Published:Updated:

`இந்தியாவின் வளர்ச்சியில் 43 ஆண்டுக்கால பாஜக-வின் பங்கு எப்படி இருந்தது?' - விகடன் கருத்துக்கணிப்பு

விகடன் கருத்துக்கணிப்பு - பாஜக

பா.ஜ.க தொடங்கப்பட்டு 43 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, இந்தியாவின் வளர்ச்சியில் பா.ஜ.க-வின் பங்கு குறித்து விகடன் வலைதளப் பக்கத்தில் வாசகர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

Published:Updated:

`இந்தியாவின் வளர்ச்சியில் 43 ஆண்டுக்கால பாஜக-வின் பங்கு எப்படி இருந்தது?' - விகடன் கருத்துக்கணிப்பு

பா.ஜ.க தொடங்கப்பட்டு 43 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, இந்தியாவின் வளர்ச்சியில் பா.ஜ.க-வின் பங்கு குறித்து விகடன் வலைதளப் பக்கத்தில் வாசகர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

விகடன் கருத்துக்கணிப்பு - பாஜக

மத்தியில் ஆளும் பா.ஜ.க 2014, 2019 லோக்சபா தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக 2024 தேர்தலில் ஆட்சியைத் தக்கவைக்க முனைப்பு காட்டிவரும் வேளையில், பா.ஜ.க-வின் 44-வது ஆண்டு நிறுவன நாள் விழா கடந்த வாரம் இந்தியா முழுக்க பா.ஜ.க அலுவலகங்களில் நடைபெற்றது. அதே சமயம், ``கிழக்கிலிருந்து மேற்கு வரையிலும், வடக்கிலிருந்து தெற்கு வரையிலும் பா.ஜ.க மட்டுமே PAN-INDIA PARTY'" என பிரதமர் மோடி கூறியிருந்தார்.

பாஜக - மோடி
பாஜக - மோடி

இந்த நிலையில் பா.ஜ.க தொடங்கப்பட்டு 43 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, இந்தியாவின் வளர்ச்சியில் பா.ஜ.க-வின் பங்கு குறித்து விகடன் வலைதளப் பக்கத்தில் வாசகர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

விகடன் கருத்துக்கணிப்பு
விகடன் கருத்துக்கணிப்பு

அதில், ``பா.ஜ.க தொடங்கப்பட்டு 43 ஆண்டுகள் ஆகின்றன. இத்தனை ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சியில் பா.ஜ.க-வின் பங்கு எப்படி இருந்தது?" என்று கேள்வி கேட்கப்பட்டது.

கேள்விக்கு, ``சிறப்பு, பெரிய பங்களிப்பில்லை, மோசம்" என மூன்று விருப்பங்களும் தரப்பட்டிருந்தன. இந்த நிலையில், கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, அதிகபட்சமாக `38 சதவிகிதம்' பேர், நாட்டின் வளர்ச்சியில் பா.ஜ.க-வின் பங்கு `மோசம்' எனத் தெரிவித்திருக்கின்றனர்.

விகடன் கருத்துக்கணிப்பு
விகடன் கருத்துக்கணிப்பு

மேலும், 34 சதவிகிதம் பேர் `சிறப்பு' என்றும், 28 சதவிகிதம் பேர் `பெரிய பங்களிப்பில்லை' என்றும் தெரிவித்திருக்கின்றனர்.

இன்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தனித் தீர்மானம் கொண்டுவந்தார்.

விகடன் கருத்துக்கணிப்பு
விகடன் கருத்துக்கணிப்பு

இந்த நிலையில், ஆளுநரை பதவி நீக்கம் செய்யும் `இம்பீச்மென்ட் (Impeachment)' அதிகாரம் மாநில சட்டமன்றத்துக்கு கொடுக்கப்பட வேண்டுமா? என விகடன் வலைதளப் பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடைபெற்றுவருகிறது. இதில் கலந்துகொள்ள பின்வரும் லிங்கை கிளிக் செய்யவும்... https://www.vikatan.com/