Published:Updated:

Vikatan Poll Results: தி.மு.க அரசின் முதல் நடவடிக்கை... மக்கள் கருத்து இதுதான்!

ஸ்டாலின்
ஸ்டாலின்

Vikatan Poll Results: தி.மு.க அரசின் முதல் நடவடிக்கை... மக்கள் கருத்து இதுதான்!

மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க-வின் புதிய அரசு இன்று பொறுப்பேற்றுக் கொண்டது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும் அவரின் முதல் நடவடிக்கையாக எது இருக்கப்போகிறது என்ற விவாதம்தான் சமூக வலைதளங்களில் சில நாள்களாகத் தீவிரமாக பேசப்பட்டு வந்தது. கொரோனா தொற்று அதிகமாகிக் கொண்டிருக்கும் நிலையில், தேவையான ஆக்ஸிஜன் இருப்பு, தடுப்பூசிகளை ஸ்டாக் செய்தல் போன்ற நடவடிக்கைகள் தற்போது அவசியமாகின்றன. அதேபோல் முழு ஊரடங்கிற்கான வாய்ப்பும் இருக்கின்றன. இவற்றையெல்லாம் தாண்டி, பொருளாதார ரீதியாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதால், தி.மு.க தன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதுபோல, கொரோனா நிவாரணத் தொகையை அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் வழங்கவேண்டும் என்ற குரலும் ஒலித்தது.

சற்று முன்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்ட கோப்புகளின் விவரங்கள் இதோ...

`புகழுரை வேண்டாம்; உண்மைய நேருக்கு நேர் சந்திப்போம்' - ஆட்சியர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின்
இதனிடையே நேற்று, புதிய அரசின் முதல் நடவடிக்கையாக என்ன இருக்கலாம் என்ற கேள்வியை மக்களிடம் கேட்டிருந்தோம். அதற்கு அவர்கள் அளித்த பதில்கள் இவைதாம்....

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Stalin - DMK | Vikatan Poll
Stalin - DMK | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

Stalin - DMK | Vikatan Poll
Stalin - DMK | Vikatan Poll
இது குறித்த உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் சொல்லுங்கள்...
அடுத்த கட்டுரைக்கு