Published:Updated:

``கூட்டணிக்காக சிங்...சாங் அடிப்பவன் நானல்ல..!" - சீறும் வேல்முருகன்

வேல்முருகன்

”சீட்டுக்காக, நோட்டுக்காக, பதவிக்காக என் கண் முன்னால் நடக்கும் அநியாயங்களை பொறுத்துக்கொண்டும், பொத்திக்கொண்டும் கூட்டணி கட்சிக்காக நான் ’சிங்சாங்’ அடிக்கமாட்டேன்” – பண்ருட்டி எம்.எல்.ஏ வேல்முருகன்

``கூட்டணிக்காக சிங்...சாங் அடிப்பவன் நானல்ல..!" - சீறும் வேல்முருகன்

”சீட்டுக்காக, நோட்டுக்காக, பதவிக்காக என் கண் முன்னால் நடக்கும் அநியாயங்களை பொறுத்துக்கொண்டும், பொத்திக்கொண்டும் கூட்டணி கட்சிக்காக நான் ’சிங்சாங்’ அடிக்கமாட்டேன்” – பண்ருட்டி எம்.எல்.ஏ வேல்முருகன்

Published:Updated:
வேல்முருகன்

2021 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க-வுடன் கூட்டணி வைத்த தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், பண்ருட்டி தொகுதியில் தி.மு.க-வின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட சொரத்தூர் ராஜேந்திரன் 89,104 வாக்குகள் பெற்ற நிலையில், அவரைவிட கூடுதலாக 4,697 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார் வேல்முருகன். தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் என்.எல்.சி நிர்வாகத்திற்கு எதிராக ஜூலை 10-ம் தேதி சேத்தியாதோப்பில் நடைபெற்றக் கூட்டத்தில் வேல்முருகன், ஆளும் தி.மு.க அரசை கடுமையாக விமர்சித்துப் பேசினார். அவரின் அந்த பேச்சு தி.மு.க-வுக்குள் கடும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் பேசிய வேல்முருகன், “திராவிட மாடல் என்ற அத்தியாயத்திற்கு அடித்தளமிட்டு தி.மு.க-வை தூக்கி சுமந்தவர்கள் இந்த வன்னிய பேரினம் இல்லையா?

முதல்வர்  ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

ஆனால் இந்த இனத்தில் லாக்கப் மரணம் நிகழ்ந்தால் நிவாரணம் கிடையாது. கற்பழித்து கொன்றால் நிவாரணம் கிடையாது. கலெக்டர் பதவி கிடையாது, எஸ்.பி பதவி கிடையாது. ஐ.ஜி பதவி கிடையாது. வாரியத் தலைவர் பதவி கிடையாது. மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களே.. இந்த சாதியை பிடிக்காத, காழ்ப்புணர்ச்சி கொண்ட, வெறிபிடித்த முன்னேறிய சாதி அதிகாரிகள் உங்களிடம் தவறான தகவல்களை கூறுகிறார்கள். முதல்வர் அவர்களே உங்களுடன் இருக்கும் ஒரு கூட்டம் சாதி பார்க்கிறது. எங்கோ பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் கொடுத்தீர்கள். ஆனால் இங்கு திட்டக்குடி மட்டூரில் என் உறவு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறாள் (சிறுவர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அந்த சிறுமி கொலைசெய்யப்படவில்லை) ஆனால் இன்னும் ஒரு பைசா கொடுக்கவில்லை. ஏனிந்த பாரபட்சம்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உங்கள் கூட்டணியில் இருக்கும் வேல்முருகன் நான் கேட்கிறேன் பதில் சொல்லுங்கள். சீட்டுக்காக, நோட்டுக்காக, பதவிக்காக என் கண் முன்னால் நடக்கும் அநியாயங்களை பொறுத்துக்கொண்டு, பொத்திக்கொண்டு கூட்டணி கட்சிக்காக ’சிங்சாங்’ அடிக்கமாட்டேன். தமிழ்நாட்டில் யார் எங்கு பாதிக்கப்பட்டாலும் நிவாரணம் அறிவிக்கும் முதல்வர் அவர்களே.. அந்த ஏழை வன்னியப் பெண் செய்த தவறென்ன? சக பள்ளி மாணவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தற்போது உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் அந்த சிறுமிக்கு பத்து நாள்களாகியும் ஏன் நிவாரணம் அறிவிக்கவில்லை? உங்களுடன் நான் கூட்டணியில் இருக்கிறேன் என்பதற்காக, என் கண்முன்னே என் மக்கள் பலியாகும்போதும், வன்முறைக்கு ஆளாக்கப்படும்போதும், என்.எல்.சி-க்கு நிலத்தை கொடுத்துவிட்டு வீதிக்கு வந்து போராடும்போதும் கூட்டணி தர்மம் என்று கடந்து செல்பவன் அல்ல வேல்முருகன்.

