Published:Updated:

தி.மு.க-வில் பவர் சென்டர்கள் அதிகம்! - விளக்குகிறார் திருமாவளவன்

திருமாவளவன்
பிரீமியம் ஸ்டோரி
திருமாவளவன்

தி.மு.க நிர்வாகிகளைக் கூப்பிட்டு உன் இடத்தை வி.சி.க-வுக்குக் கொடுக்கப்போகிறேன் என்று சொன்னால், அந்தப் பகுதி நிர்வாகிகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

தி.மு.க-வில் பவர் சென்டர்கள் அதிகம்! - விளக்குகிறார் திருமாவளவன்

தி.மு.க நிர்வாகிகளைக் கூப்பிட்டு உன் இடத்தை வி.சி.க-வுக்குக் கொடுக்கப்போகிறேன் என்று சொன்னால், அந்தப் பகுதி நிர்வாகிகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

Published:Updated:
திருமாவளவன்
பிரீமியம் ஸ்டோரி
திருமாவளவன்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுகத் தேர்தலில், கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடங்களில் தி.மு.க-வினர் போட்டி வேட்பாளர்களை நிறுத்தி வெற்றிபெற்றது, கூட்டணிக் கட்சியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. “கூட்டணி அறத்தைக் காக்கும்விதமாக அவர்களை ராஜினாமா செய்ய வைக்க வேண்டும்’’ என தி.மு.க தலைவருக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்தார். அன்று மாலையே, அதை ஏற்றுக்கொள்ளும்விதமாக அறிக்கை ஒன்று முதல்வர் தரப்பிலிருந்து வெளியானது. இந்தச் சச்சரவுகள் இன்னும் ஓயாத நிலையில், திருமாவளவனைச் சந்தித்துச் சில கேள்விகளை முன்வைத்தோம்...

தி.மு.க-வில் பவர் சென்டர்கள் அதிகம்! - விளக்குகிறார் திருமாவளவன்

``மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என உங்களுக்கு ஒதுக்கப்பட்ட 16 இடங்களில், பாதி இடங்களில் மட்டுமே உங்கள் வேட்பாளர்கள் தலைமைப் பொறுப்புக்கு வர முடிந்திருக்கிறது. இப்படி நடக்கும் என எதிர்பார்த்தீர்களா?’’

``பொதுவாக உள்ளாட்சித் தேர்தல்களில் இந்த மாதிரியான அத்துமீறல்கள் நடப்பது வழக்கமானதுதான். ஆனால், தி.மு.க தலைமையின் புதிய அணுகுமுறையிலும், கூட்டணிக் கட்சிகளைக் கட்டுக்கோப்போடு வழிநடத்துவதிலும் ஒரு நம்பிக்கை இருந்தது. அதனால், ஒதுக்கப்பட்ட இடங்களிலெல்லாம் தி.மு.க-வின் ஒத்துழைப்போடு வெற்றிபெறுவோம் என்கிற நம்பிக்கையோடு இருந்தோம். ஆனால், ஒருசில இடங்களில் அத்துமீறல்கள் நடந்து வெற்றி வாய்ப்பு பறிபோயிருக்கிறது. முதல்வர் அதற்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டதுடன், போட்டி வேட்பாளராக நின்று வெற்றிபெற்றவர்கள் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இது அவருடைய பெருந்தன்மையை, முதிர்ச்சி நிறைந்த அணுகுமுறையை உறுதிப்படுத்தியிருக்கிறது. அவரின் மீதான நன்மதிப்பு பல மடங்கு உயர்ந்திருக்கிறது.’’

``கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட, நெல்லிக்குப்பம் உள்ளிட்ட இடங்களில் பிரச்னைகள் இருப்பதாகத் தேர்தலுக்கு முன்தினமே செய்திகள் வெளியாகினவே?”

``நெல்லிக்குப்பம் உள்ளிட்ட பல இடங்களில் பிரச்னைகள் எழுந்தவுடனேயே அவை என் கவனத்துக்கு வந்தன. சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்கள், தேர்தல் பொறுப்பைக் கவனிக்கக்கூடிய அமைச்சர்கள், தலைமையால் நியமிக்கப்பட்ட நான்கு பேர்கொண்ட குழு என அனைவரிடமும் இந்தப் பிரச்னைகள் குறித்து நான் தொடர்ந்து தகவல் கொடுத்துக்கொண்டேயிருந்தேன். `தலைவர் உங்களுக்கு ஒதுக்கியது எதுவும் பறிபோகாது, கைவிட்டுப்போகாது` என்கிற உறுதியைக் கொடுத்துக்கொண்டேயிருந்தார்கள்.

நெல்லிக்குப்பத்தைப் பொறுத்தவரை அந்த மாவட்டத்தின் செயலாளராகவும், அமைச்சராகவும் இருக்கக்கூடிய சி.வி.கணேசன், தேர்தலுக்கு முன்பே அங்கே நிலவுகின்ற சிக்கல்கள் குறித்து, சில தகவல்களைச் சொன்னார். கூடுதலாக, `நீங்கள் நகர்மன்றத் தலைவர் இடத்தைப் பெற்றுக்கொண்டீர்கள், அது எனக்கு மகிழ்ச்சிதான். அதனால், தலைவர் பொறுப்பு இல்லாவிட்டாலும் துணைத் தலைவர் பொறுப்பையாவது பெற்றுவிடலாம்’ என்றார். ஆனால், அதற்கு அவர் எவ்வளவோ முயற்சிகள் எடுத்தும் இரண்டு பதவிகளையும் எங்களுக்குப் பெற்றுத்தர முடியவில்லை. அந்த நிலையில், காலையில் ஒன்பது மணிக்குத் தொடங்கிய எங்கள் கட்சியினரின் போராட்டம் இரவு வரைக்கும் நீடித்தது. அதைத் தொடர்ந்துதான் முதல்வரின் கவனம் அதன்மீது ஈர்க்கப்பட்டது. அதற்கு அவர் உடனடி எதிர்வினை ஆற்ற நேர்ந்தது. பாதிக்கப்பட்ட இடங்களைப் பேசுவதைப்போல, நாங்கள் எளிதாக வெற்றிபெற்ற இடங்களையும், அதற்கு ஒத்துழைத்த தி.மு.க-வினரையும் இந்த இடத்தில் குறிப்பிட விரும்புகிறேன். அதேபோல, இந்த அசம்பாவிதங்களை எந்த நிலையிலும் தி.மு.க தலைமையோடு தொடர்புபடுத்த முடியாது.’’

``கூட்டணிக் கட்சிகளுக்கான ஒதுக்கீட்டைத் தேர்தலுக்குச் சில நாள்களுக்கு முன்பே அறிவித்திருந்தால், இதைத் தவிர்த்திருக்கலாம் என நினைக்கிறீர்களா?’’

``அப்படியெல்லாம் முடிவுசெய்ய முடியாது. தி.மு.க நிர்வாகிகளைக் கூப்பிட்டு உன் இடத்தை வி.சி.க-வுக்குக் கொடுக்கப்போகிறேன் என்று சொன்னால், அந்தப் பகுதி நிர்வாகிகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஒருசில இடங்களில் அந்தப் பகுதி மாவட்டச் செயலாளர்களுடன் கலந்து பேசித்தான் எங்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஒருசில தினங்களுக்கு முன்பு வேண்டுமானால் பேசியிருக்கலாம். ஆனாலும், காலத்தை ஒரு முக்கியக் காரணமாகச் சொல்ல முடியாது. நகராட்சி, பேரூராட்சிகளில் சேர்மன் ஆக வேண்டும் என்பதற்காகப் பணத்தைச் செலவழித்தவர்கள் எளிதில் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். அதனால் இந்தக் குழப்பமும் குளறுபடிகளும் தவிர்க்க முடியாதவைதான்.’’

தி.மு.க-வில் பவர் சென்டர்கள் அதிகம்! - விளக்குகிறார் திருமாவளவன்

``உங்களுக்கு ஒதுக்கப்பட்ட 16 இடங்களில், பெரும்பாலும் கடுமையான போட்டிகளுக்குப் பிறகே வெல்ல முடிகிற இடங்களாகவே இருக்கின்றன, தி.மு.க திட்டமிட்டே இப்படி இடங்களை ஒதுக்கிவிட்டது என்கிற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறதே?’’

``கடுமையான போட்டிகள் நிறைந்த இடங்கள் என்பது உண்மைதான். ஆனால், திட்டமிட்டு தி.மு.க அதைச் செய்ததாகச் சொல்ல முடியாது. டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, ஆ.ராசா ஆகிய நான்கு பேரும்தான் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அவர்கள், ஒவ்வொரு மாவட்டச் செயலாளரிடமும் கலந்து பேசி முடிவெடுக்கக் காலம் போதாது. அவர்களுக்கென்று இருக்கும் ஐடியாவை வைத்து, ஒரு சில மாவட்டச் செயலாளர்களைக் கூப்பிட்டுப் பேசினார்கள். மற்ற இடங்களில் அவர்களே `டிக்’ அடித்துவிட்டார்கள். முதல்வர், கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கவேண்டிய மாநகர, நகர, பேரூராட்சி எண்ணிக்கைகளை முன்பே அந்தக் குழுவுக்குக் கொடுத்துவிட்டார். அதன்படி அவர்கள் ஒதுக்கினார்கள்.’’

``உங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள், நீங்கள் கொடுத்த விருப்பப் பட்டியலுக்குள் இருந்தவைதானா?’’

``ஆம். நாங்கள் கொடுத்த பட்டியலுக்குள்ளிருந்து ஒதுக்கப்பட்ட இடங்கள்தான்!’’

``எனில், தென் மாவட்டங்களில் இல்லாமல், வட மாவட்டங்களில் மட்டும் இடங்கள் கேட்டுப் பெற்றது ஏன்?’’

``தேனி மாவட்டத்தில் ஒரு பேரூராட்சியும், நகராட்சியும் எங்களுக்கு ஒதுக்கப்பட்டன. மொத்த எண்ணிக்கை குறைவு என்பதால் வட மாவட்டங்களில் தேர்வு செய்யவேண்டிய சூழல் உருவானது. டெல்டா பகுதியில் வேண்டும் என்பதால், வேப்பத்தூர் பேரூராட்சித் துணைத் தலைவர் பதவியைக் கேட்டு வாங்கினோம்.’’

``தி.மு.க கூட்டணியில் இருக்கும்போதெல்லாம், போஸ்டரில் படம் போடாதது, பெயர் எழுதாதது, கொடியை இறக்குவது, தற்போது நடந்த சம்பவங்கள் போன்ற ஏதாவது சிக்கல்கள் எழுந்துகொண்டே இருக்கின்றனவே?’’

``ஒருசில இடங்களில் அப்படி நடக்கின்றன. தமிழ்நாடு முழுவதும் அப்படி நடப்பதில்லை. எங்களை இணைத்து அடையாளப்படுத்திக் கொண்டால், மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கற்பனை செய்துகொள்கிறார்கள். காவல்துறையும் எங்கள் கொடியை ஏற்றினால் மற்றவர்கள் பிரச்னை செய்வார்கள் என்கிற காரணத்தைச் சொல்லியே எங்களைக் கொடியேற்றவிடாமல் தடுக்கிறார்கள். மக்கள் எதிர்ப்பு தெரிவிக்காவிட்டாலும்கூட, எதிர்ப்பு வரும் என்கிற யூகத்தின் அடிப்படையில் அப்படிச் செய்கிறார்கள்.’’

தி.மு.க-வில் பவர் சென்டர்கள் அதிகம்! - விளக்குகிறார் திருமாவளவன்
தி.மு.க-வில் பவர் சென்டர்கள் அதிகம்! - விளக்குகிறார் திருமாவளவன்

``ஒப்பீட்டளவில் அ.தி.மு.க-வுடன் கூட்டணியில் இருக்கும்போது, இது போன்ற சம்பவங்கள் நடப்பதில்லையே?’’

``அ.தி.மு.க-வுடன் மிக நீண்ட காலம் பயணம் செய்யும் சூழல் எங்களுக்கு உருவாகவில்லை. ஒருசில தேர்தல்களைத்தான் அ.தி.மு.க-வுடன் சந்தித்திருக்கிறோம். அதிலும் உள்ளாட்சித் தேர்தலை இணைந்து சந்தித்ததில்லை. அதனால், களத்தில் எப்படி ரியாக்ட் செய்வார்கள் என்பதை அதிகமாக உணர முடியவில்லை. அதனால் இரண்டு கட்சிகளையும் ஒப்பிட முடியாது.

அதேவேளை, இரண்டு கட்சிகளிடமும் ஒரு வித்தியாசத்தை என்னால் பார்க்க முடிகிறது. அ.தி.மு.க-வின்மீது விமர்சனங்கள் இருந்தாலும், தலைமையிலிருந்து சொல்வதை அப்படியே பின்பற்றுவார்கள். பெரிய அளவில் எந்தவித எதிர்ப்பும் இருக்காது. ஆனால், தி.மு.க-வில் அதிகாரப் போராட்டங்கள் அதிகம். லோக்கலில் செல்வாக்கு உள்ளவர்கள் அதிகாரத்தைக் கையிலெடுப்பார்கள். கடந்த காலத்தில் அ.தி.மு.க-வில் ஒரே அதிகார மையம்தான். ஆனால், தி.மு.க-வில் எப்போதும் பவர் சென்டர்கள் அதிகம்.’’

``நீங்கள் இழந்த எட்டு இடங்களும் திரும்பக் கிடைக்கும் என நினைக்கிறீர்களா... அடுத்தகட்ட உங்கள் நடவடிக்கை என்ன?’’

``நான் முதல்வரைச் சந்தித்தபோதுகூட, எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களைக் கொடுங்கள் என நான் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. வெற்றிபெற்றவர்களை அறிமுகப்படுத்தவே சந்தித்தேன். அமைச்சர் எ.வ.வேலு அது குறித்து என்னிடம் பேசியபோதுகூட, ‘நாங்கள் உங்களைக் கட்டாயப்படுத்தவில்லை. எந்தவித பிரஷரும் இல்லாமல் உங்களால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யுங்கள்’ என்று மட்டும்தான் சொல்லிவிட்டு வந்தேன்!’’