Published:Updated:

`இது ஒரு தேசிய அவமானம்!'- ஆணவக்கொலைக்கு எதிராக மக்களவையில் கொந்தளித்த திருமாவளவன்

சகாயராஜ் மு

ஆணவக் கொலைகளைத் தடுக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களவையில் பேசியிருக்கிறார் திருமாவளவன்.

திருமாவளவன்
திருமாவளவன்

தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் நடந்து வரும் ஆணவக் கொலைகள் குறித்து மக்களவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் ஆவேசமாக பேசினார்.

ஆணவக்கொலை
ஆணவக்கொலை

"எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகப் பொறுப்பு ஏற்றதிலிருந்து தமிழ்நாட்டில் சாதி ஆணவக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அவரது தலைமையிலான அரசு ஆணவக் குற்றங்களைத் தடுப்பதற்கு அக்கறை காட்டுவது இல்லை என்பதையே இது நமக்கு உணர்த்துகிறது. நெல்லை மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு ஒரு மாதம் ஆவதற்குள்ளாக கொங்கு மண்டலத்தில் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

கோவையை அடுத்த மேட்டுப்பாளையத்தில் கடந்த வாரம் வர்ஷினி பிரியா, கனகராஜ் ஆகிய இருவரும் கத்தியால் வெட்டப்பட்டனர். கனகராஜின் சகோதரர் வினோத் என்பவரே அவர்களை வெட்டியிருக்கிறார். வேறு சாதியைச் சேர்ந்த பெண்ணைக் காதலிக்கிறார் என்பதற்காக கனகராஜை வினோத் வெட்டியிருக்கிறார். இந்தத் தாக்குதலில் கனகராஜும் வர்ஷினி பிரியாவும் உயிரிழந்துள்ளனர். ஆணவக் குற்றங்களைத் தடுப்பதற்கு சிறப்பு சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் இந்திய சட்ட ஆணையம் ஒரு சட்ட மசோதாவை தயாரித்து மத்திய அரசிடம் அளித்துள்ளது.

திருமாவளவன்
திருமாவளவன்

அந்த மசோதா அளிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆன பிறகும் கூட மத்தியில் ஆளும் பாஜக அரசு அதை சட்டமாக்கவே இல்லை. மத்திய அரசு மட்டுமின்றி மாநில அரசே கூட இதற்கான சட்டத்தை இயற்ற முடியும். அதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் தமிழக அரசு தனது பொறுப்பைத் தட்டிக் கழித்துக் கொண்டிருக்கிறது. தமிழக அரசு சாதிவெறியர்கள்மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கவேண்டும்; இனியும் காலந்தாழ்த்தாமல் ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கான சட்டத்தை இயற்றவேண்டும்" என்று நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில் திருமாவளவன் வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில், இப்பிரச்னையை மக்களவையில் இன்று எழுப்பிய சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி எம்பி தொல்.திருமாவளவன், "ஒரு முக்கியமான பிரச்னையை இந்த அவையின் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். இது ஒரு தேசிய அவமானம். honor killing என்கிற ஆணவக் கொலை நாடு முழுவதும் அவ்வப்பாேது நடந்து வருகிறது. ஒவ்வொருவரும் வேதனைப்படக்கூடிய, வெட்கப்படக்கூடிய ஒரு குற்றச்செயல் ஆணவக்கொலை என்பதாகும்.

வர்ஷினி பிரியா
வர்ஷினி பிரியா

அண்மையில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே வர்ஷினி பிரியா என்ற இளம்பெண்ணையும் அவர் திருமணம் செய்துக்கொண்ட கனகராஜ் என்கிற இளைஞரையும் கொடூரமாக அவரது பெற்றோர், உடன்பிறந்தவர்கள் படுகொலை செய்திருக்கிறார்கள். சாதிக்கெளவம் என்ற வறட்டு கெளரவத்தின் அடிப்படையில் இந்த கொலை நடந்திருக்கிறது.

ஆந்திர பிரதேசம் சித்தூர் மாவட்டத்தில் ஊசுருப்பேன்டா என்ற இடத்தில் பழமநெரி என்கின்ற நகரையொட்டியுள்ள கிராமத்தில் கேசவ் மற்றும் ஹேமாவதி என்கிற இரண்டு பேர் சாதிமறுப்பு திருமணம் செய்துக்கொண்டார். இதன் காரணத்தினால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அந்த பெண் பச்சிளம் குழந்தையை வீட்டிற்கு எடுத்துக்கொண்டு திரும்பியுள்ளார்.

அம்ருதா
அம்ருதா

அந்த நேரத்தில் அந்தப் பெண்ணை கடத்திச் சென்று பெற்றோர், உடன்பிறந்தவர்கள் கொடூரமாக வெட்டி படுகொலை செய்திருக்கிறார்கள். இதுநாள்தோறும் நாட்டில் நடந்து வருகிற ஒரு கொடூரமான குற்றச்செயல்கள் ஆகும். இதுப் பற்றி உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பு வழங்கியிருக்கிறது" என்று கூறிய திருமாவளவன், அந்த தீர்ப்பை ஆங்கிலத்தில் படித்தார். அதில், “In 2018 supreme court in a historical verdict on honour killings said; “it can be stated without any fear of contradiction that any kind of torture or torment or ill-treatment in the name of honour that tatamount to atrophy of choice of an individual relating to love and marriage by any assembly, whatsoever nomenculture it assumes, is illegal and cannot be allowed a moment of existence.” It has issued some guidelines to both centre and states. On the direction of supreme court The Law Commission of India already submitted a bill named ‘Prohibition of Interference with Matrimonial Alliances In The Name of Honour and Tradition Bill’. It is still pending with the Central Government.

I request the government to take immediate steps to pass the Bill on Honour Killings submitted by The Law Commission of India. Thank You sir” எனக் குறிப்பிட்டார்.