Published:Updated:

``தீபாவளிக்கு 3 நாள்கள் மதுக்கடைகளை மூடுங்கள்; அரசே இலக்கு நிர்ணயம் செய்யக் கூடாது"- வானதி சீனிவாசன்

வானதி

``மிக இளம் வயதில் பெண்கள் விதவைகள் ஆவதற்கு மது முக்கியக் காரணமாக இருக்கிறது. மதுக் கொடுமையால் தந்தையை இழந்து, இளம் வயது குழந்தைகளுக்குக் கல்வி தடைப்படுகிறது.” - வானதி

பாஜக தேசிய மகளிர் அணித் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கோவையில் `மோடியின் மகள்’ நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்து, பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசியவர், ``இந்தி விஷயத்தில் தி.மு.க இரட்டை வேடம் போடுகிறது. திமுக அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் நடத்தும் பள்ளிகளில் இந்தி மொழி கற்றுக் கொடுக்கப்படுகிறது. அதை அவர்கள் ஒரு வியாபாரமாகச் செய்துவருகிறார்கள். ஆனால் ஏழை மாணவர்கள் படிக்கும் அரசுப் பள்ளிகளில் இந்தி மொழி மற்றும் வேறு மொழிகளைக் கற்றுக்கொடுக்க முடியாமல், அதைவைத்து ஒரு இந்தி நாடகத்தை நடத்திக்கொண்டிருக்கிறது தமிழக அரசு.

``தீபாவளிக்கு 3 நாள்கள் மதுக்கடைகளை மூடுங்கள்; அரசே இலக்கு நிர்ணயம் செய்யக் கூடாது"- வானதி சீனிவாசன்

மிக இளம் வயதில் பெண்கள் விதவைகள் ஆவதற்கு மது முக்கியக் காரணமாக இருக்கிறது. மதுக் கொடுமையால் தந்தையை இழந்து, இளம் வயதுக் குழந்தைகளுக்குக் கல்வி தடைப்படுகிறது. இதைக் கருத்தில்கொண்டுதான் இந்தத் திட்டத்தைத் தொடங்கியிருக்கிறோம். ஆனால், தமிழக அரசு தொடர்ச்சியாக மதுக்கடைகளைத் திறந்துகொண்டிருக்கிறது. கோவையில்கூட மக்கள் அதிகமாக நடமாடும் இடத்தில் மதுக் கடைகள் திறந்திருக்கின்றன. ஒருபுறம் போதைப்பொருளுக்காக உறுதிமொழி எடுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், மறுபுறம் ஒவ்வொரு தெருவிலும் மதுக்கடைகளைத் திறந்துவைத்து நாட்டில் இளம் விதவைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துகிறார்.

போதைப்பொருளுக்காக எடுக்கும் உறுதிமொழியையெல்லாம் கண்துடைப்பு நாடகமாக நாங்கள் பார்க்கிறோம். களத்தில் ஒவ்வொரு குடும்பத்தையும் நேரில் சென்று பார்க்கும்போதுதான் தெரிகிறது, அவர்களின் துயரத்தையும் வேதனையையும் அறிந்துகொள்ளாத முதல்வராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார் என்று. மதுக் கொடுமையால் இறக்கிற ஆண்களின் குடும்பத்தை மதுக்கடைகளின் நடத்தும் தமிழக அரசு பொறுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும்.

தீபாவளிப் பண்டிகை அன்று டாஸ்மாக் கடைகளைத் திறந்து வைத்து இலக்கு நிர்ணயித்ததற்கு பதில், `நாங்கள் ஆட்சிக்கு வந்து ரோடு இல்லாத பகுதிகளுக்கு ரோடு போட்டோம் எல்லா அரசுப் பள்ளிகளிலும் கழிவறை கட்டிக் கொடுத்தோம், அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் குழந்தைகளுக்குச் சுகாதாரமான வாழ்வை ஏற்படுத்திக் கொடுத்தோம்’ என்பதையே இலக்காக வைத்திருக்க வேண்டும். டாஸ்மாக்குக்கு இத்தனை கோடி வருமானம் என்பது ஓர் அரசாங்கத்துக்கு இலக்காக இருக்கக் கூடாது. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மூன்று நாள்களும், அதாவது தீபாவளிக்கு முன்பு தீபாவளிக்குப் பின்பு மதுக் கடைகள் மூடியிருக்க வேண்டும்.

``தீபாவளிக்கு 3 நாள்கள் மதுக்கடைகளை மூடுங்கள்; அரசே இலக்கு நிர்ணயம் செய்யக் கூடாது"- வானதி சீனிவாசன்

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை ரயில் நிலையம் அதிகமான வருமானத்தைத் தருகிறது. அதை மேன்மைப்படுத்தி, சர்வதேசத் தரத்துக்கு உயர்த்த திட்டங்கள் தயாராக இருக்கின்றன. தற்போது இந்தத் திட்டங்கள் ஆரம்பநிலையில் இருக்கின்றன" என்றார்