ஆனந்த விகடன் பொக்கிஷம்
கட்டுரைகள்
Published:Updated:

விகடன் பொக்கிஷம் : “தொப்புளில் பம்பரம் விட்டவர், தங்கர்பச்சானை தட்டிக் கேட்பதா?”

திருமாவளவன்
பிரீமியம் ஸ்டோரி
News
திருமாவளவன்

விஜயகாந்த்துக்கு எதிராக திருமாவளவன்

11.09.2005 ஆனந்த விகடன் இதழில்

மைதியாக இருக்கிறார் தங்கர்பச்சான்! ஏற்கெனவே நடிகைகள் பற்றி அவர் பேசியதாகச் சொல்லப்படுவதே பெரும் பரபரப்பைக் கிளப்பிவிட்டதால் இப்போதைக்கு பச்சான் எதுவும் பேசத் தயாராக இல்லை.

பச்சான் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்காவிட்டால் ஸ்ட்ரைக் என நடிகர் சங்கம் போராட்டக் கொடிபிடித்தது. நடிகர் சங்கத்துக்கு நேரில் வந்து அவர் மன்னிப்பு கேட்ட பிறகும் இன்னும் காரம் குறையாமல் இருக்கிறது விவகாரம்!

பச்சானை மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் அரசியல் ரீதியான பரபரப்புகளையும் கிளப்பியிருக்கிறது. அவர் நடத்தப்பட்ட விதம் குறித்துத் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவரும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பாளருமான தொல்.திருமாவளவன் இங்கே கொந்தளிக்கிறார்.

``இப்போது நீங்களும் ஒரு படத்தில் நடிப்பதால் நீங்களும் ஒரு நடிகரே! தங்கர்பச்சான் விவகாரத்தை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?’’

``தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் என்கிற முறையிலும் நானும் ஒரு தமிழ்க்குடிமகன் என்கிற முறையிலும் பேச விரும்புகிறேன். இயக்குநர் தங்கர்பச்சான் தனது “சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி’ படத்தின் ஒலிப்பேழை வெளியீட்டு விழாவில் பேசும்போது தயாரிப்பாளர்களுக்கு இருக்கவேண்டிய நெருக்கடிகளைப் பற்றிப் பேசினார்.

திருமாவளவன்
திருமாவளவன்

சினிமாவில் பல லட்சங்களை அல்லது கோடிகளை முதலீடு செய்து ஒரு படத்தை எடுக்கும்போது, அந்தப் படத்தில் கதாநாயகியின் ஒப்பனைகாரப் பெண்ணுக்குப் பணம் தர முடியவில்லை என்ற காரணத்துக்காக, ஒரு நாள் படப்பிடிப்பையே ரத்து செய்யும் விதமாக ஒரு நடிகை (நவ்யாநாயர்) நடந்துகொண்டதைக் குறிப்பிட்டு சினிமாவில் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் படக்கூடிய கஷ்டங்களை யெல்லாம் பொருட்படுத்தாமல் வெறும் 600 ரூபாய் பணத்துக்காக இப்படிப் படப்பிடிப்பையே நிறுத்துவது என்பது விபச்சாரத்துக்குச் சமமானது. அதாவது, எந்த ஒரு செயலுமே பணத்துக்காக மட்டுமே என்று வரும்போது அது விபச்சாரத்துக்கு சமமானது என்றுதான் தங்கர்பச்சான் பேசியதாக அறிகிறேன்.

பச்சானின் இந்தப் பேச்சை நான் நியாயப்படுத்தவில்லை. அது வருத்தத்துக்கு உரியது என்று தங்கர்பச்சானே உணர்ந்ததால் தான், தான் பேசியது யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்கு வருந்துவதாகவும், மன்னிப்பு கேட்பதாகவும் அறிவித்துவிட்டார். ஆனால், அதன் பின்பும் அதை ஊதி ஊதிப் பெரிதாக்குவது உள்நோக்கம் கொண்டதாகத்தான் எனக்குப் படுகிறது.

இவ்வளவு ஆவேசப்படும் இந்த சினிமாக்காரர்களே நடிகைகளை நாகரிகமாக நடத்துகிறார்களா? நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்தோ மற்ற சிலரோ தங்கள் படங்களில் நடிகையைப் படுக்க வைத்து தொப்புளில் பம்பரம் விட்டதும், ஆம்லேட் போட்டதும் அவர்களை இழிவுபடுத்தும் செயல் இல்லையா? தொப்புளில் பம்பரம் விட்டவருக்கு தட்டிக் கேட்க என்ன அருகதை இருக்கிறது?

பெண்களை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அதையெல்லாம் செய்து படமெடுத்துக் காசு பார்த்தவர்கள் எல்லாம் இன்றைக்கு யோக்கிய சிகாமணிகள் மாதிரி திடீர் என்று ஆவேசப்பட்டால் அதற்கு என்ன அர்த்தம்? ஏதோ உள்நோக்கம்தானே? அதுதான் எங்களைச் சீண்டிப்பார்க்கிறது.’’

- எஸ் சரவணகுமார்