Published:Updated:

அம்பேத்கர், பெரியார் பெயர்களைத் தவிர்த்த ஆளுநர் ஆர்.என்.ரவி - விகடன் கருத்துக்கணிப்பு முடிவுகள்!

விகடன் கருத்துக்கணிப்பு

அம்பேத்கர், பெரியார், காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகிய தலைவர்களின் பெயர்களைத் தவிர்த்துவிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி தன் உரையை வாசித்தது குறித்து, விகடன் வலைதளப் பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று முன்தினம் சட்டமன்றத்தில், அரசு தயாரித்துக் கொடுத்த உரையில் சில வாசகங்கள், முக்கியத் தலைவர்களின் பெயர்களை வாசிக்காமல் தவிர்த்துவிட்டு, அவையிலிருந்து பாதியிலேயே கிளம்பினார். இந்த விவகாரம், அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.

சட்டமன்றத்திலிருந்து பாதியில் வெளியேறிய ஆளுநர் ஆர்.என்.ரவி
சட்டமன்றத்திலிருந்து பாதியில் வெளியேறிய ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆளுநரின் செயல் தொடர்பாக அரசியல் கட்சியினர் பலரும் தங்கள் கருத்துகளைக் கூறிவருகின்றனர். இந்த நிலையில், அரசு தயாரித்த உரையில் ஆர்.என்.ரவி சிலவற்றைத் தவிர்த்தது குறித்து விகடன் வலைதளப் பக்கத்தில் வாசகர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தினோம்.

விகடன் கருத்துக்கணிப்பு
விகடன் கருத்துக்கணிப்பு

அதில், அரசு தயாரித்த ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த அம்பேத்கர், பெரியார், காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகிய தலைவர்களின் பெயர்களைத் தவிர்த்துவிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி வாசித்தது... `விதிகளை மீறியது'... `ஆளுநருக்கு உரிமை உண்டு'... `அரசுடனான மோதலின் வெளிப்பாடு' என மூன்று விருப்பத் தேர்வுகளைக் கொடுத்திருந்தோம். வாசகர்கள் பெருமளவில் கலந்துகொண்டு, தங்கள் கருத்துகளை எங்களுடன் பகிர்ந்துகொண்டனர்.

விகடன் கருத்துக்கணிப்பு முடிவுகள்
விகடன் கருத்துக்கணிப்பு முடிவுகள்

இந்தக் கருத்துக்கணிப்பின் முடிவில், 53 சதவிகிதம் பேர் `ஆளுநர் செய்தது விதிகளை மீறியது' என்பதைத் தேர்வுசெய்திருக்கின்றனர். அதைத் தவிர்த்து, 25 சதவிகிதம் பேர் `அரசுடனான மோதலின் வெளிப்பாடு' என்பதையும், 22 சதவிகிதம் பேர் `ஆளுநருக்கு உரிமை உண்டு' என்பதையும் தேர்வுசெய்திருக்கின்றனர்.