Election bannerElection banner
Published:Updated:

விளவங்கோடு: `சீட் வாங்க தான் கஷ்டம்; வெற்றி..!’ - ஹாட்ரிக் அடிப்பாரா விஜயதரணி?!

விஜயதரணி
விஜயதரணி

விஜயதரணிக்கு சீட் கொடுக்கக்கூடாது என சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அதையும் மீறி போராடி சீட் வாங்கினார் விஜயதரணி.

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் இரண்டு முறை தொடர்ந்து எம்.எல்.ஏ-வாக இருக்கும் விஜயதரணி மூன்றாவது முறையாக சீட் கேட்டார். அப்போது அவர் தொகுதி பக்கம் வருவதில்லை, கடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் சரியாக பணி செய்யவில்லை என பல குற்றச்சாட்டுகள் அவர்மீது விழுந்தன. போதாத குறைக்கு விஜயதரணிக்கு சீட் கொடுக்கக்கூடாது என சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அதையும் மீறி போராடி சீட் வாங்கினார் விஜயதரணி. இதையடுத்து விஜயதரணிக்கு எதிராக காங்கிரஸ் மாநில துணைத் தலைவராக இருந்த சாமுவேல் ஜார்ஜ் அதிரடியாக களம் இறங்கினார். இத்தனை போராட்டங்களையும் கடந்து விளவங்கோடு தொகுதியில் மூன்றாவது முறையாக வெற்றிக்கொடியை நாட்ட உள்ளார் விஜயதரணி. இது எப்படி சாத்தியமானது?

சத்தியமூர்த்தி பவன் - காங்கிரஸ்
சத்தியமூர்த்தி பவன் - காங்கிரஸ்

விளவங்கோடு தொகுதியில் உள்ள சிறுபான்மையினர் வாக்குகள் பா.ஜ.க-விற்கு எதிராக விஜயதரணிக்கு விழுந்துள்ளன. அதுபோல சி.பி.எம் கட்சி இந்த தொகுதியில் செல்வாக்கு உண்டு என்பதால் அந்த வாக்குகளும் விஜயதரணிகு சிதறாமல் விழுந்துள்ளது. அதே சமயம் காங்கிரஸ் கட்சியில் இருந்து போட்டி வேட்பாளராக களம் இறங்கிய சாமுவேல் ஜார்ஜை மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதையும் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

ஆரம்பத்திலேயே எதிர்ப்பு கிளம்பியதால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடன் அதிருப்தியாளர்களை சந்தித்து பேசினார் விஜயதரணி. போட்டி வேட்பாளரான சாமுவேல் ஜார்ஜை கூட சந்தித்து பேசியிருந்தார். ஆனால் அவர் போட்டியில் இருந்து பின்வாங்கவில்லை.

விஜயதரணி
விஜயதரணி

பா.ஜ.க எதிர்ப்பு மனநிலையும், தி.மு.க கூட்டணி பலமும் விஜயதரணிக்கு பலமாக அமைந்தது. அதனால்தான் விஜயதரணி 7-வது சுற்றின் முடிவில் 11,645 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். சீட்டு வாங்க போராடினாலும் வெற்றிவாய்ப்பை எளிதில் பெறும் நிலைக்கு போராட்டத்தை நடத்தியிருப்பதாக காங்கிரஸ் கட்சியினரே மெச்சிக்கொள்கிறார்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு