Published:Updated:

எடப்பாடி வசமான அதிமுக; ஓபிஎஸ்-ஸின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும்?- விகடன் கருத்துக்கணிப்பு முடிவுகள்

விகடன் கருத்துக்கணிப்பு

உச்ச நீதிமன்றத் தீர்ப்பையடுத்து எடப்பாடி வசம் வந்திருக்கிறது அதிமுக. இனி ஓ.பி.எஸ்-ஸின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும்?

Published:Updated:

எடப்பாடி வசமான அதிமுக; ஓபிஎஸ்-ஸின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும்?- விகடன் கருத்துக்கணிப்பு முடிவுகள்

உச்ச நீதிமன்றத் தீர்ப்பையடுத்து எடப்பாடி வசம் வந்திருக்கிறது அதிமுக. இனி ஓ.பி.எஸ்-ஸின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும்?

விகடன் கருத்துக்கணிப்பு

அ.தி.மு.க ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக, சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு செல்லும் என்றும், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து அ.தி.மு.க., எடப்பாடி வசமானது.

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

இருப்பினும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக ஓ.பி.எஸ் தரப்பு கூறிவருகிறது. இதற்கிடையில், மக்களிடம் நீதி கேட்கப்போவதாகவும், அதற்கான வேலைகளைக் கூடிய விரைவில் தொடங்கப்போவதாகவும் ஓ.பி.எஸ் நேற்று தெரிவித்தார்.

இத்தகைய நெருக்கடியான சூழலில், ஓ.பி.எஸ்-ஸின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து விகடன் வலைதளப் பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

விகடன் கருத்துக்கணிப்பு
விகடன் கருத்துக்கணிப்பு

அதில், `உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து எடப்பாடி வசம் வந்திருக்கிறது அ.தி.மு.க. இனி ஓ.பி.எஸ்-ஸின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும்?' என்ற கேள்வி கொடுக்கப்பட்டு, `புதிய கட்சி தொடங்குவார்', `சசிகலா டி.டி.வி-யோடு இணைவார்', `பா.ஜ.க ஆதரவாளராகச் செயல்படுவார்' என மூன்று விருப்பங்கள் கொடுக்கப்பட்டிருந்தன.

விகடன் கருத்துக்கணிப்பு
விகடன் கருத்துக்கணிப்பு

இந்த நிலையில் கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி அதிகபட்சமாக 49 சதவிகிதம் பேர், ஓ.பி.எஸ் `பா.ஜ.க ஆதரவாளராகச் செயல்படுவார்' என்பதைத் தேர்வுசெய்திருக்கின்றனர். அதற்கடுத்தபடியாக 43 சதவிகிதம் பேர், `சசிகலா, டி.டி.வி-யோடு இணைவார்' என்றும், 8 சதவிகிதம் பேர்`புதிய கட்சி தொடங்குவார்' என்றும் தெரிவித்திருக்கின்றனர்.

விகடன் கருத்துக்கணிப்பு
விகடன் கருத்துக்கணிப்பு

இதேபோல் விகடன் வலைதளப்பக்கத்தில் தற்போது நடந்துவரும் கருத்துக்கணிப்பில், ``மதத்தின் அடிப்படையிலோ, மாநிலத்தின் அடிப்படையிலோ மக்களிடம் பா.ஜ.க பாகுபாடு காட்டுவதில்லை என்று மோடி பேசியிருப்பதை ஏற்கிறீர்களா?" என்ற கேள்விக்கு பதிலளிக்க, கீழ்க்காணும் லிங்க்கை க்ளிக் செய்யவும்.

https://www.vikatan.com/