Published:Updated:

`வாக்களித்த மக்களுக்கு நன்றி; தளபதி உத்தரவுப்படி மக்கள் பணி தொடர்வார்கள்!’ - விஜய் மக்கள் இயக்கம்

வெற்றிவாகை சூடிய மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 129 மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் நடிகர் விஜய்யைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

ஒன்பது மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பங்கேற்று 129 பேர் வெற்றிபெற்றனர். வெற்றிபெற்றவர்கள் கடந்த திங்கள்கிழமை பனையூரிலுள்ள வீட்டில் நடிகர் விஜய்யைச் சந்தித்தனர்.

விஜய்
விஜய்

இந்த நிலையில், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர்புஸ்ஸி ஆனந்து, ``ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தளபதி விஜய் மக்கள் இயக்கத்துக்கு வாக்களித்த தமிழக மக்களுக்குத் தளபதி அவர்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். வெற்றிவாகை சூடிய மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 129 மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் நடிகர் விஜய்யைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இவர்கள் அனைவரும் தமிழக மக்களின் அடிப்படைப் பிரச்னைகளைத் தீர்க்க மத்திய, மாநில அரசுகளின் கவனத்துக்குக் கொண்டு சென்று, அவற்றைத் தீர்க்கும் நல்வாழ்வுப் பணியை தளபதி அவர்களின் உத்தரவுப்படி செயல்படுத்தி, மக்கள் பணியைத் தொடர்வார்கள் எனத் தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்திருக்கிறார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு