Published:Updated:

“பா.ஜ.க-வின் இலக்கு நான் அல்ல... தி.மு.க!”

திருமாவளவன்
பிரீமியம் ஸ்டோரி
திருமாவளவன்

விளக்குகிறார் திருமாவளவன்

“பா.ஜ.க-வின் இலக்கு நான் அல்ல... தி.மு.க!”

விளக்குகிறார் திருமாவளவன்

Published:Updated:
திருமாவளவன்
பிரீமியம் ஸ்டோரி
திருமாவளவன்
1927, டிசம்பர் 25-ம் தேதி ‘மனு நூல் எரிப்புப் போராட்ட’த்தில் அம்பேத்கர் பற்றவைத்த நெருப்பு இப்போதும் கொழுந்துவிட்டு எரிகிறது. ‘இந்துப் பெண்களைக் கொச்சைப்படுத்திவிட்டார் திருமாவளவன்’ என்று கொதிக்கிறது தமிழக பா.ஜ.க. ‘பெண்களை இழிவுபடுத்தும்விதமாக மனு நூலில் எழுதப்பட்டிருப்பதைத்தான் பேசினேன்’ என்று சீறுகிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன். தொடர்ந்துவரும் இந்தச் சர்ச்சை குறித்துப் பேசுவதற்காக திருமாவளவனை நேரில் சந்தித்தேன்...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“ ‘மனு தர்மம் என்ற பெயரில், நிறைய நூல்கள் இருக்கின்றன. திருமாவளவன் கூறுகிற மனு நூல் உண்மைக்கு மாறானது என்று 1887-ம் ஆண்டிலேயே சென்னை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுவிட்டது’ என்று தமிழக பா.ஜ.க-வினர் சொல்கிறார்களே..?’’

“முதலில், ‘திருமாவளவன் இந்துப் பெண்களைக் கொச்சைப்படுத்திப் பேசிவிட்டார்’ என்றுதான் என்மீது குற்றச்சாட்டுவைத்தது பா.ஜ.க. இப்போதும் அதே குற்றச்சாட்டில் உறுதியாக நிற்க வேண்டியதுதானே... அப்படியில்லாமல், ‘மனு தர்மத்தில் அப்படிச் சொல்லப்பட வில்லை’ என்று இப்போது ஏன் மாற்றிப் பேசுகின்றனர்... ஆக, ‘மனு தர்மத்தில் உள்ளதைத்தான் திருமாவளவன் பேசியிருக்கிறார்’ என்று அவர்களே ஒப்புக்கொண்டுவிட்டனர். எனவே, ‘இந்துப் பெண்களைக் கொச்சைப் படுத்திவிட்டார்’ என்று என்மீது அவர்கள் வைத்த குற்றச்சாட்டு அடிபட்டுப்போய்விட்டது.

அடுத்து, ‘சர் வில்லியம் ஜோன்ஸ் என்ற ஆங்கிலேயர்தான் அப்படி மொழிமாற்றம் செய்த மனு தர்ம நூலை எழுதியிருக்கிறார்’ என்கின்றனர். இப்போதும் அதிகாரபூர்வமாக மத்திய அரசின் கலாசாரத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் ‘ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட’ மனு நூலிலும்கூட நான் குறிப்பிடும் செய்தி இருக்கிறதே..!

பிரச்னை என்று வந்ததும், ‘இது மனு நூல் அல்ல... தவறான மொழிபெயர்ப்பு’ என்றெல்லாம் ஏதேதோ சொல்லி, தப்பிக்க நினைக்கிறார்கள். அப்படித் தவறான நூல் என்றால் அதைத் தடைசெய்திருக்க வேண்டியதுதானே... ஏன் செய்யவில்லை? மனு என்பவர் சம்ஸ்கிருதத்தில் எழுதியதுதான் ‘உண்மையான மனு தர்ம நூல்’ என்கிறார்கள். சரி... அந்த நூலையே எடுத்து வரட்டும்... சம்ஸ்கிருத மொழி தெரிந்தவர்களை இருதரப்பாக உட்காரவைத்துப் பேச வைத்துவிடுவோம்!’’

