Election bannerElection banner
Published:Updated:

10 தொகுதிகளில் சிக்ஸர்; 3-ல் கிளீன் போல்டு! - தி.மு.க கோட்டையாக மாறிய வேலூர்

வேலூர்
வேலூர்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில், 10 தொகுதிகளை தி.மு.க கூட்டணி கைப்பற்றியிருக்கிறது. இவற்றில், மீண்டும் களமிறங்கியிருந்த ஏழு சிட்டிங் எம்.எல்.ஏ-க்களும் தங்களது தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டனர்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலுள்ள 13 சட்டமன்றத் தொகுதிகளில் வாணியம்பாடி, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய மூன்று தொகுதிகளை கூட்டணிக்குக் கொடுத்த தி.மு.க., மீதமுள்ள 10 தொகுதிகளில் நேரடியாகக் களமிறங்கியது. இவற்றில், ஏழு சிட்டிங் எம்.எல்.ஏ-க்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், தி.மு.க அமோக வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்திருக்கிறது.

வேலூர் எம்.எல்.ஏ கார்த்திகேயன்
வேலூர் எம்.எல்.ஏ கார்த்திகேயன்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 10 தொகுதிகளை தி.மு.க கூட்டணி கைப்பற்றியிருக்கிறது. அதேசமயம், வாணியம்பாடி, கே.வி.குப்பம், அரக்கோணம் ஆகிய மூன்று தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டிருக்கிறது. வாணியம்பாடி தொகுதியில் தி.மு.க கூட்டணி சார்பில் களமிறங்கிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் முகமது நயீம் சுமார் 4,900 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க வேட்பாளர் செந்தில்குமாரிடம் தோல்வியடைந்தார்.

அதேபோல், கே.வி.குப்பம் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர் பூவை ஜெகன்மூர்த்தியிடம் தி.மு.க வேட்பாளர் சீத்தாராமன் தோல்வியடைந்தார். அரக்கோணத்திலும் அ.தி.மு.க வேட்பாளர் சு.ரவியிடம் வி.சி.க வேட்பாளர் கௌதமசன்னா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார். இந்த மூன்று தொகுதிகளிலும் தோல்விக்குக் காரணம் அந்த வேட்பாளர்களுக்கு ஃபேஸ் வேல்யூ இல்லாததே என்கிறது தி.மு.க தரப்பு.

ராணிப்பேட்டை எம்.எல்.ஏ ஆர்.காந்தி
ராணிப்பேட்டை எம்.எல்.ஏ ஆர்.காந்தி

அதேசமயம், வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, ஆம்பூர், திருப்பத்தூர், ஆற்காடு, ராணிப்பேட்டை ஆகிய ஏழு சிட்டிங் எம்.எல்.ஏ-க்களும் வெற்றி வாகைச்சூடி தங்களது தொகுதியைத் தக்க வைத்துக்கொண்டனர். அணைக்கட்டு போன்ற ஒரு சில தொகுதிகளில் தி.மு.க ஜெயிக்கவே ஜெயிக்காது என்று கணிக்கப்பட்டது. அதையெல்லாம் தவிடு பொடியாக்கி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் உதயசூரியனின் கோட்டையென மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறார்கள் தி.மு.க-வினர்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு