Published:Updated:

#MyVikatan செய்தி எதிரொலி: `நூற்றுக்கணக்கான கிராமங்களின் குரல்' - புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை

விகடன் செய்தி எதிரொலி
விகடன் செய்தி எதிரொலி

விகடன் இணையதளத்தில் வெளியான செய்தியைத் தொடர்ந்து, மடமடவென ஆக்‌ஷனில் இறங்கியிருக்கிறது தமிழக அரசு.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

விகடன் இணையதளத்தில் வெளியான ஒரு செய்தியைத் தொடர்ந்து, தமிழக அரசு, அதில் நடவடிக்கை எடுத்து தீர்வு கண்டுள்ளது. திருச்சி - புதுக்கோட்டையிலிருந்து அரிமளம் - கே.புதுப்பட்டி - ஏம்பல் - கண்ணங்குடி - மங்களக்குடி - அஞ்சுகோட்டை -திருவாடானை - கைகாட்டி ஆர்.எஸ்.மங்களம் - இராமநாதபுரம் - இராமேசுவரம் என நான்கு மாவட்டக் கிராமங்களை உள்ளடக்கிய சாலைகள் வழியே பல நூற்றுக்கணக்கான கிராமங்கள் உள்ளன. அதனையொட்டி பல்லாயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் திருச்சி, புதுக்கோட்டை, திருவாடானை, ராமநாதபுரம், இராமேஸ்வரம் போன்ற நகரங்களுக்குச் செல்ல வேண்டுமானால் தற்போது பல பேருந்துகள் மாறிச் செல்ல வேண்டியதிருக்கிறது.

பேருந்து வழித்தட ரூட்
பேருந்து வழித்தட ரூட்

இந்தக் கோரிக்கை தொடர்பாக, இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி, சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் ஆகியோரிடம் அப்பகுதி மக்கள் பேசியிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து, மக்களின் அவசியத் தேவை அறிந்து தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு அந்த எம்.பி-க்கள் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து, போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனும் இரண்டு எம்.பி-க்களின் பரிந்துரையை ஏற்று, இந்தப் புதிய வழித்தடத்தில் பேருந்துகளை இயக்குவதற்கு வழித்தட ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்தச் சூழலில்தான், கடந்த ஜூலை 24-ம் தேதி மக்களின் நீண்டநாள் பேருந்து வழித்தட சேவை கோரிக்கையினை விகடன் இணையதளத்தில் வாசகர் ஒருவர் `மை விகடன்’ மூலம் செய்தியாக அனுப்பி இருந்தார்.

இது வழித்தடம் இல்லை, எங்கள் வாழ்க்கைத் தடம்! -  நூற்றுக்கணக்கான கிராமங்களின் ஒருமித்த குரல்

அந்தச் செய்தியில், “இந்தப் புதுவழித்தடத்தில் பேருந்துச் சேவை தொடங்கினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயனடைவார்கள். ​இது வழித்தடம் அல்ல.. இப்பகுதி மக்களுக்கான வாழ்க்கைத் தடம்..! தமிழக அரசு எங்களின் இந்தக் கோரிக்கையை நிச்சயம் நிறைவேற்றும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்” என்று அப்பகுதி மக்களின் கோரிக்கையை தன் குரலாக ஒலித்தது விகடன்.

புதிய பேருந்து தடத்தில் பயணிக்கும் பேருந்து
புதிய பேருந்து தடத்தில் பயணிக்கும் பேருந்து

இந்தச் செய்தியைப் படித்துவிட்டு முதல்வர் அலுவலகத்தில் இருந்தே போக்குவரத்துத்துறைக்கு நோட் போட்டிருக்கிறார்கள். உடனடியாக ஆக்‌ஷனில் இறங்கிய போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், “இந்த வழித்தடத்தில் பேருந்தை இயக்க ஆய்வு செய்யச் சொல்லியிருந்தேனே. ஏன் தாமதமாகிறது?” என்றிருக்கிறார். அதற்கு அதிகாரிகள் தரப்பிலிருந்து, “ஏற்கெனவே ஆய்வு செய்து பணிகளை முடித்துவிட்டோம். அரசிடமிருந்து அனுமதி அளிக்கப்பட வேண்டியது மட்டும்தான் பாக்கி” என்றிருக்கிறார்கள். மடமடவென பணிகளைத் தொடங்கி, ஜூலை 29-ம் தேதி காலையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் புதிய பேருந்து சேவையையே முதுகுளத்தூரில் தொடங்கிவைத்துவிட்டார்.

#MyVikatan செய்தி எதிரொலி: `நூற்றுக்கணக்கான கிராமங்களின் குரல்' - புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை
இது வழித்தடம் இல்லை, எங்கள் வாழ்க்கைத் தடம்! -  நூற்றுக்கணக்கான கிராமங்களின் ஒருமித்த குரல்

திருச்சி - புதுக்கோட்டையிலிருந்து அரிமளம், தேனிப்பட்டி, ஏம்பல், கண்ணங்குடி, மங்களக்குடி, திருவாடனை, இராமநாதபுரம் மற்றும் இராமேஸ்வரம் வரை இந்த பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. பலநூறு கிராமங்களை இணைக்கும் இந்த புதிய பேருந்து வழித்தட சேவையால், பல்லாயிரக்கணக்கான மக்கள் பயனடைவார்கள் என்பது உள்ளபடியே பாராட்டுக்குரியது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு