Published:Updated:

ரெய்டு: ``குறைபாடுகளை சுட்டிக்காட்டிதான் சான்றளிக்கப்பட்டது!" - தேனி அரசு மருத்துவ​மனை முதல்வர்

தேனி அரசு மருத்துவமனை

தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்றது.

ரெய்டு: ``குறைபாடுகளை சுட்டிக்காட்டிதான் சான்றளிக்கப்பட்டது!" - தேனி அரசு மருத்துவ​மனை முதல்வர்

தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்றது.

Published:Updated:
தேனி அரசு மருத்துவமனை

​​அதிமுக ​முன்னாள் ​அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோ​ர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். இதில் வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு விதிமுறைகளை மீறி கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அனுமதி வழங்கப்பட்டதாக எழுந்த குற்றச்​​சாட்டின் பேரில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், ஐசரி கணேஷ், வேல்ஸ் மருத்துவக் கல்லூரி முதல்வர், தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் உள்ளிட்டோர் மீது ​லஞ்ச ஒழிப்புத்துறையினர் ​​வழக்கு பதிவுசெய்துள்ளனர்.

மருத்துவமனை
மருத்துவமனை

அதன்படி, ​தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்றது. மதுரை கே.புதூரில் உள்ள அவரது இல்லம், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள அரசுக் குடியிருப்பு மற்றும் அலுவலகத்தில் காலை 8​ ​மணிக்குத் தொடங்கிய இந்த சோதனை ​மதியம்  3​ ​மணியளவில் நிறைவடைந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

​தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேனி லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர் சுந்தரராஜ், ஆய்வாளர் ஜெயப்பிரியா தலைமையில் சுமார் 8​ ​மணி நேரமாக நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை என ​​முதல்வர் பாலாஜிநாதன் தெரிவித்தார். 

பாலாஜிநாதன்
பாலாஜிநாதன்

சோதனை முடிந்தபிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ​முதல்வர் பாலாஜிநாதன்​, ``வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுமதி வழங்கியது தொடர்பாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெறும் சோதனையின் தொடர்ச்சியாக என்னிடம் சோதனை நடத்தினர். லஞ்ச ஒழிப்புத்துறையினரின் சோதனைக்கு நான் முழு ஒத்துழைப்பு அளித்​தேன். இந்த சோதனையில் எந்தவித ஆவணங்களும், ஆதாரங்களும் கைப்பற்றப்படவில்லை. அதனை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளே எழுத்துப்பூர்வமாக ​என்னிடம் ​அளித்துள்ள​னர். 

​பு​​திதாக துவங்கவிருந்த வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆய்வு செய்வதற்காக தமிழக அரசால் கடந்த 2021-ம் ஆண்டு அமைக்கப்பட்ட குழுவில் நான் உட்பட 4​ ​மருத்துவர்கள் இடம்பெற்றிருந்தோம்.

சோதனை
சோதனை

அப்போது அந்த மருத்துவமனையிலிருந்த குறைபாடுகள் எல்லாம் அரசுக்கு சுட்டிக்காட்டித்தான் சான்றளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகம், தேசிய மருத்துவ ஆணையம் ஆகியவற்றின் அனுமதி பெற்று ​​அ​ந்தக் ​கல்லூரி இயங்கி வரு​கிறது" என்றார்.