Election bannerElection banner
Published:Updated:

`மதிப்பளிக்காவிடில் தனித்துப் போட்டி... நாளை முக்கிய முடிவை அறிவிக்கும் விஜயகாந்த்?!’-பிரேமலதா தகவல்

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

`தே.மு.தி.க-வுக்குத் தகுந்த மதிப்பு வழங்கவில்லையென்றால், வரும் தேர்தலில் 234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிடத் தயாராக இருக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியிருக்கிறார்.

சென்னை, கோயம்பேட்டிலுள்ள தே.மு.தி.க கட்சித் தலைமையகத்தில், கட்சியின் தொகுதி பொறுப்பாளர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. காலையில் தொடங்கிய ஆலோசனைக் கூட்டம் மாலை வரை தொடர்ந்து நடைபெற்றுவந்தது.

தே.மு.தி.க ஆலோசனைக் கூட்டம்
தே.மு.தி.க ஆலோசனைக் கூட்டம்

ஆலோசனைக் கூட்டம் தொடங்கும்போது, `தே.மு.தி.க தலைவர் எந்தக் கட்சிக் கூட்டணிக்குச் சென்றாலும், அவரின் முடிவை முழு மனதுடன் ஏற்போம்’ என்று அனைத்து நிர்வாகிகளும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். காலை தொடங்கிய கூட்டத்தில், ஒவ்வொரு மாவட்ட நிர்வாகியிடமும் அந்த மாவட்ட கள நிலவரம் குறித்தும், கட்சிக்கான வெற்றிவாய்ப்புகள் குறித்தும் கேட்டறியப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த், `கடந்த நாடாளுமன்றத் தேர்தலைப்போல் வரும் சட்டமன்றத் தேர்தலில் நமது கட்சிக்கான உரிய இடங்கள் கேட்டுப் பெறப்படும். கூட்டணிக் கட்சிகளில் நமக்கு உரிய மதிப்பு வழங்கப்படவில்லையென்றால், வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடத் தயாராக இருக்க வேண்டும்’ என்று பேசியதாகக் கூறப்படுகிறது.

தே.மு.தி.க ஆலோசனைக் கூட்டம்
தே.மு.தி.க ஆலோசனைக் கூட்டம்

கட்சிக் கூட்டணி விவகாரங்கள் அனைத்தும் பொதுக்குழு கூட்டி ஆலோசனை செய்தே முடிவு செய்யப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. நாளைய தினம் விஜயகாந்த் தனது திருமண நாளைக் கொண்டாடவிருக்கிறார். அதோடு நாளை கூட்டணி குறித்து முக்கியத் தகவலை அந்தக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் வெளியிடுவார் என்று ஆலோசனைக் கூட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு