Published:Updated:

"ஆர்.என்.ரவி இனியும் பதவியில் நீடிக்கத் தகுதியில்லை; 13-ல் ஆளுநர் மாளிகை முற்றுகை" - திருமாவளவன்

திருமாவளவன்

``தேசியகீதம் இசைப்பதற்குள் ஆளுநர் பேரவையிலிருந்து வெளியேறியது அவை மீறல் மட்டுமின்றி, தேசியகீத அவமதிப்புமாகும்." - திருமாவளவன்

"ஆர்.என்.ரவி இனியும் பதவியில் நீடிக்கத் தகுதியில்லை; 13-ல் ஆளுநர் மாளிகை முற்றுகை" - திருமாவளவன்

``தேசியகீதம் இசைப்பதற்குள் ஆளுநர் பேரவையிலிருந்து வெளியேறியது அவை மீறல் மட்டுமின்றி, தேசியகீத அவமதிப்புமாகும்." - திருமாவளவன்

Published:Updated:
திருமாவளவன்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக, தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் தொடர்ச்சியாக எதிர்ப்புக்குரல் கொடுத்துவரும் நிலையில், இந்த ஆண்டின் முதல் சட்டமன்றத் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. எப்போதும்போல அரசு தயார்படுத்திக்கொடுக்கும் உரையை வாசித்து, கூட்டத்தைத் தொடங்கிய ஆர்.என்.ரவி, உரையில் இடம்பெற்றிருந்த `திராவிட மாடல்’ என்ற சொல்லையும், `பெரியார்’, `அம்பேத்கர்’ உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களையும் வாசிக்காமல் தவிர்த்துவிட்டார்.

சட்டமன்றத்திலிருந்து பாதியில் வெளியேறிய  ஆளுநர் ஆர்.என்.ரவி
சட்டமன்றத்திலிருந்து பாதியில் வெளியேறிய ஆளுநர் ஆர்.என்.ரவி

அதுமட்டுமல்லாமல், தேசியகீதம் இசைக்கப்படும் முன்பே பாதியிலேயே அவையிலிருந்து ஆர்.என்.ரவி கிளம்பிவிட்டார். இது தி.மு.க., அதன் கூட்டணிக் கட்சிகளை கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் அளவுக்குப் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், ஜனவரி 13-ம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து திருமாவளவன் தன் ட்விட்டர் பக்கத்தில், ``ஆளுநரின் நடவடிக்கை, அவரின் ஆர்.எஸ்.எஸ் முகத்தை மீண்டும் அம்பலப்படுத்தியிருக்கிறது. தேசியகீதம் இசைப்பதற்குள் ஆளுநர் பேரவையிலிருந்து வெளியேறியது அவை மீறல் மட்டுமின்றி, தேசியகீத அவமதிப்புமாகும். அவர் இனியும் பதவியில் நீடிக்கத் தகுதியில்லை.

திருமாவளவன்
திருமாவளவன்

எனவே, அவர் பதவி விலக வலியுறுத்தி ஜனவரி-13 அன்று வி.சி.க சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும். ஆளுநரின் போக்குகள் ஏற்கெனவே திட்டமிட்ட ஒன்றுதான். இந்திய அரசுக்கும், மாநில அரசுக்குமிடையில் முரண்பாடுகளை உருவாக்கி, அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கம். இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்" எனப் பதிவிட்டிருக்கிறார்.