Published:Updated:

`கூட்டணி முக்கியம்!' குடியுரிமை சட்டம் குறித்து எடப்பாடியின் பேச்சுக்கு மக்கள் கருத்து #VikatanPollResults

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி ( Photo: vikatan )

"குடியுரிமை சட்டத்தால் இந்திய மக்களுக்கு பாதிப்பில்லை!" எனத் தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதுகுறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

இந்திய குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து நாடு முழுக்க பல்வேறு முதல்வர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மம்தா பானர்ஜி, பினராயி விஜயன் ஆகியோர் போராட்டத்திலேயே ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தன்னுடைய கருத்தைப் பதிவுசெய்திருக்கிறார். அதில் பல்வேறு விஷயங்களைக் குறிப்பிட்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி, சிறுபான்மையினரின் அச்சம்குறித்து கூறுகையில், "குடியுரிமை சட்டத்தால் இந்திய மக்களுக்கு பாதிப்பில்லை!" எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள்? விகடன் தளம், ட்விட்டர் மற்றும் HELO பக்கங்களில் கிடைத்த முடிவுகள்.

குடியுரிமை சட்டத் திருத்த விவகாரம்... எடப்பாடி பழனிசாமி பேசியது சரியா? #VikatanPoll - என்ற தலைப்பில் வெளியான கட்டுரைக்கு கிடைத்த முடிவுகள்.

Edappadi Palaniswami #VikatanPollResults
Edappadi Palaniswami #VikatanPollResults

விகடனின் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்.

Edappadi Palaniswami #VikatanPollResults
Edappadi Palaniswami #VikatanPollResults

விகடனின் HELO பக்கத்தில் கிடைத்த முடிவுகள்.

Edappadi Palaniswami #VikatanPollResults
Edappadi Palaniswami #VikatanPollResults

விகடன் தளத்தில் எடுக்கப்பட்ட மற்றொரு சர்வேயின் முடிவுகள்.

Edappadi Palaniswami #VikatanPollResults
Edappadi Palaniswami #VikatanPollResults

மொத்தத்தில், 59.7% பேர், எடப்பாடி 'கூட்டணி நிர்பந்தம்' காரணமாகவே இதை சொல்லி இருப்பதாக கூறியிருக்கின்றனர். அதற்கு அடுத்தபடியாக 23.9% பேர் அவர் சொல்லியது 'உண்மைதான்' என்று தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு பதில்களும் பெற்ற விவரங்கள்.

Edappadi Palaniswami #VikatanPollResults
Edappadi Palaniswami #VikatanPollResults
இதுதவிர, எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாடு குறித்து நீங்கள் தெரிவிக்க விரும்பும் கருத்துகளை கீழே கமென்ட் செய்யலாம்.
அடுத்த கட்டுரைக்கு