Published:Updated:

செங்கல் சூளையில் கொத்தடிமைகளாகத் துன்புறுத்தப்பட்ட 9 குடும்பங்கள்; விழுப்புரத்தில் அதிர்ச்சி!

மீட்கப்பட்ட மக்கள்

``சூளையில் வேலை செய்ய பிடிக்காமல் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்யப் போவதாகக் கூறிவிட்டு பேருந்தில் ஏறுவதற்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த சூளையின் உரிமையாளர், `அப்படியெல்லாம் போக முடியாது. ஒழுங்கா வந்து வேலையைப் பாரு' என்று கூறி வழிமறித்து அழைத்துச் சென்றுள்ளார்."

செங்கல் சூளையில் கொத்தடிமைகளாகத் துன்புறுத்தப்பட்ட 9 குடும்பங்கள்; விழுப்புரத்தில் அதிர்ச்சி!

``சூளையில் வேலை செய்ய பிடிக்காமல் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்யப் போவதாகக் கூறிவிட்டு பேருந்தில் ஏறுவதற்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த சூளையின் உரிமையாளர், `அப்படியெல்லாம் போக முடியாது. ஒழுங்கா வந்து வேலையைப் பாரு' என்று கூறி வழிமறித்து அழைத்துச் சென்றுள்ளார்."

Published:Updated:
மீட்கப்பட்ட மக்கள்

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அடுத்த கெட்டியங்குப்பத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் சுரேஷ். சின்னபாபு சமுத்திரத்தில் செங்கல் சூளை வைத்துள்ளார். இந்த செங்கல் சூளையில், தங்களைக் கொத்தடிமைகளாக வைத்து நடத்தி வருவதாகக் களத்தூரைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் சுரேஷ் என்பவர், விழுப்புரம் மாவட்ட காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார். இந்த புகார், மாவட்ட ஆட்சியர் மோகனுக்கு சென்றுள்ளது. அவருடைய அறிவுறுத்தலின் பேரில் நேற்று (02.02.2022) மாலை விழுப்புரம் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அரிதாஸ் தலைமையிலான வருவாய்த் துறையினர், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், காவல்துறையினர் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மீட்கப்பட்ட மக்கள்
விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மீட்கப்பட்ட மக்கள்

அப்போது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 26 பேர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேர் என மொத்தம் 9 குடும்பங்களைச் சேர்ந்த 36 பேர் கொத்தடிமைகளாக இருந்தது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து அம்மக்களை மீட்ட அதிகாரிகள், விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு அழைத்து வந்து, விடுவிக்கப்பட்டதற்கான சான்றிதழ் வழங்கி அவர்களது இல்லங்களுக்கு பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். ``தங்களைக் கொத்தடிமைகளாக வைத்துள்ளதாக புகார் கொடுத்திருந்த களத்தூர் சுரேஷின் குடும்பத்தினர் அந்த செங்கல் சூளையில் சுமார் 3 வருடங்களாக வேலை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. சீஸன் நேரங்களில்தான் இந்த வேலையைச் செய்வார்களாம். இதே போல, சமீப வருடங்களாக 8 குடும்பத்தினர் அங்கு வேலைசெய்து வந்துள்ளனர். வேலைக்கு வருவதற்கு முன்னதாக சூளை உரிமையாளரிடம் முன்பணமாக ஒரு தொகையை வாங்கிக்கொண்டு அந்தத் தொகையை கழிப்பதற்கு செங்கல் சூளையில் குறிப்பிட்ட காலம் வேலை செய்வார்களாம். புகார் அளித்த சுரேஷின் குடும்ப உறுப்பினர் ஒருவர், சூளையில் வேலை செய்ய பிடிக்காமல் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்யப்போவதாகக் கூறிவிட்டு பேருந்தில் ஏறுவதற்கு வந்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விழுப்புரம்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விழுப்புரம்.
தே.சிலம்பரசன்

அப்போது அங்கு வந்த சூளையின் உரிமையாளர், `அப்படியெல்லாம் போக முடியாது. ஒழுங்கா வந்து வேலையைப் பாரு' என்று கூறி வழிமறித்து அழைத்துச் சென்றுள்ளார். அதன் தொடர்ச்சியாகவே, செங்கல் சூளை வேலை செய்வதற்கு தங்களை கொத்தடிமைகளாக வைத்து நடத்தி வருவதாகவும், மிகவும் துன்புறுத்துவதாகவும் காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார் அந்த நபர். அதன் பின்னர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நேரில் சென்று விசாரித்தபோது, 9 குடும்பத்தினரை கொத்தடிமைகளாக வைத்திருந்தது தெரியவந்தது. உடனே அம்மக்களை மீட்டு அழைத்து வந்தோம். விசாரணை முடிவின் அடிப்படையில், சின்னபாபு சமுத்திர வி.ஏ.ஓ மூலம் செங்கல் சூளை உரிமையாளர் மீது காவல்துறையில் புகார் கொடுப்பதற்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. அம்மக்கள் பாதுகாப்பாக வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்" என்றனர்.