Election bannerElection banner
Published:Updated:

பொதுத் தொகுதியில் வெற்றி - அடையாளத்தை உடைத்த விடுதலை சிறுத்தைகள்!

திருமாவளவன்
திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்துக்கான தொடக்கம் இது!

தி.மு.க தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அவை, செய்யூர், காட்டுமன்னார்கோவில், அரக்கோணம், வானூர், நாகப்பட்டிணம் மற்றும் திருப்போரூர்.

இவற்றில், திருப்போரூர் மற்றும் நாகப்பட்டிணம் ஆகிய இரண்டும் பொதுத்தொகுதிகள். மற்ற நான்கும் தனித் தொகுதிகள். அவற்றில், திருப்போரூர் தவிர மற்ற ஐந்து தொகுதிகளிலும் அ.தி.மு.க-வை எதிர்த்துக் களம் கண்டது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திருப்போரூரில் மட்டும், பாட்டாளி மக்கள் கட்சியை எதிர்த்துப் போட்டியிட்டது.

தற்போது வரை வந்த முடிவுகளின் படி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் செய்யூரில் போட்டியிட்ட பாபு, திருப்போரூர் தொகுதியில் போட்டியிட்ட பாலாஜி ஆகிய இருவரும் தங்களை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளரை விட முன்னிலை வகித்து வருகின்றனர். இதில் பாலாஜி மட்டுமே அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார்.

விசிக
விசிக

நாகப்பட்டிணம் தொகுதியில் போட்டியிட்ட ஆளூர் ஷாநவாஸ் வெற்றி பெற்றிருக்கிறார்.

பானைச் சின்னத்தில் போட்டியிட்டு பாதிப்க்குப் பாதி தொகுதிகளில் அந்தக் கட்சி முன்னிலை பெற்றுவருவது அரசியல் விமர்சகர்களால் உற்று கவனிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், தலித் சமூக மக்களின் ஆதரவை மட்டும் பெற்ற கட்சி என்ற பொதுப் பார்வையை அந்தக் கட்சி தற்போது உடைத்துள்ளது. இது அந்தக் கட்சியின் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்துக்கான தொடக்கம் என அரசியல் விமர்சகர்களால் கருத்துகள் முன்வைக்கப்படுகிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு