Published:Updated:

``கனிமொழிக்கு முதல்வர் பதவி" - சீமான் பேச்சு குறித்த கருத்துக்கணிப்பு முடிவுகள்!

சீமான் - ஸ்டாலின், கனிமொழி

``மகளிருக்கு முக்கியத்துவம்னா இரண்டரை ஆண்டுகளுக்கு கனிமொழிக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுங்களேன்." - சீமான்

``கனிமொழிக்கு முதல்வர் பதவி" - சீமான் பேச்சு குறித்த கருத்துக்கணிப்பு முடிவுகள்!

``மகளிருக்கு முக்கியத்துவம்னா இரண்டரை ஆண்டுகளுக்கு கனிமொழிக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுங்களேன்." - சீமான்

Published:Updated:
சீமான் - ஸ்டாலின், கனிமொழி

தி.மு.க அமைச்சரவையில் முதல்வர் ஸ்டாலினின் மகனும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ-வுமான உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டதை, அ.தி.மு.க., நாம் தமிழர், பா.ஜ.க போன்ற கட்சிகள் `வாரிசு அரசியல்' என விமர்சித்துவருகின்றன. அதோடு, ஒன்றரை ஆண்டு ஆட்சியை `மகளிர் உயர மாநிலம் உயரும்' என தி.மு.க விளம்பரம் செய்துவருவதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்துவருகின்றன.

சீமான் - ஸ்டாலின், கனிமொழி
சீமான் - ஸ்டாலின், கனிமொழி

அந்த வரிசையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ``மகளிருக்கு முக்கியத்துவம்னா இரண்டரை ஆண்டுகளுக்கு கனிமொழிக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுங்களேன்" என முதல்வர் ஸ்டாலினிடம் கேள்வியெழுப்பினார்.

விகடன் கருத்துக்கணிப்பு முடிவுகள்
விகடன் கருத்துக்கணிப்பு முடிவுகள்

அதைத் தொடர்ந்து சீமானின் இத்தகைய கருத்தை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை அறிய, விகடனின் வலைதளப் பக்கத்தில் வாசகர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில், `சீமானின் கருத்து நியாயமானதே', `ஸ்டாலினின் தனிப்பட்ட விருப்பம்', `எம்.எல்.ஏ-க்கள்தானே முடிவு செய்யணும்', `அர்த்தமற்றது' என நான்கு விருப்பத் தேர்வுகள் தரப்பட்டிருந்தன.

விகடன் கருத்துக்கணிப்பு முடிவுகள்
விகடன் கருத்துக்கணிப்பு முடிவுகள்

இந்த நிலையில், நமது கருத்துக்கணிப்பின் முடிவில் அதிகபட்சமாக 49 சதவிகிதம் பேர் சீமானின் கருத்து `நியாயமானதே' என்பதைத் தேர்வு செய்திருக்கின்றனர். அதற்கடுத்தபடியாக 34 சதவிகிதம் பேர் `அர்த்தமற்றது' என்பதைத் தேர்வு செய்திருக்கின்றனர். மேலும் 11 சதவிகிதம் பேர், `எம்.எல்.ஏ-க்கள்தானே முடிவு செய்யணும்' என்பதையும், 6 சதவிகிதம் பேர் `ஸ்டாலினின் தனிப்பட்ட விருப்பம்' என்பதையும் தேர்வுசெய்திருக்கின்றனர்.