Published:Updated:

``மற்றவர்களின் மத நம்பிக்கைகளை இழிவுபடுத்த இங்கு யாருக்கும் உரிமையில்லை..!" - வெங்கைய நாயுடு

வெங்கைய நாயுடு

``ஒருவர் தனது மதத்தைப் பெருமைப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அதற்காக மற்றவர்களின் மதத்தை இழிவுபடுத்த இங்கு யாருக்கும் உரிமை இல்லை" - வெங்கைய நாயுடு

``மற்றவர்களின் மத நம்பிக்கைகளை இழிவுபடுத்த இங்கு யாருக்கும் உரிமையில்லை..!" - வெங்கைய நாயுடு

``ஒருவர் தனது மதத்தைப் பெருமைப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அதற்காக மற்றவர்களின் மதத்தை இழிவுபடுத்த இங்கு யாருக்கும் உரிமை இல்லை" - வெங்கைய நாயுடு

Published:Updated:
வெங்கைய நாயுடு

இந்தியாவில் மத ரீதியான மோதல்கள் அண்மைக்காலமாக அதிகரித்திருக்கின்றன. இந்த நிலையில் துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு, ``மற்றவர்களின் மத நம்பிக்கைகளை இழிவுபடுத்த இங்கு யாருக்கும் உரிமை இல்லை" எனக் கூறியுள்ளார்.

வெங்கைய நாயுடு
வெங்கைய நாயுடு
Rajya Sabha TV

இது தொடர்பாக துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியொன்றில், ``மதச்சார்பின்மை மற்றும் மற்றவர்களின் கருத்துகளுக்குச் சகிப்புத்தன்மை என்பது, இந்தியாவின் நெறிமுறைகளில் ஒரு முக்கிய பகுதியாகும். அதுமட்டுமல்லாமல், பன்மைத்துவம் மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றின் மதிப்புகள் மீதான இந்தியாவின் உறுதிப்பாட்டை ஆங்காங்கே நடக்கும் சில சம்பவங்களால் குறைத்து மதிப்பிட முடியாது. ஒருவர் தனது மதத்தைப் பெருமைப்படுத்திக் கொள்ளலாம். ஆனால், அதற்காக மற்றவர்களின் மத நம்பிக்கைகளை இழிவுபடுத்த இங்கு யாருக்கும் உரிமை இல்லை" எனப் பேசியதாக அவரின் அலுவலகம் தகவல் தெரிவித்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆர்.எஸ்.எஸ்
ஆர்.எஸ்.எஸ்

இதேபோல் `காளி' போஸ்டர் விவகாரத்தில், ``படைப்புச் சுதந்திரம் என்பது இந்தியாவின் பாரம்பர்யம். ஆனால், ஒருவரின் மத உணர்வுகளை யாரும் புண்படுத்தக் கூடாது. ஒவ்வொருவரும் இதில் கவனமாக இருக்க வேண்டும்" என ஆர்.எஸ்.எஸ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.