திராவிடக் கட்சிகளால் தூக்கியெறியப்பட்டவர்களுக்கு மாநிலப் பொறுப்பு வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறது, தமிழக பாரதிய ஜனதா.

‘கமலாலயமே கதி’ என்று கிடந்த வேலூர் மாநகராட்சியின் முன்னாள் மேயர் கார்த்தியாயினிக்கும் மாநிலச் செயலாளர் நாற்காலி பகிரப்பட்டுள்ளது. கார்த்தியாயினியுடன் சேர்த்து ஒன்பது பேர் மாநிலச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். சுவாரஸ்யம் என்னவென்றால், கார்த்தியாயினியை ‘தமிழக பா.ஜ.க-வின் நயன்தாரா’ என்று வர்ணிக்கத் தொடங்கியிருக்கின்றனர். இது, பொதுத்தளத்தில் கேலிக்கூத்தாகவும் மாறியிருக்கிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில், 2014-ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பளித்த பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹாவையே கலங்கடித்து, சிக்கலில் மாட்டிக்கொண்டவர்தான் இந்த கார்த்தியாயினி. வேலூர் மேயராக இருந்த கார்த்தியாயினி, ஜெயலலிதாவிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக நீதிபதி குன்ஹா வைக் கண்டித்து மாமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றினார். பிறகு, நீதிபதியைக் களங்கப்படுத்திய குற்றத் துக்காக, பத்திரிகைகள் மூலம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வைத்து கார்த்தியாயினிக்குத் தலையில் குட்டுவைத்தது நீதிமன்றம்.

இப்படி அ.தி.மு.க-வுக்காக ஒவ்வொரு நாளும் போராடி, ஸ்டன்ட் அடித்த கார்த்தியாயினி, ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஆற்காடு தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வான வி.கே.ஆர்.சீனிவாசனுடன் நட்பு பாராட்ட ஆரம்பித்தார். அப்படியே பா.ஜ.க-வில் ஐக்கியமாகிவிட்டார். மூன்று ஆண்டுகளாக மகளிரணியில் இருந்துவந்த அவர், இப்போது உச்சம் தொட்டியிருக்கிறார். மாநிலச் செயலாளர் பதவியுடன், திருப்பத்தூர் மாவட்டப் பார்வையாளர் பொறுப்பும் கார்த்தியாயினிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கார்த்தியாயினியுடன் நட்பு பாராட்டும் வி.கே.ஆர்.சீனிவாசனும் தேசிய பொதுக்குழு உறுப்பினராகவும், திருவண்ணாமலை தெற்கு மாவட்டப் பார்வையாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

‘நயன்தாரா’ என்று புகழப்படுவதற்கான காரணத்தை அறிய கார்த்தியாயினியைத் தொடர்புகொண்டோம். நம்மிடம் அவர், ‘‘அம்மாவுக்கு மட்டுமே என்னுடைய விசுவாசம். அந்தத் தலைமைக்கான இடத்தில் அமர வேறு யாருக்கும் தகுதியில்லை. அதனால்தான் பா.ஜ.க-வுக்கு வந்துவிட்டேன். பா.ஜ.க-வுக்காக அதிக உழைப்பைத் தரவிருக்கிறேன். வீடுதோறும் தாமரையைக் கொண்டு செல்வேன்.

அனைத்து விமர்சனங்களையும் பாசிட்டிவ்வாகத்தான் எடுத்துக் கொள்கிறேன். `நயன்’, `நயன்தாரா’ என்று பேசினாலும், அதைப் பற்றிக் கவலைப்படப்போவதில்லை. சூரியனைச் சுற்றி ஒன்பது கோள்கள் இருப்பதைப்போல, பா.ஜ.க-வுக்காக தமிழகத்தில் ஒன்பது மாநிலச் செயலாளர்களை நியமித்திருக்கிறார்கள்.

தேசப் பணியிலிருக்கும் கட்சியைச் சார்ந்திருப்பதால் நான் பொய் பேச மாட்டேன்; பேசவும் கூடாது. இனி வேலூரில் தலைகாட்டுவேன். 2021 சட்டமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதியில் ‘சீட்’ கொடுத்தாலும் போட்டியிடுவேன்’’ என்றார்.

திட்டத்தோடுதான் களமிறங்கியிருக்கிறார் கார்த்தியாயினி.