ராமதாஸ்
ராமதாஸ்
Photo: Vikatan

பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் கேட்கிறோம். அதில் ரூபாய் 50 லட்சமாவது வழங்குங்கள். நாதியற்ற இனமா நாங்கள்? தூத்துக்குடியில் படுகொலைக்கு உள்ளான குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணமாக அறிவித்தீர்கள். ஆனால் காடம்புலியூரில் முந்திரி வியாபாரி செல்வன் என்ற வன்னியன் செத்துப் போனான். அவருக்கு எடப்பாடியும் நிவாரணம் அறிவிக்கவில்லை, நீங்களும் அறிவிக்கவில்லை என்றால் உங்களுக்கும் அவருக்கும் என்ன வித்தியாசம்? ஏன் அறிவிக்கவில்லை? தி.மு.க-வோ அ.தி.மு.க-வோ வன்னியர்களின் வாக்கு மட்டும் உங்களுக்கு வேண்டுமா? ராமதாஸ் என்ற வன்னிய தலைவர் உங்களை திட்டியதற்காக, உங்களுடன் கூட்டணியில் இருந்தபோதும், இல்லாதபோதும் விமர்சனம் செய்கிறார்கள் என்பதற்காக இரண்டு கோடி வன்னிய மக்களையும் நீங்கள் ஓரம் கட்டுவது, ஒதுக்குவது என்ன நியாயம்? தமிழ்நாட்டில் 38 மாவட்ட ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு வன்னியர்கூட அதில் இல்லை.

38 மாவட்டங்களில் இருக்கும் எஸ்.பி-க்களில் ஒருவர் கூட வன்னியர் இல்லை. ஏன்… ராமதாஸ் கொடுத்த அறிக்கை, ராமதாஸ் திட்டிய திட்டு போன்றவற்றால் அனைத்து சாதியினருக்கு எதிரானவர்களாக வன்னியர்கள் மாறி நிற்கிறார்கள். நான் கேட்கிறேன் ராமதாஸ் செய்த தவறுக்காக இரண்டு கோடி வன்னிய இனத்தை பழி வாங்குவது, ஓரம் கட்டுவது, அரசியல் உரிமைகளை தரமறுப்பது எந்தவிதத்தில் நியாயம்? எர்ணாவூர் நாராயணனுக்கு பனை வாரியம் வழங்கப்படுகிறது. மயிலாடுதுறையைச் சேர்ந்தவருக்கு மீனவர் வாரியம் வழங்கப்படுகிறது. தி.மு.க-வைச் சேர்ந்தவருக்கு குடிசைமாற்று வாரியம் வழங்கப்படுகிறது. தி.மு.க இன்று தூக்கிப் பிடிக்கும் உதயசூரியன் சின்னத்தை, எங்கள் கடலூரில் பிறந்த கோவிந்தசாமி படையாச்சி கொடுத்தது. என் கட்சி நிர்வாகிகள்மீது இதுவரை ஒரு எஸ்.சி, எஸ்.டி வழக்கு விழாமல் பார்த்துக்கொள்கிறேன்.

அப்படியும் எதுவும் பிரச்னை ஏற்பட்டால் அண்ணன் திருமாவளவனிடம் பேசி உழைக்கும் மக்களாகிய நமக்குள் பிரச்னை வேண்டாம் என்று கூறுவேன். ஆனால் இதை புரிந்துகொள்ளாத சில வன்னியர்கள் நான் ஏன் திருமாவளவனுடனும், சிந்தனைச் செல்வனுடனும் மேடையில் நிற்கிறேன் என்று விமர்சனம் செய்கிறார்கள். நான் அப்படி நிற்கவில்லை என்றால், கடந்த 40 ஆண்டுக்காலமாக பா.ம.க-வால் ஒரு பாஸ்போர்ட்கூட எடுக்க முடியாமல், அரசு வேலை செல்ல முடியாமல், டிரைவர், கண்டக்டர் வேலையைக்கூட வாங்க முடியாமல், வன்கொடுமை வழக்குகளில் சிக்கி நீங்கள் நீதிமன்றங்களில் ஏறி வருகிறீர்களே, அதைப்போல என்னுடைய காலத்தில் வன்னிய மக்களின் வாழ்வு சூன்யமாகிவிடக் கூடாது என்பதற்காகத்தான் அண்ணன் திருமாவளவனுடன் சமூக நல்லிணக்கத்துடன் நான் கைகோத்திருக்கிறேன்” என்றார்.