Published:Updated:

``பட்டினப்பிரவேசத்தை உலகறியச்செய்த கி.வீரமணிக்கு நன்றி!” - மக்களுக்கு இனிப்பு வழங்கிய மதுரை ஆதீனம்

இனிப்பு வழங்கும் மதுரை ஆதீனம்

அரசின் உத்தரவை எதிர்த்து வெற்றிபெற்றதற்காக மதுரை ஆதீனகர்த்தர் மடத்தைவிட்டு வெளியில் வந்து, மக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடியது இதுவே முதன்முறை என்கிறார்கள்.

``பட்டினப்பிரவேசத்தை உலகறியச்செய்த கி.வீரமணிக்கு நன்றி!” - மக்களுக்கு இனிப்பு வழங்கிய மதுரை ஆதீனம்

அரசின் உத்தரவை எதிர்த்து வெற்றிபெற்றதற்காக மதுரை ஆதீனகர்த்தர் மடத்தைவிட்டு வெளியில் வந்து, மக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடியது இதுவே முதன்முறை என்கிறார்கள்.

Published:Updated:
இனிப்பு வழங்கும் மதுரை ஆதீனம்

தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேச நிகழ்வுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை, அரசால் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, மதுரை ஆதீனம் தலைமையில் இந்து அமைப்பினர் இன்று இனிப்பு வழங்கிக் கொண்டாடினார்கள்.

மதுரை ஆதீனம்
மதுரை ஆதீனம்

பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கப்பட்டதற்கு அரசுக்கு எதிராகக் கடுமையாக மதுரை ஆதீனம் பேசினார். அதைத் தொடர்ந்து ஆளுங்கட்சியினரால் தன் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்றும், இது குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சரிடம் புகார் தெரிவிக்கவிருப்பதாகவும் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில் படினப்பிரவேச நிகழ்ச்சிக்கு அரசால் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து பா.ஜ.க உள்ளிட்ட இந்து அமைப்பினர் அதை வெற்றியாகக் கொண்டாடிவருகிறார்கள்.

மதுரை ஆதீனம்
மதுரை ஆதீனம்

மதுரை ஆதீன மடத்தின் வெளியே வந்த, மதுரை ஆதீனமான ஹரிஹர தேசிக பரமாச்சாரியர் மக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனம், "ஆதீன மடங்களின் சமய, சம்பிரதாயங்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும், எல்லோரையும் அனுசரித்துப் போக வேண்டும் என்றும் அரசை கேட்டுக்கொள்கிறேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பட்டினப்பிரவேசம் என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்த நிலையில், அதைச் சர்ச்சையாக்கி இப்போது உலகறியச் செய்த திராவிட கழகத் தலைவர் கி.வீரமணிக்கு நன்றியும் வாழ்த்துகளும்.

`அமைச்சர்கள் சாலையில் நடமாட முடியாது’ என மன்னார்குடி ஜீயர் தெரியாமல் சொல்லிவிட்டார், இனிமேல் அப்படிச் சொல்ல மாட்டார்.

மதுரை ஆதீனம், மன்னார்குடி ஜீயர்
மதுரை ஆதீனம், மன்னார்குடி ஜீயர்

ஆதீன மடத்தில் பாஜக, இந்து அமைப்புகள் தலையீடு இருப்பதைப் பற்றி யார், என்ன குற்றச்சாட்டு வைத்தாலும் அதைக் கண்டுகொள்ளப்போவதில்லை.

முந்தைய ஆதீனம் அதிமுக, திமுக ஆட்சிகளின்போது அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். நான் எந்தக் கட்சிக்கும் ஆதரவு கிடையாது.

ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் மிரட்டல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இரண்டு நபர் மீது நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ஆதீன மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கஞ்சனூர் சுக்கிரன் கோயிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார்கள். அது குறித்து அரசுக்குப் புகார் அனுப்பப்பட்டுள்ளது.

தருமபுர ஆதீனம்
தருமபுர ஆதீனம்

ஏழை, எளியோர் உள்ளிட்ட அனைத்து மக்களும் முழுமையாக சுவாமி தரிசனம் செய்ய ஏதுவாக, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் சிறப்பு தரிசனக் கட்டணம் வாங்கும் நடைமுறையை அரசு ரத்து செய்ய வேண்டும்” என்றவரிடம்...

'சந்நியாசி தர்மங்களை ஆதீனங்கள் முறையாகப் பின்பற்றுகிறார்களா?' என எம்.பி சு.வெங்கடேசன் வைத்த குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு,

``சந்நியாச தர்மங்களை நான் முழுமையாகப் பின்பற்றுகிறேன்" என்றவர்,

பாதுகாப்பு அச்சுறுத்தல் புகார் குறித்த கேள்விக்கு,

"மத்திய அரசு பாதுகாப்பு அளிக்கும்" என்றார்.

மதுரை ஆதீன மடத்தில் இதுவரை இல்லாத வகையில் அரசின் உத்தரவை எதிர்த்து வெற்றிபெற்றதற்காக ஆதீனகர்த்தர் மடத்தைவிட்டு வெளியில் வந்து மக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடியது இதுவே முதன்முறை என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism