Published:Updated:

`தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலை' - உ.வாசுகி குற்றச்சாட்டு!

இரா.கோசிமின்
ஆர்.எம்.முத்துராஜ்

மக்கள் நலனுக்காகப் பேசுபவர்கள் அச்சுறுத்தப்படுவார்களே தவிர பயங்கரவாதத்தை தடுப்பது அரசின் நோக்கம் அல்ல என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி தெரிவித்தார்.

கையெழுத்து
கையெழுத்து ( ஆர்.எம்.முத்துராஜ் )

பயங்கரவாதத்தை தடுப்பதுதான் அரசின் நோக்கம் என்றால் பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் ஆதரவுடன் நாடு முழுவதும் நடக்கும் பயங்கரவாத செயல்களை ஏன் தடுக்கவில்லை. பயங்கரவாத தடை திருத்தச் சட்டம் என்பது மக்கள் நலனுக்காகப் பேசுபவர்கள் அச்சுறுத்தப்படுவார்களே தவிர பயங்கரவாதத்தை தடுப்பது அரசின் நோக்கம் அல்ல என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி தெரிவித்தார்.

கையெழுத்து இயக்கம்
கையெழுத்து இயக்கம்
ஆர்.எம்.முத்துராஜ்

விருதுநகரில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ``புதிய கல்விக் கொள்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்பதற்காக ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பிரசாரம் நடத்த உள்ளோம். இரண்டாம் முறையாக ஆட்சிக்கு வந்துள்ள மோடி அரசு ஏழை மக்களுக்கு எதிராகவும், கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகவும் உள்ளது. பயங்கரவாத தடைக்கான திருத்த சட்டத்தின்படி அரசு யாரை வேண்டுமானாலும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமலேயே சிறையில் அடைக்கலாம். நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவுடன் நடக்கும் பயங்கரவாத செயல்களை பா.ஜ.க ஏன் தடுக்கவில்லை. பயங்கரவாதத்தை தடுப்பது அரசின் நோக்கம் அல்ல. அரசு, மக்கள் விரோத திட்டங்களை விமர்சிப்பவர்கள், மாற்று அரசியல் பேசுபவர்கள் பயங்கரவாதிகளாக சித்திரிக்கப்படுவர். மக்களுக்கு ஆதரவாகப் பேசுபவர்கள் அச்சுறுத்தப்படுவார்கள். ஜெய் ஸ்ரீ ராம் என்பது கடவுள் நம்பிக்கையாக இல்லாமல் வெறிக்கூச்சலாக உள்ளது.

அரசின் புதிய தகவல் உரிமைச் சட்ட திருத்தத்தால் இனி கேள்வி கேட்பவர்களுக்கு பதில் கிடைக்காது. அரசு ஊழல் செய்வதே வெளியே தெரியாது. ஊழல்வாதிகள் பாதுகாக்கப்படுவர். புதிய கல்விக் கொள்கைக்கான கருத்துக் கேட்பு கூட்டம் முழுவதும் ரகசியமாகவே நடக்கிறது. கஸ்தூரிரங்கன் இந்த அறிக்கையை தயார் செய்ய 2 ஆண்டுகள் ஆனது. அரசு 2 மாதத்துக்குப் பின் வெளியிட்டது. ஆனால் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே உள்ள 484 பக்க அறிக்கை குறித்து 2 மாதத்துக்குள் கருத்து கூற வேண்டும் என அரசு கூறுகிறது. மற்ற மொழிகளில் முழுமையாக மொழியாக்கம் கூட செய்யவில்லை.

வாசுகி
வாசுகி
ஆர்.எம்.முத்துராஜ்

அந்த அறிக்கையை யாரும் முழுமையாக படித்து கருத்து சொல்லக் கூடாது என்பதுதான் அரசின் நோக்கம். ஏற்கெனவே மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி பொதுப்பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அனைத்து அதிகாரங்களும் மத்திய அரசுக்கு செல்லும். புதிய கல்விக் கொள்கையில் மதச்சார்பின்மை, ஜனநாயகம், ஆண், பெண் சமத்துவம், சமூக நீதி என்ற வார்த்தைகள் ஒரு இடத்தில் கூட இல்லை. இடஒதுக்கீடு இல்லை.

ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சி நிரலில் உள்ள அம்சங்கள் கல்விக் கொள்கை வாயிலாக இளைய தலைமுறையினர் மீது திணிக்கப்படுகிறது. இந்தக் கொள்கை அமலானால் அடுத்த தலைமுறையினரின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். புதிய கல்விக் கொள்கை வரக்கூடாது. தமிழ்நாட்டில் உள்ள பிரச்னைகள் குறித்து மாநில அரசுக்கு கவலையே இல்லை. இந்த பட்ஜெட்டில் 1000 கோடி குறைவாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் சம்பளம் கொடுக்க முடியவில்லை. பலருக்கு வேலை கிடைக்கவில்லை. ஆனால் இதுசம்பந்தமாக மாநில அரசு கேள்வி கேட்கவில்லை.

வாசுகி
வாசுகி
ஆர்.எம்.முத்துராஜ்

தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே காவல்துறையினர் அனுமதி வழங்குகின்றனர். மற்ற கட்சிகளுக்கு அனுமதி இல்லை. கருத்துச் சுதந்திரம் பறிபோய் கொண்டிருக்கிறது. அறிவிக்கப்படாத அவசர நிலை அமலில் உள்ளது” எனத் தெரிவித்தார்.