Published:Updated:

`ஆளுநர் மாளிகையை காலிசெய்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்!’ - சிந்தனை செல்வன் எம்.எல்.ஏ

வி.சி.க - சிந்தனை செல்வன் ( ட்விட்டர் )

``ஊட்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை காலி செய்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்'' என வி.சி.க எம்.எல்.ஏ சிந்தனை செல்வன் சட்டப்பேரவையில் வலியுறுத்தியிருக்கிறார்.

`ஆளுநர் மாளிகையை காலிசெய்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்!’ - சிந்தனை செல்வன் எம்.எல்.ஏ

``ஊட்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை காலி செய்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்'' என வி.சி.க எம்.எல்.ஏ சிந்தனை செல்வன் சட்டப்பேரவையில் வலியுறுத்தியிருக்கிறார்.

Published:Updated:
வி.சி.க - சிந்தனை செல்வன் ( ட்விட்டர் )

பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துணைவேந்தர்கள் அரசை நியமிக்கும் சட்ட மசோதா குறித்துப் பேசினார். அப்போது பேசிய அவர்,``துணைவேந்தர்கள் நியமனம் என்பது மாநில அரசின் உரிமை தொடர்புடையது. பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் நியமனங்களில் அரசைக் கலந்தாலோசிக்காமல் ஆளுநர் செயல்படுகிறார். துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநரின் செயல் மக்களாட்சியின் தத்துவத்துக்கு விரோதமாக உள்ளது'’ என்றார்.

இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க., அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளும் வெளிநடப்பு செய்தன. துணைவேந்தரை மாநில அரசே நியமிக்க அதிகாரமளிக்கும் மசோதாவை ஆரம்பநிலையிலேயே எதிர்ப்பதாக அ.தி.மு.க அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

அதைத் தொடர்ந்து பல்வேறு எம்.எல்.ஏ-க்களும் சட்டப்பேரவையில் இந்த மசோதா குறித்துப் பேசினார்கள். அப்போது, பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.எல்.ஏ சிந்தனை செல்வன், ``இந்தச் சட்டத் திருத்த மசோதாவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக வரவேற்கிறோம். துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே உள்ள சுயாட்சி அதிகாரமாக இருக்க வேண்டும். ஊட்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை காலி செய்து, மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். அமைச்சர்கள் இருக்கக்கூடிய கிரீன்வேஸ் சாலை குடியிருப்பில் ஆளுநருக்கு இடம் ஒதுக்கப்பட வேண்டும்'’ என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism