Published:Updated:

Vikatan Poll: தொடர்ந்து அ.தி.மு.க நிர்வாகிகளுடன் பேசிவரும் சசிகலா... இது குறித்து உங்கள் கருத்து?

சசிகலா
சசிகலா

தொடர்ந்து அ.தி.மு.க நிர்வாகிகளுடன் சசிகலா பேசிவருகிறாரே?! இது குறித்து உங்களின் கருத்து என்ன?

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க ஆட்சியைப் பிடிக்க, அ.தி.மு.க எதிர்க்கட்சியாக அமர்ந்திருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் யாரென்ற கேள்விக்கே முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், அ.தி.மு.க தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் மோதல் ஏற்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. இதனையடுத்து இதுவரை தேர்தல் அரசியலிலிருந்து விலகியே இருந்த சசிகலா, தற்போது மீண்டும் அ.தி.மு.க நிர்வாகிகளுடன் பேசிவருகிறார். அவருக்கு மீண்டும் கட்சியைக் கைப்பற்றும் திட்டம் இருப்பதாகவும் சிலர் பேசி வருகிறார்கள். சசிகலா பேசும் ஆடியோ ஒன்று சமீபத்தில் வைரலானதும் குறிப்பிடத்தக்கது.

இது குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு