Published:Updated:

“நான் கத்துக்குட்டி இல்லை!”

கதிர் ஆனந்த்
பிரீமியம் ஸ்டோரி
கதிர் ஆனந்த்

கதிர் ஆனந்த் காட்டம்!

“நான் கத்துக்குட்டி இல்லை!”

கதிர் ஆனந்த் காட்டம்!

Published:Updated:
கதிர் ஆனந்த்
பிரீமியம் ஸ்டோரி
கதிர் ஆனந்த்
துரைமுருகனின் மகனும், வேலூர் எம்.பி-யுமான கதிர் ஆனந்த்தைச் சுற்றிச் சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லை. அவருக்கு எதிராக உள்ளடி வேலைகள் நடப்பதாக அவரின் ஆதரவாளர்கள் புலம்புகிறார்கள். ‘நேரடி அரசியலில் அனுபவம் இல்லாத கத்துக்குட்டி’ என்றும் அவர்மீது விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. இவற்றையெல்லாம் கதிர் ஆனந்திடமே கேட்டோம்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘‘கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் வேலூர் மாவட்ட நிர்வாகம் குழப்பத்தை ஏற்படுத்துவதாகச் சொல்லப்படுகிறதே?’’

‘‘சுகாதாரத்துறையும், வேலூர் மாவட்ட கலெக்டரும் வெளியிடும் பட்டியலில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முரண்பட்டிருக்கிறது. இதில் வெளிப்படைத் தன்மை இல்லை. ஒரு நாளைக்கு எத்தனை பரிசோதனைகள் செய்யப்படுகின்றன என்ற தகவலைச் சொல்ல மறுக்கின்றனர். தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் தரமான உணவு தருவதில்லை. அடிப்படை வசதிகள் மோசமாக இருக்கின்றன.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘ஊரடங்கில் நீங்களும் உங்கள் தந்தையாரும் வீட்டில் என்ன செய்கிறீர்கள்?’’

 துரைமுருகனுடன்...
துரைமுருகனுடன்...

‘‘கட்சிக்காரர்களுடன் போனில் பேசும் நேரம் போக, மற்ற நேரங்களில் அப்பா வார இதழ்கள் உள்ளிட்ட புத்தகங் களுடன்தான் நேரத்தைச் செலவிடுகிறார். அண்ணா, கலைஞருடன் இருந்த காலங்களைப் பற்றிச் சின்னச் சின்ன குறிப்புகளை எழுதிவருகிறார். அவற்றைத் தொகுத்து புத்தகமாகவும் வெளியிட விருக்கிறார். நான் சமூக வலைதளங்களில் அதிக நேரத்தைச் செலவிடுகிறேன். உள்ளூர்ச் செய்திகள் முதல் உலகச் செய்திகள் வரை தெரிந்துகொள்வேன். குழந்தைகளுக்காகவும் நேரத்தை ஒதுக்குகிறேன்.’’

‘‘ `வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரத்துடன் தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்கு மறைமுகமாக மோதல் இருக்கிறது’ என்று பேச்சு அடிபடுகிறதே?’’

‘‘எங்களுக்கும் கலெக்டருக்கும் எந்த மனக்கசப்பும் இல்லை. நாங்கள் மக்களை தினந்தோறும் சந்திப்பவர்கள். மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். மக்கள் பிரச்னைகளைத் தீர்க்கக்கோரி கலெக்டரிடம் கோரிக்கைவைக்கிறோம். சில பிரச்னைகளைத் தீர்க்க முடியாது என்கிறார் கலெக்டர். இப்படித் தொகுதிப் பிரச்னைகளைத் தவிர்த்து தனிப்பட்ட முறையில் கலெக்டருக்கும் எங்களுக்கும் எந்த மோதலும் இல்லை.’’

‘‘சமூக வலைதளங்களில், ‘நீங்கள் எந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும், அதில் விளம்பரம் தேடுகிறீர்கள்... நீங்கள் ஒரு கத்துக்குட்டி’ என்றெல்லாம் உங்களுக்கு எதிராக ஓர் கூட்டமே செயல்படுகிறதே... அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

கதிர் ஆனந்த்
கதிர் ஆனந்த்

‘‘நான் விளம்பரம் தேட வேண்டிய அவசியமில்லை; கத்துக்குட்டியும் இல்லை. நானும் எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்களும் மக்களின் பிரச்னைகளுக்காக இந்த அரசைத் தட்டிக் கேட்கிறோம். அதைப் பாராட்டி, செய்தி வெளியிட யாரும் தயாராக இல்லை. ஆனால், என் பெயரில் ஐந்துக்கும் மேற்பட்ட போலி ஃபேஸ்புக் கணக்குகளை ஆரம்பித்து அவதூறு பரப்புகின்றனர். என்னுடைய ஒரிஜினல் ஃபேஸ்புக், ட்விட்டர் கணக்கு எது என்பது மக்களுக்குத் தெரியும்.’’

‘‘உங்களுக்கு எதிராக உள்ளடி வேலை நடப்பதாக தி.மு.க-வில் பேசிக்கொள்கிறார்கள், அது உண்மையா?’’

‘‘இல்லை. தி.மு.க-வுக்கு எதிரான வர்கள்தான் இப்படிப் பரப்புகின்றனர். இதைப் பற்றியெல்லாம் நினைத்து சோர்வடையாமல் என்னுடைய வேலையைப் பார்த்துக்கொண்டே இருப்பேன். தி.மு.க தலைமை என் மேல் நம்பிக்கை வைத்துத்தான் எம்.பி சீட் கொடுத்தது. அந்த நம்பிக்கை வீண் போகாமல் நடந்துகொள்வேன்.’’

‘‘மது ஆலைகள் விவகாரத்தில், ‘டாஸ்மாக் கடையை முதலில் மூடச் சொல்லுங்கள்.. அப்புறம் தி.மு.க-வினர் நடத்தும் மது ஆலைகளை மூடுகிறோம்’ என்று சமீபத்தில் உங்கள் தந்தை ஜூனியர் விகடனுக்குப் பேட்டி கொடுத்திருந்தார். தந்தையின் கருத்தை ஏற்கிறீர்களா?’’

‘‘ஆமாம், சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். ஆட்சி அதிகாரம் அவர்களின் கையில் இருக்கிறது. அவர்கள் நினைத்தால் டாஸ்மாக் கடைகளையும் பார்களையும் இழுத்து மூட உத்தரவு போடலாம். அப்படிச் செய்தால், மது ஆலைகளையும் தானாக மூடப்போகின்றனர். கையில் வெண்ணெய் இருக்க, நெய்க்கு ஏன் அலைய வேண்டும்...’’

‘‘வாணியம்பாடி நகரப் பொறுப்பாளர் சாரதி குமார் பெண் விவகாரத்தில் சிக்கியதால், அவரை அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கியது தி.மு.க தலைமை. நடவடிக்கை எடுத்த குறுகியகாலத்தில் சாரதி குமாருக்கு அந்தப் பதவி மீண்டும் கிடைத்துள்ளது. இதன் பின்னணியில் நீங்கள் இருப்பதாகச் சொல்கிறார்களே... என்ன காரணம்?’’

‘‘சாரதி குமார்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை தலைமை பரிசீலனை செய்து மீண்டும் பதவி வழங்கியிருக்கிறது. கட்சி உள் விவகாரங்களில் நான் எப்போதுமே தலையிடுவது கிடையாது.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism