Published:Updated:

வேலூர் புதிய பேருந்து நிலைய மேற்கூரையில் ஓட்டை; ஒழுகிய மழை நீர்- பறவைகளைக் காரணம் கூறும் அதிகாரிகள்

வேலூர் புதிய பேருந்து நிலையம்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் ரூ.53 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டிருக்கும் வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் மேற்கூரையிலிருந்து மழை நீர் ஒழுகியது பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலூரில் நடைபெற்றுவரும் பணிகள் தொடர்பாக அடுக்கடுக்காக... குற்றச்சாட்டுகளும், புகார்களும் எழுந்த வண்ணமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், ``லேசான மழைக்கே இப்படி ஒழுகுது... பருவமழை புயல் வந்தால் என்ன ஆகும்?" என மக்களை யோசிக்க வைத்திருக்கிறது வேலூர் புதிய பேருந்து நிலைய மேற்கூரை.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் ரூ.53 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டிருக்கும் வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் மேற்கூரையிலிருந்து மழை நீர் ஒழுகியது பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

மேலும், கட்டுமானப் பணிகள் இன்னும் முழுமையாக முடிக்கப்படாமலும்... ஆங்காங்கே செங்கல், கான்கிரீட் கம்பிகள் போடப்பட்டு பணிகள்‌ நடைபெற்று வருவதால் மக்கள் தடுக்கி விழும் அபாயமும் ஏற்பட்டிருக்கிறது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

புதிய பேருந்து நிலையத்தை ஆய்வு செய்ய இன்று அதிகாரிகள் வந்திருந்தனர். அப்போது அவர்களிடம் மழைநீர் ஒழுகியது குறித்து கேட்டபோது, ``கட்டடத்தின் மேற்கூரையில் கழுகு உள்ளிட்ட பறவைகள் வந்து கொத்துவதால் ஓட்டை ஏற்படுகிறது. அதை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவித்தனர்.

வேலூர் புதிய பேருந்து நிலைய  மேற்கூரையில் ஓட்டை; ஒழுகிய மழை நீர்- பறவைகளைக் காரணம் கூறும் அதிகாரிகள்

மேலும் இது குறித்து பொறியாளரிடம் கேட்டபோது, ``வென்டிலேட்டர் முறையில் வைக்கப்பட்டிருந்த ஜன்னல்கள் திறந்திருந்ததால், மழை நீர் அதிகமாக உள்ளே வந்துவிட்டது. மேலும் புறா, கழுகு உள்ளிட்டப் பறவைகள் மேற்கூரையில் கொத்துவதால் ஓட்டை விழுந்து மழைநீர் உள்ளே வந்துவிடுகிறது" என்றார்.