Published:Updated:

"அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த திட்டமிட்டுதான் ஆளுநர் இதைச் செய்திருக்கிறார்" - திருமாவளவன் தாக்கு!

திருமாவளவன்

``ஆளுநர் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இதைச் செய்யவில்லை. அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டுதான் இதைச் செய்திருக்கிறார்." - திருமாவளவன்

"அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த திட்டமிட்டுதான் ஆளுநர் இதைச் செய்திருக்கிறார்" - திருமாவளவன் தாக்கு!

``ஆளுநர் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இதைச் செய்யவில்லை. அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டுதான் இதைச் செய்திருக்கிறார்." - திருமாவளவன்

Published:Updated:
திருமாவளவன்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்துகொண்ட விதம், ஆளும் திமுகவையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் அவருக்கெதிராக கடும் எதிர்ப்புக்குள்ளாக்க வைத்திருக்கிறது. அந்தவரிசையில், ஜனவரி 13-ம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்போவதாக வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன், அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தவேண்டுமென்று திட்டமிட்டுதான் ஆளுநர் இதைச் செய்திருப்பதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார்.

திருமாவளவன்
திருமாவளவன்

அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ``ஆளுநருக்கும் முதல்வருக்குமிடையிலான கருத்து முரண் அல்ல. அது இந்திய ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்குமிடையிலான உறவு மற்றும் அதிகாரங்கள் தொடர்பான முரண்பாடு. ஆளுநர் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இதைச் செய்யவில்லை. அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டுதான் இதைச் செய்திருக்கிறார்.

ஏற்கெனவே அரசின் சார்பில் தயாரிக்கப்பட்ட உரை அவரின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு அவருடைய ஒப்புதலைப் பெற்ற பிறகுதான், சட்டப்பேரவையில் ஆளுநர் படிப்பதற்கு வைக்கப்படுகிறது. ஆளுநர் ஒப்புதல் அளித்த பிறகுதான் அது அச்சுக்கே செல்கிறது. ஆக ஆளுநரின் ஒப்புதலோடு அச்சிடப்பட்ட உரையை அவர் அதில் உள்ளவாறு படிக்காமல் சில பகுதிகளையும், சில வார்த்தைகளையும் தவிர்த்திருக்கிறார். சிலவற்றை தன்னுடைய விருப்பம்போல் இணைத்து வாசித்திருக்கிறார்.

சட்டமன்றத்திலிருந்து பாதியில் வெளியேறிய ஆளுநர் ஆர்.என்.ரவி
சட்டமன்றத்திலிருந்து பாதியில் வெளியேறிய ஆளுநர் ஆர்.என்.ரவி

இது சங்பரிவாரர்களின் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட செயல் திட்டங்களில் ஒன்று என்றுதான் உணரமுடிகிறது. இதை மீறி படிக்கக் கூடாது, புதிதாக எதையும் நினைக்கக் கூடாது என்பது அவருக்குத் தெரியாதது அல்ல. ஏற்கெனவே அவர் நாகலாந்தில் ஆளுநராக இருந்தவர்தான். எனவே அவருக்கு விதிமுறைகள் என்னவென்று தெரியும். அவை மரபுகள் என்னவென்று தெரியும். அவர் இருக்கின்ற பொறுப்பு என்பது அரசமைப்புச் சட்ட பிரதிநிதி என்பதையும் அறிவார்" என்று கூறினார்.