Published:Updated:

``வெறுப்பு பேச்சைத் தடுக்க சட்டம் இயற்றுங்கள்" - மத்திய சட்ட அமைச்சரிடம் எம்.பி ரவிக்குமார் மனு

எம்.பி ரவிக்குமார் மனு

வெறுப்புப் பேச்சைத் தடுப்பதற்கு சட்டம் இயற்றக்கோரி, மத்திய சட்ட அமைச்சரிடம் விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் நேரில் மனு அளித்தார்.

``வெறுப்பு பேச்சைத் தடுக்க சட்டம் இயற்றுங்கள்" - மத்திய சட்ட அமைச்சரிடம் எம்.பி ரவிக்குமார் மனு

வெறுப்புப் பேச்சைத் தடுப்பதற்கு சட்டம் இயற்றக்கோரி, மத்திய சட்ட அமைச்சரிடம் விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் நேரில் மனு அளித்தார்.

Published:Updated:
எம்.பி ரவிக்குமார் மனு

விழுப்புரம் சட்டக் கல்லூரியில், நீதித்துறை சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான சட்டப்பணிகள் ஆணைக்குழு சிறப்பு முகாமை மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரஜிஜு நேற்று மதியம் நேரில் தொடங்கிவைக்க வந்திருந்தார். அவரை வரவேற்ற விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார், அவரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அந்தக் கோரிக்கை மனுவில் ரவிக்குமார் குறிப்பிட்டிருப்பதாவது, `வெறுப்புப் பேச்சு வழக்கை உச்ச நீதிமன்றம் தற்போது விசாரித்துவருகிறது. "இது ஒரு முழுமையான அச்சுறுத்தல். வெறுப்புப் பேச்சின் தீவிரத்தன்மை குறித்து நாம் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். நாம் ஒரு ஃபிராங்கென்ஸ்டைனை (அரக்கனை) உருவாக்கி அது நம்மை விழுங்குவதற்கு விட்டுவிடக் கூடாது”  என அந்த விசாரணையின்போது உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. 

அப்போது ஆஜரான அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் (ஏஎஸ்ஜி) நடராஜ், ’வெறுப்புக் குற்றங்கள் தொடர்பாக விரிவான சட்டம் ஒன்றை இயற்றுவது தொடர்பாக மத்திய அரசு பரிசீலித்து வருகிறது' என நீதிமன்றத்தில் தெரிவித்தார். வெறுப்புப் பேச்சுகளைக் கட்டுப்படுத்த சட்டம் இயற்றுமாறு 07.01.2021 அன்றே நான் மத்திய சட்ட அமைச்சகத்துக்குக் கடிதம் கொடுத்திருக்கிறேன். அதேபோல, உங்களுடைய பரிசீலனைக்காக சில அம்சங்களைத் தற்போது முன்வைக்கிறேன். ICCPR-ல் கையொப்பமிட்ட நாடுகளில் நம் நாடும் ஒன்று. ICCPR-ன் 20-வது பிரிவின்படி, வெறுப்புக் குற்றங்களைத் தடுக்க ஒரு சட்டத்தை இயற்றுவது கட்டாயமாகும். 

இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையின் பேரில், வெறுப்புப் பேச்சுகளைத் தடுக்க சட்ட ஆணையம் ஒரு மசோதாவை (குற்றவியல் சட்டம் (திருத்தம்) மசோதா 2017) உருவாக்கி, மார்ச் 2017-ல் அதன் அறிக்கை எண்:267 உடன் மத்திய அரசிடம் சமர்ப்பித்திருக்கிறது. 

மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரஜிஜு
மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரஜிஜு
தே.சிலம்பரசன்

அமெரிக்கா, கனடா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் இயற்றப்பட்ட பல்வேறு சட்டங்களைக் கவனமாக மதிப்பாய்வு செய்த பிறகு, வெறுப்புப் பேச்சுகளைத் தடுக்க சட்ட ஆணையம் இந்திய தண்டனைச் சட்டத்தில் புதிய பிரிவு 153C (வெறுப்பைத் தூண்டுவதைத் தடைசெய்தல்) , பிரிவு 505A (சில சந்தர்ப்பங்களில் பயம், எச்சரிக்கை அல்லது வன்முறையைத் தூண்டுதல்) ஆகியவற்றைச் சேர்க்க பரிந்துரைத்திருக்கிறது. எனவே, குற்றவியல் சட்டம் (திருத்தம்) மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடப்புக் கூட்டத்தொடரிலேயே அறிமுகம் செய்து அதை உடனடியாக சட்டம் ஆக்குவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என குறிப்பிட்டிருக்கிறார்.