Published:Updated:

விஜய் மக்கள் இயக்கத்தினரின் வெற்றி: `தளபதி சம்மதத்துடன் நலப்பணிகள் தொடரும்!’ -உற்சாக புஸ்ஸி ஆனந்த்

சுயேச்சைகளாகக் களமிறங்கினாலும் விஜய்யின் பெயர், கட்சிக்கொடி போன்றவற்றைப் பயன்படுத்தியிருப்பதால் இந்த வெற்றி விஜய் மக்கள் இயக்கத்தின் வெற்றியாகவே பார்க்கப்படுவதால். மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்துவருகின்றனர் விஜய் ரசிகர்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழகத்தில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6, 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்றும், அதற்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12-ம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதற்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி முடிவடைந்தது. தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் `இந்தத் தேர்தலில் நாம் போட்டியிட வேண்டும்’ என விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அகில இந்திய தலைவர் புஸ்ஸி ஆனந்திடம் கோரிக்கை வைத்தனர்.

விஜய் மக்கள் இயக்கம்
விஜய் மக்கள் இயக்கம்

நிர்வாகிகளின் எதிர்பார்ப்பை அப்படியே விஜய்யிடம் கடத்தியிருக்கிறார் புஸ்ஸி ஆனந்த். அதற்கு `இப்போது வேண்டாமே...’ என்று கூறிய விஜய்யிடம், `நமது ரசிகர்களின் செயல்பாடுகளால் இயக்கத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் இருக்கிறது. போட்டியிடுவதற்கும் தகுதியான வேட்பாளர்கள் இருக்கிறார்கள்’ என்று புஸ்ஸி ஆனந்த் எடுத்துக் கூறியவுடன் பச்சைக்கொடி காட்டியிருக்கிறார். அதைத் தொடர்ந்துதான் செப்டம்பர் 17-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று பனையூரில் உள்ள அலுவலகத்தில் புஸ்ஸிஆனந்த் தலைமையில் நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட அளவிலான 20 முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்ட அந்தக் கூட்டத்தில், ``கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தளபதியின் பெயரைச் சிலர் தவறாகப் பயன்படுத்திவிட்டார்கள். இந்தமுறை அப்படி எந்தத் தவறும் நடந்துவிடக் கூடாது. அதனால் இந்தத் தேர்தலில் அனைவரும் சுயேச்சை வேட்பாளர்களாகக் களமிறங்குங்கள்” என்று கூறிய புஸ்ஸி ஆனந்த், விஜய்யின் பெயர், புகைப்படம், இயக்கக் கொடியை பயன்படுத்திக்கொள்ளவும் அனுமதி கொடுத்திருக்கிறார்.

தேர்தல் பிரசாரத்தில் புஸ்ஸி ஆனந்த்
தேர்தல் பிரசாரத்தில் புஸ்ஸி ஆனந்த்

அதில் உற்சாகமான விஜய் ரசிகர்களும் நிர்வாகிகளும் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களிலும், இடைத்தேர்தல் நடக்கும் மாவட்டங்களிலும் 169 இடங்களில் களமிறங்கினார்கள். அதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் 75 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உள்ளாட்சித் தேர்தல் வெற்றி; விஜய் மக்கள் இயக்கத்தினர் உற்சாகம்!

`தேர்தலில் வெற்றிபெறுபவர்களுக்கு தளபதி விஜய்யிடம் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது’ என்று கூறப்பட்டிருந்ததால் இயக்கம் செய்த நற்பணிகள், தேர்தல் வாக்குறுதிகள், அனல் பறக்கும் பிரசாரங்கள் என அரசியல் கட்சிகளுக்கு நிகராகத் தேர்தல் களத்தில் சுறுசுறுப்பாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர். அதன் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12-ம் தேதி காலை தொடங்கி நடைபெற்றது.

உள்ளாட்சித் தேர்தல்:
உள்ளாட்சித் தேர்தல்:

அதில் தி.மு.க-வைத் தவிர அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் வெற்றிக்காகக் கடுமையாகப் போராடவேண்டியிருந்த நிலையில், விஜய் ரசிகர்கள் 121 இடங்களில் வெற்றிபெற்று கவனம் ஈர்த்திருக்கிறார்கள். இடைத்தேர்தல்கள் நடைபெறும் மதுரை, திருவள்ளூரிலும் தலா ஓரிடத்திலும் வெற்றிபெற்றிருக்கின்றனர்.

சுயேச்சைகளாகக் களமிறங்கினாலும் விஜய்யின் பெயர், கட்சிக்கொடி போன்றவற்றைப் பயன்படுத்தியிருப்பதால் இந்த வெற்றி விஜய் மக்கள் இயக்கத்தின் வெற்றியாகவே பார்க்கப்படுவதால், மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்துவருகின்றனர் விஜய் ரசிகர்கள். இது குறித்து புஸ்ஸி ஆனந்திடம் பேசியபோது, ``இது பற்றி தளபதி பேசுவதுதான் சரியாக இருக்கும்.

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல்: 169 இடங்களில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர், 77 இடங்களில் வெற்றி! - காலை நிலவரம்

மொத்தம் 121 இடங்களில் எங்கள் இயக்க நிர்வாகிகள் வெற்றி பெற்றிருக்கின்றனர். 108 இடங்களில் மக்கள் வாக்குகள் மூலமும், 13 இடங்களில் போட்டியின்றியும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறோம். இதில் விழுப்புரம் மாவட்டம், வானூர் ஒன்றியம், எறையூர் பஞ்சாயத்து பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்து. அங்கு எங்கள் மன்றத்தின் நிர்வாகி பாலமுருகன் என்பவரின் அக்கா எல்.சாவித்திரி போட்டியிட்டு ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றிபெற்றிருக்கிறார். வெற்றிபெற்ற அனைவரும் மக்களைச் சென்று சந்திப்பார்கள். அவர்களின் அடிப்படைப் பிரச்னைகளை அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று அதற்குத் தீர்வுகாண பாடுபடுவார்கள். தளபதியின் சம்மதத்துடன் மக்கள்நலப் பணிகள் தொடரும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு