Published:Updated:

லஞ்ச ஒழிப்புத்துறை: எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் சோதனை!

எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர்

தெருவிளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்திருக்கிறது.

லஞ்ச ஒழிப்புத்துறை: எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் சோதனை!

தெருவிளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்திருக்கிறது.

Published:Updated:
எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர்

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.

இது தொடர்பாக வெளியான தகவலில் கோவை மாவட்டம், குனியாமுத்தூரிலுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அவரின் பதவிக்காலத்தில் நடைபெற்ற கிராமப்புறங்களின் தெருவிளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை புகார் பதிவுசெய்திருக்கிறது. அதன் அடிப்படையில் அவரின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தற்போது சோதனையில் ஈடுபட்டுவருகிறது.

எஸ்.பி.வேலுமணி வீடு
எஸ்.பி.வேலுமணி வீடு

இதனால் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளர்கள் அவரின் வீட்டின் முன் திரண்டுவருகின்றனர். மேலும், அவரின் நண்பர் சந்திரசேகர் வீட்டிலும் சோதனை நடைபெற்றுவருகிறது. இதற்கு முன்னும் அவரின் இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்திய நிலையில் தற்போது இந்தச் சோதனை நடந்துவருகிறது.

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

அதேபோல, அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஈடுபட்டிருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில், வேலன் நகரில் செயல்படும் வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இரண்டு வருடங்களாக செயல்படுவதாகவும், இந்த மருத்துவமனையில், புதிய மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு தகுதியானது என்று தேசிய மருத்துவக் குழுமத்தின் விதிமுறைகளுக்கும் முரணாக சர்டிஃபிகேட் வழங்கியுள்ளதாகவும் புகார் எழுந்திருக்கிறது.

அது சம்பந்தமான ஆவணங்களைக் கைப்பற்ற சென்னையில் ஐந்து இடங்களிலும் சேலத்தில் மூன்று இடங்களிலும் மதுரை, தேனி, புதுக்கோட்டை, திருவள்ளூர் மற்றும் தாம்பரத்திலுள்ள இடங்களில் என மொத்தம் 13 இடங்களிலும் இன்று சோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

காவல்துறை ஏற்படுத்திய தடுப்பு
காவல்துறை ஏற்படுத்திய தடுப்பு

இதற்கு முன்னர், கோவையில் எஸ்.பி.வேலுமணி வீட்டில் அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது அது போன்ற சூழலைத் தடுக்க காவல்துறை அவரது வீட்டுக்குச் செல்லும் அனைத்துச் சாலைகளையும் தடுப்புகள் வைத்து தடுத்திருக்கின்றனர். ஆனாலும், தொண்டர்கள் அவரின் வீட்டை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், கோவையில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ஏழு பேர் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.