Election bannerElection banner
Published:Updated:

நான் அரசியலுக்கு வந்ததால் 300 கோடி ரூபாய் நஷ்டம் என கமல்ஹாசன் கூறியிருக்கிறாரே?! #VikatanPoll

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

நான் அரசியலுக்கு வந்ததால் 300 கோடி ரூபாய் நஷ்டம் என கமல்ஹாசன் கூறியிருக்கிறாரே?! #VikatanPoll

நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி, முதன்முறையாகத் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறது. தி.மு.க, அ.தி.மு.க அணிகளுக்கு மாற்றாக மூன்றாவது அணியாகக் களமிறங்கும் ம.நீ.ம-வுக்காகத் தேர்தல் பரப்புரை செய்து வருகிறார் கமல்ஹாசன்.

நேற்று, மயிலாடுதுறை சின்ன கடைத் தெருவில் வேட்பாளர் ரவிச்சந்திரனுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்த கமல் பேசுகையில், "நான் அரசியலுக்கு வந்ததால் எனக்கு ஆண்டுக்கு 300 கோடி ரூபாய்வரை நஷ்டம்தான். ஆனால், அதை நான் பொருட்படுத்தவில்லை. மக்கள் நலத்துக்காகத்தான் நான் அரசியலுக்கு வந்துள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்...
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்...
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு