Published:Updated:

தே.மு.தி.க நிறுவன தலைவர் விஜயகாந்த் அதிகாலை 3 மணியளவில் மருத்துவமனையில் அனுமதி!

 விஜயகாந்த்
விஜயகாந்த்

விஜயகாந்த் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கைக்குப் பின் முழு விவரம் தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டதால், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்துவருகிறார். கட்சி நடவடிக்கைகளை அவரின் குடும்பத்தினர் கவனித்துக்கொள்கிறார்கள். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில்கூட அவர் போட்டியிடவில்லை. பிரசார வேனில் வந்தவர், தொண்டர்களிடம் கையசைத்து உற்சாகப்படுத்திவிட்டுச் சென்றுவிட்டார்.

தே.மு.தி.க விஜயகாந்த், பிரேமலதா
தே.மு.தி.க விஜயகாந்த், பிரேமலதா

இந்தநிலையில், சென்னை மியாட் மருத்துவமனையில் அதிகாலை 3 மணியளவில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார். நள்ளிரவில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு\ வருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கைக்குப் பின் முழு விவரம் தெரியவரும் எனக் கூறப்பட்ட நிலையில் தற்போது அவரின் உடல்நிலை குறித்து கட்சி விளக்கம் அளித்துள்ளது.

தே.மு.தி.க நிறுவன தலைவர் விஜயகாந்த் அதிகாலை 3 மணியளவில் மருத்துவமனையில் அனுமதி!

அதில், ``விஜயகாந்த் உடல்நிலை சீராக இருக்கிறது. வழக்கமான பரிசோதனைகளுக்காகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை முடிந்து ஓரிரு நாள்களில் வீடு திரும்புவார். வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்” என அதில் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு