Published:Updated:

``பிரச்னையை சொல்லுங்க, தீர்த்து வைக்கிறேன்!’’ - தரையில் அமர்ந்து குறைகளைக் கேட்ட வேலூர் கலெக்டர்

தரையில் அமர்ந்திருக்கும் மாவட்ட ஆட்சியர்

தரையில் அமர்ந்து பெண்ணிடம் குறைகளைக் கேட்ட வேலூர் மாவட்ட ஆட்சியரின் நற்செயல், பொது மக்களிடம் கவனம் பெற்றிருக்கிறது.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர்வு நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. பொது மக்கள் பலரும் கோரிக்கை மற்றும் புகார் தொடர்பாக மனுக்களை அளிக்க வந்தனர். ஒதியத்தூர் மலை கன்னிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி என்ற பெண்ணும் மனு கொடுக்க வந்திருந்தார். அப்போது அவர் திடீரென கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த காயிதே மில்லத் அரங்கிற்கு முன்பு தரையில் அமர்ந்தபடி கதறி அழுதார். மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் வெளியே வந்து அவரும் தரையில் அமர்ந்து, அந்தப் பெண்ணிடம் பிரச்னைக் குறித்து கேட்டார். அந்தப் பெண், தன் தந்தை பெயரில் கொடுக்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாவில் குளறுபடி இருப்பதாகவும், அதனை சரிசெய்து தருமாறும் கூறினார்.

தரையில் அமர்ந்திருக்கும் மாவட்ட ஆட்சியர்
தரையில் அமர்ந்திருக்கும் மாவட்ட ஆட்சியர்

பிரச்னைகளை பொறுமையாக அமர்ந்து கேட்ட மாவட்ட ஆட்சியர், உடனே விசாரித்து தீர்வு காணும்படி மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்திக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்து அந்தப் பெண் புறப்பட்டுச் சென்றார். மாவட்ட ஆட்சியரின் இந்தச் செயல், அங்கிருந்த அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு வேலூர் அருகே ரங்காபுரத்தில், தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற காளை மாடு ஒன்று, விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தது. அந்த வழியாக சென்ற மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் காரை நிறுத்தச் சொல்லி, கீழே இறங்கி வந்து மாட்டை மீட்டு சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மாவட்ட ஆட்சியரின் இப்படியான நற்செயல்கள், வேலூர் மக்களிடம் மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது.