Published:Updated:

`அரசும் வங்கிகளும் தொழிலதிபர்களை விரக்தியடையச் செய்கின்றன!' சித்தார்த்தா மரணம் குறித்து மல்லையா

அரசின் துறைகள் மற்றும் வங்கிகள் யாரையும் விரக்தியடையச் செய்துவிடும். என்னை என்ன செய்கிறார்கள் என்பதை பாருங்கள்.

மல்லையா
மல்லையா

இந்தியாவின் மிகப்பெரிய காபி செயின் நிறுவனமான Cafe Coffee Day-ன் நிறுவனரும், ஆசியாவின் மிகப்பெரிய காபி தோட்டத்திற்குச் சொந்தக்காரருமான வி.ஜி சித்தார்த்தா உடல் நேத்ராவதி ஆற்றின் கரையில் கண்டெடுக்கப்பட்டது. முன்னாள் கர்நாடக முதல்வரும், மூத்த அரசியல் தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனாக இருந்தாலும் தனது கடின உழைப்பால் சிறந்த தொழிலதிபராக அறியப்பட்டவர்தான் சித்தார்த்தா.

`அரசும் வங்கிகளும் தொழிலதிபர்களை விரக்தியடையச் செய்கின்றன!' சித்தார்த்தா மரணம் குறித்து மல்லையா

அவரது மறைவு காஃபி டே நிறுவன ஊழியர்கள் மத்தியில் கடுமையான சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தொழில் ரீதியில் ஏற்பட்ட பிரச்னையாலே அவர் உயிரிழந்திருக்கக்கூடும் என்றே கூறப்படுகிறது. அதனை உறுதி செய்யும் வகையில் இறப்பதற்கு முன் அவர் எழுதிய உருக்கமான கடிதத்தில், ``37 வருடங்களுக்குப் பிறகு 30,000 நேரடி வேலை வாய்ப்புகளை உருவாக்கி, சிறந்த முறையில் இருந்தபோதிலும் சரியான லாபகரமான வணிகத்தை உருவாக்கத் தவறிவிட்டேன்.

ஒரு தனியார் நிறுவன பார்ட்னர், நான் விற்ற பங்குகளை மீண்டும் வாங்கும்படி எனக்கு அழுத்தம் கொடுத்துவருகிறார். நான் நீண்ட நாள்களாக அதனுடன் போராடி வருகிறேன். சில நாள்களுக்கு முன்பு, என் நண்பரிடமிருந்து அதிக அளவிலான பணம் கடனாகப் பெற்றுள்ளேன். நான் கடன் வாங்கிய அனைவரும் தற்போது எனக்கு அழுத்தம் தரத் தொடங்கிவிட்டனர். நான் யாரையும் ஏமாற்ற நினைக்கவில்லை. ஒரு தொழிலதிபராக நான் தோல்வியடைந்துவிட்டேன்.

`அரசும் வங்கிகளும் தொழிலதிபர்களை விரக்தியடையச் செய்கின்றன!' சித்தார்த்தா மரணம் குறித்து மல்லையா

ஒரு நாள் அனைவரும் என் நிலையைப் புரிந்துகொண்டு எனக்கு மன்னிப்பு வழங்குவீர்கள். இத்துடன் என் சொத்து விவரங்களையும் இணைத்துள்ளேன். இது என் கடனை மீண்டும் செலுத்த உதவும்" எனக் கூறியிருந்தார். இதற்கிடையே கடந்த மாதம் காஃபி டே நிறுவனத்தில் வருமான வரி சோதனை நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சோதனையும் அவரின் மறைவுக்குக் காரணம் எனக் கூறியுள்ளார் லண்டனில் இருக்கும் தொழிலதிபர் விஜய் மல்லையா.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், ``சித்தார்த்தாவுக்கும் எனக்கும் மறைமுக தொடர்பு இருப்பதாகவே நினைக்கிறேன். அவர் சிறந்த மனிதர் மட்டுமல்ல சிறந்த தொழில் முனைவோரும் கூட. அவரின் கடிதத்தின் உள்ளடக்கத்தைப் படிக்கும்போது என் மனம் இடிந்துவிட்டது. அரசின் துறைகள் மற்றும் வங்கிகள் யாரையும் விரக்தியடையச் செய்துவிடும். என்னை என்ன செய்கிறார்கள் என்பதை பாருங்கள்.

முழுக் கடனையும் திருப்பிச் செலுத்துகிறேன் எனக் கூறி அதற்கான வாய்ப்பை அளித்த பிறகும் தொடர்ந்து தொந்தரவு செய்துகொண்டே இருக்கிறார்கள். மேற்கத்திய நாடுகளில் உள்ள அரசுகளும், வங்கிகளும் கடனாளிகள் தங்கள் கடனை திரும்பிச் செலுத்த தேவையான உதவியைச் செய்கிறார்கள். ஆனால் என் விஷயத்தில் எனது சொத்துகளை முடக்குவதில் குறியாக இருக்கிறார்களே தவிர நான் கடனை அடைக்க மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சிக்கும் முட்டுக்கட்டை போடுகிறார்கள்" எனக் கூறியுள்ளார்.