Published:Updated:

` திமுக ஆட்சி சிறப்பாக உள்ளது; தேமுதிக சோர்ந்து போகவில்லை!'- விஜய பிரபாகரன்

விஜய பிரபாகரன்

``தமிழகத்தில் திமுக ஆட்சி மிகவும் சிறப்பாக இருக்கிறது. தலைவர் விஜயகாந்த் சொல்வதுபோல், ஓர் ஆட்சி அமைந்து ஆறு மாதங்கள் முடிந்த பிறகுதான் அந்த ஆட்சியின் நல்லது கெட்டது குறித்து விவாதிக்க முடியும்.” - விஜய பிரபாகரன்.

` திமுக ஆட்சி சிறப்பாக உள்ளது; தேமுதிக சோர்ந்து போகவில்லை!'- விஜய பிரபாகரன்

``தமிழகத்தில் திமுக ஆட்சி மிகவும் சிறப்பாக இருக்கிறது. தலைவர் விஜயகாந்த் சொல்வதுபோல், ஓர் ஆட்சி அமைந்து ஆறு மாதங்கள் முடிந்த பிறகுதான் அந்த ஆட்சியின் நல்லது கெட்டது குறித்து விவாதிக்க முடியும்.” - விஜய பிரபாகரன்.

Published:Updated:
விஜய பிரபாகரன்

``தமிழகத்தை ஆண்டுவந்த திமுக, அதிமுக இருகட்சிகளும் தேர்தலில் தோல்வியைத் தழுவியபோது எந்த நிலையிலிருந்ததோ, அதே நிலையில்தான் இப்போது தேமுதிக-வும் உள்ளது. தோல்விக்காக நாங்கள் சோர்ந்துவிட்டோம் என்று சொல்வது தவறு. உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து விஜயகாந்த் கூடிய விரைவில் முடிவெடுப்பார்" என்கிறார் விஜய பிரபாகரன்.

விஜயகாந்த்
விஜயகாந்த்

திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள மாந்துறை கிராமத்திலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமங்கலம் தேமுதிக ஊராட்சிச் செயலாளர் செல்லத்துரை - மீனா திருமணம் நடைபெற்றது. தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மகன் விஜய் பிரபாகரன் தலைமை தாங்கி திருமணத்தை நடத்திவைத்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

திருமண விழாவை முடித்துவிட்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார் விஜய பிரபாகரன். ``தேமுதிக நிறுவனத் தலைவரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த் உடல்நலச் சிகிச்சைக்காகத் துபாய்க்குச் சென்றிருக்கிறார். அங்கு சென்றுள்ள அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவருகின்றனர். விரைவில் அவர் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார்" என்றார்.

விஜய பிரபாகரன்
விஜய பிரபாகரன்

`சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு தேமுதிக செயல்பாடுகளில் தொய்வு தெரிகிறதே..?’, என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த விஜய் பிரபாகரன், ``தமிழகத்தை ஆண்டுவந்த திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தேர்தலில் தோல்வியைத் தழுவியபோது எந்த நிலையிலிருந்ததோ, அதேநிலையில்தான் இப்போது தேமுதிக-வும் உள்ளது. தோல்விக்காக நாங்கள் சோர்ந்துவிட்டோம் என்று சொல்வது மிகத் தவறு. தேமுதிக-வில் விரைவில் மாற்றம் ஏற்படும். வரும் உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக போட்டியிடுவதற்கான முடிவைத் தலைவர் விஜயகாந்த் விரைவில் அறிவிக்கவிருக்கிறார்” என்றார்.

விஜய பிரபாகரன்
விஜய பிரபாகரன்

`திமுக ஆட்சியின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன?’ என்று கேட்டதற்கு, ``தமிழகத்தில் திமுக ஆட்சி மிகவும் சிறப்பாக இருக்கிறது. தலைவர் விஜயகாந்த் சொல்வதுபோல், ஓர் ஆட்சி அமைந்து ஆறு மாதங்கள் முடிந்த பிறகுதான் அந்த ஆட்சியின் நல்லது கெட்டது குறித்து விவாதிக்க முடியும். அவர்கள் செயல்பாடுகளைப் பற்றிப் பேச முடியும். ஆனால், சிறப்பான ஆட்சியை திமுக கொடுத்துக்கொண்டிருக்கிறது” என்று சொல்ல, கூடியிருந்த தேமுதிக நிர்வாகிகள், உள்ளாட்சித் தேர்தலில் திமுக-வுக்கு ஆதரவு கொடுப்பார்களோ என்று முணுமுணுக்கத் தொடங்கினார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism