சசிகலா விடுதலை - தமிழகத்தில் என்ன மாற்றம் நிகழும்?! மக்கள் கருத்து இதுதான்! #VikatanPollResults

சசிகலா விடுதலை - தமிழகத்தில் என்ன மாற்றம் நிகழும்?! மக்கள் கருத்து இதுதான்! #VikatanPollResults
சொத்துக் குவிப்பு வழக்கில் கைதான சசிகலா, வரும் 27-ம் தேதி விடுதலையாகிறார். இந்த நிலையில், எதிர்பாரா விதமாக அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் அவருக்கு அதீத சர்க்கரை, ரத்த அழுத்தம், தைராய்டு முதலிய பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகக் கூறப்பட்டிருக்கிறது. அதேபோல் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதே சமயம், சசிகலா விடுதலை அடைவதால் தமிழக அரசியலில் என்னென்ன மாற்றங்கள் நிகழவிருக்கின்றன என்கிற விவாதம் சமூக வலைதளங்களில் துவங்கியுள்ளது. மீண்டும் அவர் அ.தி.மு.க-வைக் கைப்பற்ற நினைப்பார், ஈபிஎஸ் ஆட்சிக்கு ஆபத்து வரும் என்பது போன்ற கருத்துகள் இடம்பெற்றாலும், தற்போதைய உடல்நலன் காரணமாக இணக்கமாகச் சென்றுவிடுவார் என்பதுபோன்ற கருத்துகளையும் பார்க்க முடிகிறது.
சசிகலா விடுதலைக் குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...
விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்
அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த முடிவுகள்

இந்தக் கேள்விக்கு மக்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்...