Published:Updated:

விகடன் செய்தி எதிரொலி: தற்காலிகமாக மூடப்பட்ட திருவல்லிக்கேணி டாஸ்மாக்... சுத்தமானது பஸ்டாப்!

தற்காலிகமாக மூடப்பட்ட திருவல்லிக்கேணி டாஸ்மாக்!

``திறந்தவெளி டாஸ்மாக் பாரான திருவல்லிக்கேணி பஸ் ஸ்டாப்! - நடவடிக்கை எடுப்பாரா எம்.எல்.ஏ உதயநிதி?" என்ற தலைப்பில் நேற்று (6-12-2022) விகடன் இணையதளத்தில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். இந்தநிலையில் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை மூடப்பட்டிருக்கிறது.

விகடன் செய்தி எதிரொலி: தற்காலிகமாக மூடப்பட்ட திருவல்லிக்கேணி டாஸ்மாக்... சுத்தமானது பஸ்டாப்!

``திறந்தவெளி டாஸ்மாக் பாரான திருவல்லிக்கேணி பஸ் ஸ்டாப்! - நடவடிக்கை எடுப்பாரா எம்.எல்.ஏ உதயநிதி?" என்ற தலைப்பில் நேற்று (6-12-2022) விகடன் இணையதளத்தில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். இந்தநிலையில் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை மூடப்பட்டிருக்கிறது.

Published:Updated:
தற்காலிகமாக மூடப்பட்ட திருவல்லிக்கேணி டாஸ்மாக்!

``திறந்தவெளி டாஸ்மாக் பாரான திருவல்லிக்கேணி பஸ் ஸ்டாப்! - நடவடிக்கை எடுப்பாரா எம்.எல்.ஏ உதயநிதி?" என்ற தலைப்பில் நேற்று (6-12-2022) விகடன் இணையதளத்தில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதில், தி.மு.க இளைஞரணி தலைவரும், எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலினின் சொந்தத் தொகுதியான சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியின் முக்கியச் சாலையில் உள்ள `கெல்லட் ஸ்கூல்' பேருந்து நிலையத்தில் நாள்தோறும் மதுப்பிரியர்களின் அட்டகாசங்கள் தலைதூக்கி வருவதை குறிப்பிட்டிருந்தோம். மேலும், பார் வசதியில்லாமல் பேருந்து நிலையம் அருகிலேயே இயங்கிவரும் டாஸ்மாக் (கடை எண்: 812) மதுபானக் கடையிலிருந்து மதுபாட்டில்களை வாங்கிவந்து, பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சட்ட விரோதமாக பேருந்து நிலைய இருக்கைகளில் சாவகசமாக அமர்ந்துகொண்டு, கும்பலாக மது அருந்துவதாகவும் குறிப்பிட்டிருந்தோம்.

பேருந்து நிலையத்தில் மது அருந்தும் காட்சி
பேருந்து நிலையத்தில் மது அருந்தும் காட்சி

பொதுவெளியில் அதுவும் பேருந்து நிலையத்தில் இப்படி மது அருந்தும்போது ஒருவொருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வது, ஆபாச வார்த்தைகளால் திட்டிக்கொள்வது, பலர் அங்கேயே வாந்தி எடுப்பது, அதிலேயே அரைநிர்வாணமாக படுத்துறங்குவது, உச்சபட்சமாக மதுபோதை தலைக்கேறியவர்கள் `மக்கள் பயணிக்கும் பொது இடம்' என்றுகூட பாராமல் சிறுநீர் கழிப்பது போன்ற அருவருக்கத்தக்க செயல்பாடுகளால் குடியிருப்பு வாசிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்துக்குள்ளாவதாகத் தெரிவித்திருந்தோம்.

இதுமட்டுமல்லாமல், `நாள்தோறும் நடக்கும் இந்த அட்டூழியங்கள் குறித்து பலமுறை புகாரளித்தும் சம்மந்தப்பட்ட D3 காவல்துறை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை' என்ற பொதுமக்களின் குற்றச்சாட்டையும் கட்டுரையில் பதிவு செய்திருந்தோம். இறுதியாக, `பல ஆண்டுகளாக திருவல்லிக்கேணி மக்கள் சந்தித்தும், சகித்தும் வரும் இந்த டாஸ்மாக் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும்' என்ற மக்களின் குரலை திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலினுக்கு கோரிக்கையாக வைத்து கட்டுரையை நிறைவு செய்திருந்தோம்.

மூடப்பட்ட டாஸ்மாக் கடை
மூடப்பட்ட டாஸ்மாக் கடை

இந்த செய்தி சமூக வலைதளங்களில் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது கட்டுரை வெளியான மறுநாளே சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை மூடப்பட்டிருக்கிறது.

மூடப்பட்ட டாஸ்மாக்! சுத்தமான பஸ்டாப்!
மூடப்பட்ட டாஸ்மாக்! சுத்தமான பஸ்டாப்!

திருவல்லிக்கேணி முக்கியச் சாலையிலுள்ள கடை எண்: 812-ஐக் கொண்ட அந்த டாஸ்மாக் கடையைத் தற்காலிகமாக மூட உத்தவிடப்பட்டிருக்கிறது. மேலும், அதன் அருகில் அலங்கோலமாகக் கிடந்த `கெல்லட் ஸ்கூல்' பேருந்துநிலையத்தை சுத்தம் செய்து, அங்கிருந்த காலி மதுபாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள், குப்பைகள் அனைத்தையும் தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு அப்புறப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த நடவடிக்கையை திருவல்லிக்கேணி பொதுமக்கள், பெண்கள், கடை வியாபாரிகள் உள்ளிட்ட அனைவரும் முழுமனதுடன் வரவேற்றிருக்கின்றனர். ``டாஸ்மாக் கடையை தற்காலிகமாக மூடிவிட்டால் மட்டும் போதாது; நிரந்தரமாக மூட வழிவகை செய்யவேண்டும்!" என மக்கள் ஒருசேர கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

பஸ்டாப்பை சுத்தம் செய்யும் தூய்மைப் பணியாளர்
பஸ்டாப்பை சுத்தம் செய்யும் தூய்மைப் பணியாளர்

அதேசமயம், இந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டதால் ஏமாற்றம் அடைந்த மதுப் பிரியர்கள் அருகில் ஜாம்பஜாரில் உள்ள டாஸ்மாக் கடை (கடை எண்: 841) நோக்கி படையெடுத்திருக்கின்றனர். பார் வசதி இல்லாத அந்த ஜாம்பஜார் டாஸ்மாக்கிலும் பொது இடங்களில் சட்டவிரோதமாக நின்றுகொண்டு மது அருந்தி வருகின்றனர்.

ஜாம்பஜார் டாஸ்மாக் கடை எண்: 841
ஜாம்பஜார் டாஸ்மாக் கடை எண்: 841

இதனால், அங்குள்ள பொதுமக்கள் பாதிக்கப்படுவதோடு, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சட்ட ஒழுங்கும் சீர்கெட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடை அமைந்திருக்கும் பகுதியும் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலினின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிக்குட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.