Published:Updated:

`புதிய நாடாளுமன்றத்தை யார் திறந்துவைக்கலாம்?!' | விகடன் கருத்துக்கணிப்பு முடிவுகள்

விகடன் கருத்துக்கணிப்பு

புதிய நாடாளுமன்றத் திறப்பு விழா விவாதப்பொருளானதையடுத்து, விகடன் வலைதளப் பக்கத்தில் இது தொடர்பாக வாசகர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

தேசிய தலைநகர் டெல்லியில் சுமார் 860 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டிருக்கும் புதிய நாடாளுமன்றத்தை சாவர்க்கர் பிறந்தநாளான மே 28 அன்று பிரதமர் மோடி திறந்துவைக்கிறார். திறப்பு விழா அன்று புதிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் தமிழகத்தின் செங்கோல் வைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருக்கிறார். அதுபோல், திறப்பு விழாவை முன்னிட்டு புதிய 75 ரூபாய் நாணயம் வெளியிடப்படவிருப்பதாக மத்திய நிதியமைச்சகம் நேற்று அறிக்கை வெளியிட்டது.

புதிய நாடாளுமன்றம்
புதிய நாடாளுமன்றம்

இவ்வாறு திறப்பு விழாவுக்கான வேலைகளை மத்திய அரசு ஒருபக்கம் செய்துகொண்டிருக்க, `புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் திறக்கக் கூடாது, குடியரசுத் தலைவர்தான் திறக்க வேண்டும்' என எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன.

ஆனால், மத்திய அரசு தரப்பிலிருந்து இதற்கு எந்த பதிலும் வராததால் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தி.மு.க உட்பட 19 கட்சிகள் திறப்பு விழாவைப் புறக்கணிப்பதாகத் தெரிவித்தன. இப்படியாக புதிய நாடாளுமன்றத் திறப்பு விழா விவாதப்பொருளானதையடுத்து, விகடன் வலைதளப் பக்கத்தில் இது தொடர்பாக வாசகர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

புதிய நாடாளுமன்றம் - விகடன் கருத்துக்கணிப்பு
புதிய நாடாளுமன்றம் - விகடன் கருத்துக்கணிப்பு

அதில், `புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை யார் திறந்துவைப்பது என்பது விவாதப்பொருளாகியிருக்கிறது. யார் திறந்துவைக்க வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்' என்று கேள்வி கொடுக்கப்பட்டு, `ஜனாதிபதி திரௌபதி முர்மு', `பிரதமர் மோடி', `மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா' என மூன்று விருப்பங்கள் தரப்பட்டன.

புதிய நாடாளுமன்றம் - விகடன் கருத்துக்கணிப்பு
புதிய நாடாளுமன்றம் - விகடன் கருத்துக்கணிப்பு

இந்த நிலையில் கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, அதிகபட்சமாக `70 சதவிகிதம் பேர் புதிய நாடாளுமன்றத்தை ஜனாதிபதி திரௌபதி முர்மு திறந்துவைக்க வேண்டும்' என்று தெரிவித்திருக்கின்றனர். அதற்கடுத்தபடியாக, `24 சதவிகிதம் பேர் பிரதமர்' என்றும், `6 சதவிகிதம் பேர் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா' என்றும் தெரிவித்திருக்கின்றனர்.