திருமாவளவன்
திருமாவளவன்

“மனு தர்ம நூல் குறித்து நேரடியாக விமர்சிக்கும் திருமாவளவனை விட்டுவிட்டு, ‘தி.மு.க தலைவர் இதற்கு என்ன பதில் சொல்கிறார்...’ என்று எதிர்த்தரப்பினர் கேள்வி கேட்பதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

“அதுதான் பா.ஜ.க-வின் மறைமுக அரசியல் நோக்கம். அவர்களுக்கு நான் குறி அல்ல... தி.மு.க-தான்! என்னைப் பற்றிப் பேசாமல், பிரச்னையைத் திசைதிருப்பி என் மூலமாக தி.மு.க-வுக்கு செக் வைப்பதுதான் அவர்களது உண்மையான உள்நோக்கம். இந்த அரசியல் பின்னணியை தி.மு.க-வும் புரிந்து கொண்டிருப்பதால்தான் எதிர்வினை யாற்றாமல் அமைதி காக்கிறார்கள்.

தி.மு.க தலைவர் தூண்டு தலின் பெயரில் நான் பேசுவதா கவும், இதன் மூலம் வாக்குவங்கியைப் பெருக்க முயல்வதாகவும் பேசுகிறார்கள். தி.மு.க., வி.சி.க., இடது சாரி என அனைத்துக் கட்சிகளிலும் 95 சதவிகிதத்துக்கும் மேலாக இந்துக்கள் தானே இருக்கிறார்கள்... பின்னர் இந்து மக்களைக் கொச்சைப் படுத்திவிட்டு, நாங்கள் எப்படி வாக்குவங்கியைத் திரட்ட முடியும்..? இந்த லாஜிக்கே ரொம்பவும் தப்பாக இருக்கிறதே!’’

“தி.மு.க கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுதான் பா.ஜ.க-வின் வியூகம் என்பது தெரிந்திருந்தும்கூட இந்த விஷயத்தில் உறுதியாக எதிர்த்து நிற்பது ஏன்?’’

“யார், எந்தவொரு கருத்தைச் சொன்னாலும் உடனே, ‘இந்து மதத்தை எதிர்க்கிறார்கள்; இந்துக்களைப் புண்படுத்துகிறார்கள்’ என்றுதான் திரும்பத் திரும்ப பா.ஜ.க-வினர் பாய்ந்து பிராண்டுகிறார்கள். ஆனால், மதம் தொடர்பான அரசியல்கள் தமிழகச் சூழலில் எப்போதுமே ஒரு விவாதமாக மாறியது கிடையாது. இங்கு சமூகநீதி அரசியல்தான் வலுவாகப் பேசப்பட்டு வரும். கடந்த இரண்டு வருடங்களில், நடிகர் சூர்யா, அவருடைய மனைவி ஜோதிகா, விஜய், விஜய் சேதுபதி, பிரகாஷ்ராஜ், கவிஞர் வைரமுத்து, மூத்த தலைவர் நெல்லை கண்ணன் என அடுக்கடுக்காக எல்லோரையும் பா.ஜ.க-வினர் அநாகரிகமாக விமர்சித்திருக்கிறார்கள். இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதியின்பால் இந்து மக்களுக்கு இருந்துவரக்கூடிய அடிப்படைப் பிரச்னைகள் பற்றிப் பேசாத பா.ஜ.க-வினர், இப்படி மத உணர்வுகளை மட்டும் தூண்டிக்கொண்டே இருக்கிறார்கள்.

இதனால் தேர்தலில் எங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதற்காக நாங்கள் எங்கள் நிலையிலிருந்து பின்வாங்க முடியாது. அதேசமயம், பா.ஜ.க-வினரின் இந்த அரசியல், அவர்களுக்கே எதிர்வினையாக மாறிவருகிறது என்பதுதான் உண்மை!’’

திருமாவளவன்
திருமாவளவன்

“ ‘மனு நூல் சர்ச்சையின்போது, திருமாவளவனுக்கு ஆதரவாக ஏழு கோடி தமிழர்களும், அரசியல் கட்சிகளும் துணை நின்றிருக்க வேண்டும்’ என்று பழ கருப்பையா ஆதங்கப்படுகிறாரே?"

“ஐயாவின் எதிர்பார்ப்பு, ஆதங்கம் சரியானது. ஆனால், நடைமுறையில் ஒவ்வொரு கட்சிக்கும் பிரச்னைகள், நெருக்கடிகள் இருக்கின்றன. எனவே, எல்லோரும் ஒரே மாதிரியாக ஒரு பிரச்னையை அணுக முடியாது.”

“உங்கள்மீது வழக்கு பாய்ந்ததைக் கண்டித்து அறிக்கை வெளியிட்ட தி.மு.க., மிகக் கவனமாக ‘மனு நூல்’ குறித்து எந்தவொரு கருத்தையும் தெரிவிக்காமல் தவிர்த்துவிட்டதே..?’’

