Published:Updated:

தமிழ்நாடு நாள்: `நவம்பர் 1-ம் தேதியா... ஜூலை 18-ம் தேதியா?!'- விகடன் 'உங்கள் கருத்து' முடிவு என்ன?

#உங்கள் கருத்து பகுதியில் வாசகர்களிடம், 'வலுக்கும்  விவாதம்... தமிழ்நாடு நாள் என்றைக்குக் கொண்டாடப்பட வேண்டும்?' என்ற கேள்வியை முன்வைத்திருந்தோம்.

` `தமிழ்நாடு நாள்' இனி ஜூலை 18-ம் தேதிதான் கொண்டாடப்படும். அதற்கான அரசாணையும் விரைவில் வெளியிடப்படும்’ என்ற தமிழக முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பு, தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 1956-ல் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு நாளாக 2019 முதல் மாநிலத்தில் கொண்டாடப்பட்டுவருகிறது. இந்த நிலையில், 1967-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தலைமையிலான அப்போதைய திமுக அரசு சட்டமன்றத்தில் சென்னை மாகாணத்துக்கு 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டி தீர்மானம் நிறைவேற்றிய ஜூலை 18-ம் தேதியை இனி 'தமிழ்நாடு நாளாக'க் கொண்டாடப்போவதாக தமிழக அரசு திடீர் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இது தொடர்பாக, கடந்த சனிக்கிழமை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருந்த அறிக்கையில், ``2019-ம் ஆண்டு முதல் முந்தைய அதிமுக அரசால் நவம்பர் 1-ம் தேதி 'தமிழ்நாடு நாளாக'க் கொண்டாடப்பட்டுவரும் நிலையில், அரசியல் கட்சியினர், தமிழ் உணர்வாளர்கள், தமிழ்க் கூட்டமைப்பினர், தமிழ் அறிஞர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் ஜூலை 18-ம் தேதியைத்தான் தமிழ்நாடு நாளாகக் கொண்டாட வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைத்தனர். அதனடிப்படையில், மாநிலத்தில் இனி ஜூலை 18-ம் தேதி தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும்'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு ஆதரவாகவும் எதிராகவும் அரசியல் கட்சியினர், தமிழ் உணர்வாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.

`தமிழ்நாடு நாள்' தொடர்பாகக் கருத்து தெரிவித்திருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர், `ஒரு குழந்தை என்றைக்குப் பிறக்கின்றதோ அந்த நாளைத்தான் பிறந்தநாளாகக் கொண்டாட வேண்டுமே தவிர, கர்ப்பப்பையில்‌ குழந்தை உருவான நாளை குழந்தையின் பிறந்தநாளாக எடுத்துக்‌கொள்ள முடியாது’ என்றும், `இந்த அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும்’ என்றும் அரசை வலியுறுத்தியிருக்கின்றனர்.

ராமதாஸ் - ஓ.பி.எஸ்
ராமதாஸ் - ஓ.பி.எஸ்

இந்த நிலையில், தமிழ் உணர்வாளர்கள், தமிழ்க் கூட்டமைப்பினர், அரசியல் ஆர்வலர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் முரண்பட்டு நிற்கும் இந்த `தமிழ்நாடு நாள்' விவகாரம் தொடர்பாக நாம் விகடனின் ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் `#உங்கள் கருத்து' பகுதியில் வாசகர்களிடம், 'வலுக்கும் விவாதம்... தமிழ்நாடு நாள் என்றைக்குக் கொண்டாடப்பட வேண்டும்?' என்ற தலைப்பில் கேள்வியை முன்வைத்திருந்தோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த கேள்விக்கு `நவம்பர் 1-ம் தேதி’, `ஜூலை 18-ம் தேதி’, `ஜனவரி 14-ம் தேதி’, `கருத்து இல்லை’ என நான்கு சாய்ஸ்களையும் அளித்திருந்தோம். நேற்றைய தினம் பதிவிடப்பட்ட விகடனின் 'உங்கள் கருத்து'க்கு இணையவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஏராளமானோர் `தமிழ்நாடு நாள்' தொடர்பான தங்களின் கருத்துகளைப் பதிவிட்டிருக்கின்றனர். அதன் முடிவுகள் கீழே...

விகடன் உங்கள் கருத்து
விகடன் உங்கள் கருத்து

விகடனின் ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாகப் பதிவிடப்பட்ட கேள்வியில், ஜூலை 18-ம் தேதி அன்றுதான் கொண்டாட வேண்டும் என்று 42.5 சதவிகித வாசகர்களும், நவம்பர் 1-ம் தேதியைத்தான் கொண்டாட வேண்டும் என்று 48 சதவிகித வாசகர்களும், ஜனவரி 14-ம் தேதி அன்றுதான் கொண்டாட வேண்டும் என்று 2.9 சதவிகித வாசகர்களும், கருத்து இல்லை என்று 6.6 சதவிகித வாசகர்களும் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டிருக்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு