இதைவிடுத்து தங்கள் அதிகார பலத்தைப் பயன்படுத்தி வாக்கு சேகரிக்க முயல்கின்றனர். கோவை விலங்கியல் பூங்காவில் அடிப்படை வசதிகள் செய்ய மத்திய அரசு கடிதம் மூலம் தெரிவித்தது.

தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது அது மூடப்படும் நிலையில் உள்ளது. ஆனால், இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் திமுக-வினர் தேர்தலில் வெல்ல வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதிலேயே குறியாக உள்ளனர். கடந்த தேர்தலில் கோவையில் ஓரிடத்தில்கூட தி.மு.க-வினர் வெற்றிபெறவில்லை.

கோவை
கோவை

இந்தத் தேர்தல், அவர்களுக்கு மானப் பிரச்னை. அதனால் சட்டம், ஒழுங்கு சீர்கேடு ஏற்படுத்துகின்றனர் திமுக-வினர். எங்கள் கட்சியினர்மீது மிரட்டல் விடுக்கின்றனர். இந்த மிரட்டல்களுக்கு மக்கள் வாக்குச்சீட்டின் வழி பதிலளிப்பார்கள்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism