Published:Updated:

வைரல் வீடியோ: வேலூரில் தூய்மைப் பணியாளர்களுடன் திமுக கவுன்சிலரின் கணவர் வாக்குவாதம்! - என்ன நடந்தது?

வேலூர் மாநகராட்சி

வேலூரில், தூய்மைப் பணியாளர்களை பெண் கவுன்சிலரின் கணவர் கடுஞ்சொற்களால் திட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

வைரல் வீடியோ: வேலூரில் தூய்மைப் பணியாளர்களுடன் திமுக கவுன்சிலரின் கணவர் வாக்குவாதம்! - என்ன நடந்தது?

வேலூரில், தூய்மைப் பணியாளர்களை பெண் கவுன்சிலரின் கணவர் கடுஞ்சொற்களால் திட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

Published:Updated:
வேலூர் மாநகராட்சி

வேலூர் மாநகராட்சியின் 44-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் தவமணி. இவரின் கணவர் தாமோதரன், வேலூர் மாநகர தி.மு.க-வில், சங்கரன்பாளையம் பகுதியை உள்ளடக்கிய 9-வது பகுதிச் செயலாளராகக் கட்சிப் பதவி வகிக்கிறார். அதுமட்டுமின்றி, வேலூர் நகராட்சியாக இருந்த சமயத்தில் 2 முறை கவுன்சிலராகவும் இருந்திருக்கிறார். இந்த நிலையில், இன்று காலையிலிருந்தே தாமோதரன் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. தூய்மைப் பணியாளர்களுடன் அவர் வாக்குவாதம் செய்வதோடு, கடுஞ்சொற்களால் திட்டுவதைப்போன்ற காட்சிகளும், அதில் இடம் பெற்றுள்ளன. பதிலுக்கு தூய்மைப் பணியாளர்களின் கூட்டத்திலிருந்து, மறைமுகமாக வீடியோ எடுத்த நபரும் தாமோதரனுடன் வாக்குவாதம் செய்கிறார்.

தாமோதரன்
தாமோதரன்

இந்த வீடியோக்கள் வைரலாகவே, அது குறித்து விசாரித்தோம். தூய்மைப் பணியாளர்கள் நிறையப் பேர் பல ஆண்டுகளாக தற்காலிமாகப் பணியாற்றி வருகிறார்கள். ‘‘கூலி உயர்வு, முறையான பி.எஃப் தொகை, நேரடியாக வங்கிக்கணக்கில் ஊதியத்தை செலுத்துவது’’ போன்ற கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். கடந்த மாதம்கூட வேலை நிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அவர்களின் கோரிக்கைகளுக்கு உரிய இடத்திலிருப்பவர்கள் செவி சாய்க்காத காரணத்தினால், தூய்மைப் பணியில் சற்று தொய்வினைக் காண முடிகிறது. பல வார்டுகளில், தூய்மைப் பணி என்பது சரியாக மேற்கொள்ளப்படவில்லை என கவுன்சிலர்களே புலம்பிக் கொண்டிருக்கும் சூழலும் காணப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வீடுகளிலிருந்து குப்பைகள் சேகரிக்கப்படாததால், பொது மக்கள் கவுன்சிலர்களிடம் கேள்விக் கேட்கிறார்கள். இதே பிரச்னைதான் 44-வது வார்டிலும் நிலவுகிறது. ‘சரியாக வேலைச் செய்யுங்கள்’ என்று கவுன்சிலரின் கணவர் கூறியதால்தான் இங்குப் பிரச்னை வெடித்திருக்கிறது.

இது சம்பந்தமாக, தாமோதரனிடம் விளக்கம் கேட்டோம். ‘‘என் வார்டில் 6 மாதங்களாக தூய்மைப் பணியே நடக்கவில்லை. சும்மா வருகிறார்கள்; செல்கிறார்கள். கேள்விக் கேட்டால் அதிகாரிகளிடம் பேசிக்கொள்ளுங்கள் என்று பதில் சொல்கிறார்கள். நான் அனைத்துப் பணியாளர்களையும் குறை சொல்லவில்லை. அவர்களை அவமரியாதையாகவும் நினைக்கவுமில்லை; பேசவுமில்லை. அதில், ஒருவர் பி.ஜே.பி-யைச் சேர்ந்தவர்.

மேயர் சுஜாதா
மேயர் சுஜாதா

நான் ஏதாவது கேட்டால், வேண்டுமென்றே திமிராகப் பதில் சொல்கிறார். கோபத்தில் திட்டிவிட்டேன். அந்த நபர்தான் வீடியோ எடுத்து வெளியிட்டிருக்கிறார். நான், சம்பந்தப்பட்ட அனைவரிடமும் வருத்தம் தெரிவித்துவிட்டேன்’’ என்றார்.

இது சம்பந்தமாக, வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதாவிடம் கேட்டபோது, ‘‘தாமோதரன் மிகவும் நல்ல மனிதர். அவர் கோபத்தில்தான் பேசியிருக்கிறார். அவர்களுக்கு நிறைய உதவிகளையும் தாமோதரன் செய்திருக்கிறார். அதுமட்டுமின்றி, தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளத்தையும் உயர்த்திக் கொடுத்திருக்கிறோம். அனைத்து வார்டுகளிலும் தூய்மைப் பணி நடந்துகொண்டிருக்கிறது. நான் ஒவ்வொரு வார்டாக சென்று ஆய்வு செய்கிறேன். இது, வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட பிரச்னை’’ என்றார்.