Published:Updated:

`அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசல் விழுந்தால், லாபம் யாருக்கு?' | விகடன் கருத்துக்கணிப்பு முடிவு

விகடன் கருத்துக்கணிப்பு

அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி மோதல்போக்கு தொடர்பாக விகடன் வலைதளப் பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

Published:Updated:

`அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசல் விழுந்தால், லாபம் யாருக்கு?' | விகடன் கருத்துக்கணிப்பு முடிவு

அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி மோதல்போக்கு தொடர்பாக விகடன் வலைதளப் பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

விகடன் கருத்துக்கணிப்பு

2024 லோக் சபா தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் பிளவு ஏற்படப் போகிறது என்பதுபோல அமைந்திருக்கின்றன, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையின் அண்மைக்கால கருத்துகள்.

எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை
எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை

இரண்டு நாள்களுக்கு முன்புகூட, 2024-ல் அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்தால் பா.ஜ.க வளராது, பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் எனக் கூறியதாகச் செய்திகள் பரவின. பா.ஜ.க-வில் இருப்பவர்களேகூட, `அது அவரின் தனிப்பட்ட கருத்து’ எனக் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி மோதல்போக்கு தொடர்பாக விகடன் வலைதளப் பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

விகடன் கருத்துக்கணிப்பு
விகடன் கருத்துக்கணிப்பு

அதில், `அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் விரிசல் விழுந்தால், லாபம் யாருக்கு?' எனக் கேள்வி கேட்கப்பட்டு, அதற்கு `பா.ஜ.க., அ.தி.மு.க., கருத்து இல்லை' என மூன்று விருப்பங்கள் கொடுக்கப்பட்டிருந்தன.

விகடன் கருத்துக்கணிப்பு
விகடன் கருத்துக்கணிப்பு

இந்த நிலையில், கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, அதிகபட்சமாக 74 சதவிகிதம் பேர் `அ.தி.மு.க'-வுக்கு லாபம் என்று தெரிவித்திருக்கின்றனர். அதற்கடுத்தபடியாக, 19 சதவிகிதம் பேர் `பா.ஜ.க'-வுக்கு லாபம் என்றும், 7 சதவிகிதம் பேர் `கருத்து இல்லை' என்றும் தெரிவித்திருக்கின்றனர்.