“இல்லையில்லை... ‘பெரியார் பேசியிருப்பதைத் தான் திருமாவளவனும் பேசியிருக்கிறார்’ என்று தி.மு.க தலைவரே அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். இதில், ‘பெரியார் பேசியிருப்பதைத்தான்...’ என்று மட்டும் சொல்வதாலேயே அது, அதோடு முடிந்துவிடாது. ஏனெனில், தன் வாழ்நாள் முழுக்க பெரியார் எதைப் பேசினார்... மனுதர்மத்துக்கு எதிராகத்தானே பேசினார்!’’

“உணர்வுபூர்வமான மத விவகாரங்களில், கருத்து சொல்ல பெரிய கட்சிகளே தயங்கிவரும் சூழலில், உங்களது இந்தப் பேச்சு கூட்டணியின் வாக்குவங்கியைப் பாதித்துவிடாதா?’’

“எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. பிற மாநிலங்களைப் போன்றது அல்ல தமிழ்நாடு... ரொம்பவே அரசியல் விழிப்புணர்வு கொண்ட சமூகம் இது. தமிழக மக்கள் நல்லது எது, கெட்டது எது என்பதைப் புரிந்து, நியாயத்தை உணர்ந்துதான் வாக்களிப் பார்கள். இதுதான் கடந்தகால வரலாறு. எங்கள் பக்கத்தில் என்ன நியாயம் இருக்கிறது என்பதை மக்கள் தெளிவாகவே உணர்ந்திருக் கிறார்கள். எனவே, தி.மு.க கூட்டணிக்கு இது சாதகமாகவே அமையும்!’’

“தமிழ்நாட்டு மக்கள் பகுத்தறிந்து உணரக்கூடியவர்கள் என்றால், ‘வேல் யாத்திரை மூலம் பா.ஜ.க மதக்கலவரத்தைத் தூண்டுவதற்குத் திட்டமிடுகிறது. எனவே, யாத்திரையைத் தடைசெய்ய வேண்டும்’ என நீங்கள் கேட்பது ஏன்?’’

“அப்படியில்லை... யாத்திரையை நடத்தக்கூடியவர்களின் நோக்கம் என்ன என்பதையும் நாம் இங்கே கருத்தில்கொள்ள வேண்டியிரு க்கிறது. சமூகநீதி யாத்திரை அல்லது மொழி, இனம் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து பா.ஜ.க-வினர் யாத்திரை நடத்தினால், நாங்களேகூட ஆதரவு தெரிவிப்போம்.

‘எல்லோருக்கும் வேலை கொடு’ என்று கேட்கும் சூழலில் நாடு தத்தளித்துக் கொண்டிருக்கும்போது, ‘எல்லோர் கையிலும் வேல் கொடு’ என்று பா.ஜ.க-வினர் நடத்துகிற இந்த யாத்திரை என்பது பொருத்தமில்லாததாக இருக்கிறது. மத உணர்வு அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்த வேண்டும் என்பதுதான் பா.ஜ.க-வின் நோக்கமாக இருக்கிறது. அவர்களது நோக்கத்தை அம்பலப்படுத்துவதற்காகத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். மக்கள் இப்போது அமைதியாகத்தான் இருப்பார்கள். தேர்தல் நேரத்தில் பா.ஜ.க-வுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள்!’’

“ `பா.ம.க இருக்கும் கூட்டணியில் வி.சி.க இருப்பது சாத்தியம் இல்லை’ என்கிறீர்கள். ஆனால், `தி.மு.க கூட்டணியில், எந்த மாற்றமும் வரலாம்... வி.சி.க - பா.ம.க ஏற்கெனவே ஒரே கூட்டணியில் இருந்த கட்சிகள்தான்’ என்கிறாரே பொன்முடி?’’

“நாங்கள் மாற்றத்தை விரும்புகிற வர்கள்தான்... ஆனால், பிற்போக்கான மாற்றத்தை விரும்புகிறவர்கள் அல்ல. ‘தி.மு.க கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம்’ என்பதில் உறுதியாக இருக்கிறோம். தி.மு.க கூட்டணியில்தான் வருகிற சட்டமன்றத் தேர்தலைச் சந்திப்போம். தி.மு.க கூட்டணிதான் தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றும். மற்றபடி சாதிய, மதவாதக் கட்சிகளோடு வி.சி.க ஒருபோதும் கூட்டணி வைத்துக்கொள்ளாது!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism