Published:Updated:

நான்கு மாநிலங்களில் பெற்ற வெற்றி... 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-வுக்கு கைகொடுக்குமா?

மோடி, ஜே.பி நட்டா, அமித் ஷா

நான்கு மாநிலங்களில் பா.ஜ.க பெற்றிருக்கும் வெற்றி, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அந்தக் கட்சிக்குக் கைகொடுக்குமா? - என்பதை அலசுகிறது இந்தக் கட்டுரை!

நான்கு மாநிலங்களில் பெற்ற வெற்றி... 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-வுக்கு கைகொடுக்குமா?

நான்கு மாநிலங்களில் பா.ஜ.க பெற்றிருக்கும் வெற்றி, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அந்தக் கட்சிக்குக் கைகொடுக்குமா? - என்பதை அலசுகிறது இந்தக் கட்டுரை!

Published:Updated:
மோடி, ஜே.பி நட்டா, அமித் ஷா

நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தலில், நான்கு மாநிலங்களில் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைத்திருக்கிறது பா.ஜ.க. உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய மூன்று மாநிலங்களிலும் பெரும்பான்மையோடு வெற்றியடைந்திருக்கிறது பா.ஜ.க. கோவாவில் பெரும்பான்மைக்கு 21 இடங்கள் தேவைப்படும் நிலையில், 20 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. போன முறை பெரும்பான்மைக்கு எட்டு இடங்கள் குறைவாகப் பெற்றிருந்தே ஆட்சியமைத்துவிட்ட பா.ஜ.க-வுக்கு, இந்த முறை ஆட்சியமைப்பது ஒரு பெரிய விஷயமாக இருக்காது. எனவே ஐந்தில், நான்கு மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சி என்பது உறுதியாகிவிட்டது. இந்த நான்கு மாநிலங்களில் பெற்ற வெற்றியை இந்தியா முழுவதும் இருக்கும் பா.ஜ.க தொண்டர்களை உற்சாகத்துடன் கொண்டாடிவருகின்றனர்.

ட்விட்டரில் #BJPAgain என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி, ``சில மாநிலங்களில் நிச்சயம் தொங்கு சட்டமன்றம்தான் என்றார்கள். ஆனால், நான்கு மாநிலங்களிலும் மக்களின் நம்பிக்கையைப் பெற்று எளிதாக வெற்றிபெற்றிருக்கிறோம். கோவாவிலும் எங்களுக்கு ஆதரவு தரச் சிறிய கட்சியைச் சேர்ந்தவர்களும், சுயேச்சைகளும் வரிசையில் நிற்கிறார்கள். 2024 தேர்தலை நினைத்து எதிர்க்கட்சியினர்கள் பீதியடைந்திருக்கிறார்கள்'' என்றெல்லாம் கருத்துகளைப் பதிவிட்டுவருகிறார்கள்.

பாஜக
பாஜக

நான்கு மாநிலங்களில் வெற்றிபெற்றதை அடுத்து டெல்லியிலுள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்தில், தொண்டர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, ``நான்கு மாநிலங்களில் நாம் வெற்றிபெற்றிருப்பது, 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான முடிவை இப்போதே காட்டியிருக்கிறது'' என்றார். இதையடுத்து, `இந்த நான்கு மாநிலங்களில் பெற்ற வெற்றி, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு கைகொடுக்குமா?' என்கிற விவாதங்கள் கிளம்பியிருக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கும் அரசியல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர், ``இந்தியாவுக்கான போர் (மத்தியில் ஆட்சியமைப்பதைக் குறிப்பிடுகிறார்) என்பது 2024-ல் நடத்தப்பட்டு, முடிவுகள் எட்டப்படுமே தவிர, எந்த மாநிலத் தேர்தல் முடிவுகளையும் வைத்து மத்தியில் ஆட்சியமைக்க முடியாது. இது மோடிக்கும் தெரியும். மாநிலத் தேர்தல் முடிவுகளை வைத்து, மக்கள் மத்தியில் உளவியல் ரீதியாக விளையாடும் புத்திசாலித்தனமான முயற்சிதான் இது. இந்த போலியான கதைகளைக் கேட்டு ஏமாந்துவிடாதீர்கள்!'' என்று பதிவிட்டிருக்கிறார்.

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ``மேற்குவங்கத்தில் மட்டுமே வெற்றிபெற்ற மம்தாவை, தேசிய அளவிலான தலைவராகக் காட்டும் முயற்சியில் பிரசாந்த் கிஷோரும் இணைந்திருந்தார். ஒரு மாநிலத்தில் மட்டுமே வெற்றிபெற்றவரைத் தேசிய அளவில் பெரிய தலைவராக அவர் காட்ட நினைத்தது சரியா? ஆனால், எங்கள் கட்சியோ இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உ.பி உள்பட நான்கு மாநிலங்களில் வெற்றிபெற்றிருக்கிறது. இதைவைத்து 2024-ல் மக்கள் எங்கள் பக்கம் நிற்பார்கள் என்று சொல்வதில் தவறென்ன இருக்கிறது?'' என்று கொந்தளித்து வருகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த விவகாரம் குறித்துப் பேசும் தேசிய அரசியல் பார்வையாளர்கள் சிலர், ``ஐந்து மாநிலத் தேர்தலில், பஞ்சாப் தவிர மற்ற நான்கு மாநிலங்களையும் தன்வசப்படுத்தியிருக்கிறது பா.ஜ.க. குறிப்பாக உத்தரப்பிரதேசத்திலும் ஆட்சியைத் தக்க வைத்திருக்கிறது. 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக நடந்த 2017 உ.பி சட்டமன்றத் தேர்தலில் பெரு வெற்றிபெற்றது பா.ஜ.க. அப்போதே, `2019-ல் மத்தியிலும் எங்கள் ஆட்சிதான்' என்றார்கள் பா.ஜ.க-வினர். இப்போது நான்கு மாநிலங்களிலும் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஆட்சியில் அமரப்போகிறார்கள். அதனால் நிச்சயம் இதைவைத்து தங்களுக்கான செல்வாக்கை அதிகப்படுத்திக்கொள்ளப் பார்ப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அமித்ஷா - நரேந்திர மோடி
அமித்ஷா - நரேந்திர மோடி

இந்த நான்கு மாநிலத் தேர்தல் வெற்றி, 2024-ல் பா.ஜ.க-வுக்கு கைகொடுக்குமா என்று கேட்டால், நிச்சயம் கைகொடுக்கும் என்பதுதான் பதில். ஆட்சியிலிருக்கும் மாநிலங்களில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது பா.ஜ.க-வுக்கு எளிதாக இருக்கும். அதே நேரத்தில், பல்வேறு மாநிலங்களிலும் பா.ஜ.க-வுக்கு எதிராக நிற்கும் கட்சிகள் பலமாக இருக்கின்றன. பா.ஜ.க ஆட்சியிலிருக்கும் சில மாநிலங்களில்கூட எதிர்க்கட்சிகள் வலுவாக இருக்கின்றன. பீகாரில் தேஜஸ்வி யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம், உ.பி-யில் சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் இதற்கு உதாரணம். அப்படியிருக்கையில், 2024-ல் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டால், அது பா.ஜ.க-வுக்கு தலைவலியாகவே அமையும்'' என்கிறார்கள்.

மூன்றாவது அணி முன்னெடுப்பை வேகமாக செயல்படுத்தி வந்த மேற்குவங்க முதல்வர் மம்தாவும் 5 மாநில தேர்தல் முடிவுக்குப் பின்னர், எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்றும் காங்கிரஸ் ஒப்புக்கொண்டால் இணைந்து செயல்பட தயார் என்றும் தெரிவித்திருக்கிறார். மேலும் அவரும், இந்த 5 மாநில தேர்தல் முடிகள் 2024 தேர்தலில் கட்டாயம் எதிரொலிக்காது என கூறியிருப்பது கவனிக்கதக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism