Published:Updated:

`அவதூறுகளுக்கு மத்தியிலும் நேம் ஸ்ட்ராங்க்! - தமிழிசைக்குப் பதவி கிடைத்தது குறித்து விஜயகாந்த் மகன்

vijaya prabakaran

தெலங்கானா ஆளுநர் பதவி தமிழிசை சௌந்தரராஜனுக்கு எப்படிக் கிடைத்தது என்பது குறித்துப் பேசியிருக்கிறார் விஜயகாந்த்தின் மகன் விஜயபிரபாகரன்.

`அவதூறுகளுக்கு மத்தியிலும் நேம் ஸ்ட்ராங்க்! - தமிழிசைக்குப் பதவி கிடைத்தது குறித்து விஜயகாந்த் மகன்

தெலங்கானா ஆளுநர் பதவி தமிழிசை சௌந்தரராஜனுக்கு எப்படிக் கிடைத்தது என்பது குறித்துப் பேசியிருக்கிறார் விஜயகாந்த்தின் மகன் விஜயபிரபாகரன்.

Published:Updated:
vijaya prabakaran

சென்னை திருவொற்றியூரை அடுத்த மணலியில் தே.மு.தி.க நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்க வந்தார் விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன். அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர்,

``தி.மு.க எதற்குதான் போராட்டம் நடத்தவில்லை. போராட்டத்தைத் தவிர தி.மு.க-வுக்கு வேறு எதுவும் தெரியாது. நல்லது நடக்குதா, கெட்டது நடக்குதா என்றுகூடத் தெரியாது. எதை எடுத்தாலும் எதிர்க்க வேண்டும் என்பதுதான் தி.மு.க-வின் வேலை. அது ஒன்றுதான் அவர்களுக்குத் தெரியும். அவர்கள் ஆட்சியில் என்னென்ன செய்தார்கள் என்பதை அவர்களிடம்தாம் கேட்க வேண்டும்.

vijaya prabakaran
vijaya prabakaran

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுங்கவரி கட்டணத்தை எதற்காக உயர்த்தினார்கள். ? சாலை சரியாக இருந்தால் கட்டணத்தை உயர்த்தலாம். சாலைகள் சரியில்லாமல் இருந்து கட்டணத்தை உயர்த்தியிருந்தால் தவறு. இதுகுறித்துக் கேப்டனிடம் தகவல் தெரிவித்து, அடுத்து என்ன செய்யலாம் என்பதைப் பற்றி பரிசீலனை செய்வோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆளுநராகப் பதவியேற்கப் போகும் தமிழிசை அக்காவுக்கு வாழ்த்துகள். எத்தனையோ பேர் அவர் மீது அவதூறு பரப்பியிருந்தாலும் அவர்கள் `நேம் ஸ்ட்ராங்காக' இருந்ததால் அவர்களுக்குக் கிடைத்த வெற்றி இது.

vijayaprabakaran
vijayaprabakaran

நல்லது நடக்க வேண்டும் என்பதால்தான் முதல்வரும் அமைச்சர்களும் வெளிநாட்டுக்குச் சென்றுள்ளனர். இதுவரை எந்த முதல்வரும் இவ்வாறு செய்ததில்லை. எங்களுடைய இந்தக் கூட்டணி தொடரும். தேர்தல் தொடர்பான தகவல்களைக் கட்சித் தலைமை அறிவிக்கும்" என்றார் இயல்பாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism