Published:Updated:

நடிகை மீரா மிதுனுக்கு பா.ம.க கண்டனம்; திருமாவின் ரியாக்‌ஷன் என்ன?

திருமாவளவன்
திருமாவளவன்

சாதி இருக்கிற வரையில், இது போன்ற இழிவுகளும் பாகுபாடுகளும் இருந்துகொண்டேதான் இருக்கும். சாதியை முற்றாக ஒழிக்க வேண்டுமென்றால் சமூகநீதி அரசியலால் மட்டுமே முடியும்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவனைச் சந்தித்து, தற்கால அரசியல் நிகழ்வுகள் குறித்துப் பல கேள்விகளை முன்வைத்தோம்...

``கோவை அன்னூர் வி.ஏ.ஓ அலுவலகத்தில் சாதியைச் சொல்லி மிரட்டிய சம்பவம் நடந்திருப்பது பற்றி..?’’

``சமூக மாற்றம் நிகழும்போது பத்து அல்லது இருபது ஆண்டுகளில் அதன் முழுமையான பரிமாணத்தை அடைந்துவிடும் என்று சொல்ல முடியாது. நல்ல மாற்றம் ஏற்பட்டு நூறாண்டுகளான பிறகும் சாதியின் எச்சங்கள் இருக்கும். நூறு விழுக்காடு ஒரு சமூகத்தை முற்றாக மாற்றிவிட முடியாது. சாதி இருக்கிற வரையில், இது போன்ற இழிவுகளும் பாகுபாடுகளும் இருந்துகொண்டேதான் இருக்கும். சாதியை முற்றாக ஒழிக்க வேண்டுமென்றால் சமூகநீதி அரசியலால் மட்டுமே முடியும். கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கொடுப்பது மட்டுமல்ல, பாகுபாட்டுக்கு எதிரான அரசியலும் சமூகநீதிதான்.’’

``நடிகை மீரா மிதுன் பட்டியல் சமூக இயக்குநர்களைத் தரக்குறைவாகப் பேசியதைக் கண்டித்து, பா.ம.க-வின் பொருளாளர் திலகபாமா, அறிக்கை வெளியிட்டிருக்கிறாரே?’’

``வரவேற்கிறேன். அந்தக் கட்சியிலும் இப்படிப் பேசுவதற்கு ஆள் இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சிதான்!’’

மேலும், உள்ளாட்சித் தேர்தலில் வி.சி-கவின் திட்டம், சசிகலாவின் நடவடிக்கைகள், வன்னியர் உள் இட ஒதுக்கீடு, 35 ஆண்டுக்கால அரசியல் பயணத்தில் அடைந்தது, இழந்தது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு திருமாவளவன் அளித்த பதில்கள் கீழே....

அடுத்த கட்டுரைக்கு